Close
Breaking News
Home » பிரதான செய்திகள்

பிரதான செய்திகள்

நல்லாட்சி அரசின் செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்புக்கு பலத்த அச்சுறுத்தல் : மஹிந்த

Mahinda_singhefm_news

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்புக்கு பலத்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கிய அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளை வர்த்தமானி மூலம் நீக்கியமை இதற்கு சிறந்த உதாரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் காணப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் தற்பொழுது மக்களுக்கு மறந்துபோயுள்ளமை கவலையளிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். ஹக்மனை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த செய்தி / ... Read More »

வரவு செலவுத் திட்ட தெரிவுக்குழுவின் தலைவராக மஹிந்த சமரசிங்க நியமனம்

Mahinda-Samarasinghe

வரவு செலவுத் திட்டம் குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தெரிவுக்குழுவில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்ட தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ம் திகதி அதன் தலைவர் மஹிந்த சமரசிங்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த அறிக்கை மற்றும் 17 அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு குறித்த விவாதங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம் 18ம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது. Read More »

பாவனையாளர்களை மட்டுப்படுத்தவே வாகன வரி – நிதி அமைச்சர்

ravi

நாட்டில் வாகனப் பாவனையாளர்களை மட்டுப்படுத்துவதற்கே தீர்வை வரியை அதிகரிக்கச் செய்தோம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் பாதைகளுக்குப் பொருத்தமான வாகன எண்ணிக்கை காணப்படல் வேண்டும். இலங்கைக்குள் மாத்திரம் தற்பொழுது 69 லட்சம் வாகனங்கள் காணப்படுகின்றன. இதில் அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்கள் 68 ஆயிரம் ஆகும். இந்த நாட்டின் தற்போதைய தேவை வாகனங்களை விலைகொடுத்து வாங்குவதல்ல. நாட்டின் பொது மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் வாகன இறக்குமதிக்கான ... Read More »

எந்த அடிப்படையில் புலி அமைப்புக்களின் தடை நீக்கம்? படை முகாம்களில் ஐநா குழு விசாரணை?- வீரவன்ச கேள்வி

wimal interview 2.jpg

எந்த அடிப்படையில் புலி அமைப்புகளின் தடைகள் நீக்கப்பட்டன என அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் காணாமல்போனோர் தொடர்பில் ஆராயும் குழுவினர் குற்றப் புலனாய்வு பிரிவினருடன் திருகோணமலை கடற்படை முகாம் வளாகத்தினுள் சென்றுள்ளனர். அங்கு சென்று முகாம் ... Read More »

மஹிந்த தரப்பின் நால்வர் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தீர்மானம்

Maithri_mahinda

ahiமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு விசுவாசமாக செயற்பட்டு வந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு சார்பாக வாக்களிக்க உள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் திர்மானித்துள்ளனர். இதில் ஒருவர் மஹிந்தவுடன் எழுவோம் அமைப்பின் முன்னணி செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் கட்சியில் இணைந்து கொள்வது குறித்து இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக, அபிவிருத்தித் தந்திரோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இந்த ... Read More »

“டீல் வேண்டாம்” – ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று

protest jm

“டீல் வேண்டாம், ஊழலில் ஈடுபட்டோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்து” எனும் கருப்பொருளில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று மாலை முன்னெடுக்கவுள்ளதாக ஊழல்களுக்கு எதிரான குரல் எனும் அமைப்பு அறிவித்துள்ளது. கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னால் மாலை 3.00 மணிக்கு ஊர்வலமாக சென்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக இவ்வமைப்பின் ஏற்பாட்டாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார். இவ்வார்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கலைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் சமயத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் ... Read More »

ஜனவரி மாதம் முக்கிய அமைச்சர்கள் சிலரை நீக்குவதாக தகவல்

cabinet

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவி பெற்றுகொண்டுள்ள சிலருக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் அவர்களின் பதவி இழக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள அமைச்சரவை மறுசீரமைப்பில், திறனற்ற நபர்கள் தொடர்பில் இதுவரையில் அறிந்துகொள்ளப்பட்டுள்ள, அமைச்சர்களிடமிருந்து அமைச்சு பதவிகளை மீளவும் பெற்றுகொள்வதற்கு அரசாங்கத்தின் பிரதானிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய பெரிய அளவிலான குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதி அமைச்சர் ஒருவர் மற்றும் மேலும் பல முக்கியஸ்தர்களின் அமைச்சு பதவிகளும் இழக்கும் நிலைமை ... Read More »

2016 வரவு செலவு திட்டத்தில் அதிகபடியான நிதி மலையக அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது : திகாம்பரம்

digambaram

-க.கிஷாந்தன் 2016 வரவு செலவு திட்டத்தில் அதிகப்படியான நிதி மலையக அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார். அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை கவரவில் தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்ந விழாவில் பாடசாலையின் அதிபர் மூ.மூவேந்தர், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ஆர்.இராஜாராம் மற்றும் அட்டன் வலய கல்வி பணிப்பாளர் எஸ்.பி.இராஜாசேகரன் ஆகியோருடன் பாடசாலை ... Read More »

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமனம்

mujeebur rahman

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைந்த தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார். பாராளுமன்ற தவிசாளர் குழு உறுப்பினரும் மத்திய கொழும்பு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் பரிந்துரையின்பேரில் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 1994 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் மூலம் நேரடி அரசியலில் ஈடுபட்டு வந்த ... Read More »

மின்சார, தொலைபேசி கட்டணங்கள் அதிகரிக்கும் வாய்ப்பு

images19

நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட 2016ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்திற்கு அமைய மின்சார கட்டணம் மற்றும் தொலைபேசி அழைப்புக் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், தகவல் தொடர்பாடல் மற்றும் மின்சார விநியோக சேவைத்துறைக்கான புதிய வரிவிதிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் காரணமாகவே மேற்குறிப்பிட்ட சேவைகளின் கட்டணங்கள் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்ப்பதாக துறைசார் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்பாடல் சேவை மற்றும் மின்சார விநியோக சேவைகளுக்காக 4 சதவீத வரிவிதிப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக வரவு செலுத்திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளமை ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg