Close
Breaking News
Home » பிரதான செய்திகள் (page 10)

பிரதான செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகள் பெயரில் சிங்கள பாதாள உலக கும்பலை விடுவிக்க அரசு முயற்சி

Sri-Lanka-Prison

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கும் பாசாங்கில் சிங்கள பாதாள உலக கோஸ்டியினரை விடுவிக்க அரசு முயற்சிப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர். தமிழ் அரசியல் கைதிகளுடன் ஆறு சிங்களவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆறுபேரும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பாதாள உலக கோஸ்டியை சேர்ந்தவர்களாவார்கள் என தெரிய வந்துள்ளது. குறித்த பாதாள உலகத்தை சேர்ந்த ஆறு பேரும் கடந்த காலங்களில் ஆயுதங்களுடன் கொள்ளை, கப்பம் பெறுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள். இவர்கள் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் சிறைகளில் தடுத்து ... Read More »

குமார் குணரட்னத்திற்கு இலங்கைக் குடியுரிமை வழங்க கோரி ஐரோப்பிய நாடுகளில் போராட்டம்

kumar gunarathnam

முன்னிலை சோசலிஷக் கட்சியின் தலைவர் குமார் குணரட்னத்திற்கு இலங்கையில் அரசியல் செய்ய அனுமதியளிக்கப்பட வேண்டும், இலங்கைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டுமெனக் கோரி ஐரோப்பிய நாடுகளில் எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படவுள்ளன. ஐரோப்பியாவின் மூன்று நாடுகளில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் தெரிவித்ததாவது, பிரிட்டனின் லண்டன், இத்தாலியின் மிலானோ மற்றும் பிரான்ஸின் பாரிஸ் ஆகிய நகரங்களில் முதல் கட்டமாக போராட்டம் நடத்தப்படவுள்ளது. குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தினால் தொடரப்பட்டுள்ள வழக்கினை வெற்றிகரமாக எதிர்நோக்க முடியும். குமார் குணரட்னம் தொடர்பில் கலந்துரையாட ... Read More »

சஜின்வாஸ் மீது பல மில்லியன் ரூபா மோசடி தொடர்பில் வழக்கு தாக்கல்

sajin vas

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவின் மீது எல்ஓஎல்சீ என்ற குத்தகை நிறுவனம், கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது. தமது நிறுவனத்தில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாமை தொடர்பில் சஜின்வாஸ் மற்றும் அவரின் மனைவி டயானா ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொரல்லையில் உள்ள தமது வீடு ஒன்றை தமது நிறுவனத்துக்கு இந்த வருடம் மார்ச் 17ஆம் திகதியன்று மாற்றம் செய்வதாக சஜினும் மனைவியும் இணங்கியிருந்தனர். எனினும் இரண்டு மாத மேலதிக காலஅவகாசம் வழங்கப்பட்டும் அவர்கள் அதனை மேற்கொள்ளவில்லை. ... Read More »

ஜே.வி.பி.யின் இரண்டு முக்கியஸ்தர்கள் என்னுடன் இணைந்து கொள்வர் : சோமவன்ச

somavansa

எதிர்காலத்தில் எமது அரசியல் பயணத்துடன் இணைந்து கொள்வோரில் ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர்களும் உள்ளடங்குகின்றனர். ஜே.வி.பி.யின் இரண்டு முக்கியஸ்தர்கள் என்னுடன் இணைந்து கொள்வர் என ஜனதா சேவக கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், எம்முடன் இணைந்து கொள்வது குறித்து ஜே.வி.பி.யின் சில சிரேஷ்ட தலைவர்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். ஜே.வி.பிக்குள் பிரச்சினைகளை ஏற்படுத்தும் முன்னணி செயற்பாட்டாளர்கள் யார் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படும். ஆளும் கட்சிக்குள் பிளவுகள் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அரசாங்கத்தினால் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் சிக்கல் நிலைமை ... Read More »

வைத்தியசாலைக்கு அபாயாவுடன் சென்று திட்டுவாங்கிய முஸ்லிம் சகோதரி

A Muslim woman wearing the niqab (veil which covers the body and leaves only a small strip for the eyes) poses during a meeting with Imam Ali El Moujahed on May 18, 2010 in Montreuil, outside Paris. The French parliament unanimously adopted on May 11, 2010 a resolution condemning the full-face Islamic veil as an affront to the nation's values.  AFP PHOTO FRED DUFOUR (Photo credit should read FRED DUFOUR/AFP/Getty Images)

(இக்பால் அலி) முஸ்லிம் பெண்மணி ஒருவர் தன்னுடைய கண் சிகிச்சைக்காக கண்டியிலுள்ள தனியார் கண் சிகிச்சை நிலையத்திற்கு அபாயா அணிந்து   பேஷ் கவருடன் சென்றவர் அங்குள்ள வைத்திய நிபுணருடன் பேஷ் கவரை கலட்ட முடியாது என தர்க்கம் புரிந்ததால் அவர் வைத்தியரிடம்  கடின திட்டு வாங்கிக் கட்டிக் கொண்டு  சிகிச்சையைப் பெற்று சென்றுள்ள சம்பவம் ஒன்று கடந்த இரு நாட்களுக்கு முன்  நடைபெற்றுள்ளது. நீண்ட நேரமாகக் காத்திருந்த பெண்மணி வைத்தியரைச் சந்திப்பதற்காக உள்னே சென்றார்.  வைத்திய அதிகாரி அந்தப் பெண்மணியின் கண்ணை பரிசோதனை ... Read More »

பிரான்ஸ் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி, பிரதமர் அனுதாம்

ranil mathri

பிரான்ஸில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தமது அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர். விசேட அறிக்கையொன்றின் மூலம் தமது அனுதாபத்தை பிரான்ஸ் ஜனாதிபதிக்கும், அந்நாட்டு பிரதமருக்கும் இவர்கள் அனுப்பி வைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. உலக பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர சகலரும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியம் என இருவரும் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read More »

அவன்ட் கார்ட், தாஜுதீன் விவகாரம் : குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம்

maithripala-sirisena2

அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுதக்கப்பல், வசீம் தாஜுதீன் படுகொலை மற்றும் ஊழல் மோசடிகள் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளை தண்டிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளில் முன்னேற்றம் குறித்து திருப்தி அடைய முடியாது என குறித்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே விசாரணைகளை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை விதிப்பதனை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More »

அரசாங்கம் மாறினாலும் அரசு மாறவில்லை – உண்மை உடைத்து சொன்ன ராஜித

rajitha_senaratna

கொழும்பு மேலதிக நீதிவான் நிசாந்த பீரிஸ் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான நடவடிக்கையை மேற்கொள்வார் என்று அவர் குறிப்பிட்டார். வாஸிம் தாஜூதீன் கொலை மற்றும் 600 மில்லியன் ரூபா சில் அனுஸ்டானங்களுக்கான ஆடை வழக்கு என்பவற்றை நீதிவான் நிசாந்த பீரிஸே விசாரணை செய்துவந்தார். இந்தநிலையில் அவரின் இடமாற்றத்துக்கு பின்னால் சில காரணங்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அரசாங்கம் மாறியுள்ள போதும் அரசு இன்னும் மாறவில்லை. ... Read More »

SLTJ யின் மாற்று மத நண்பர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி & சிங்கள குர்ஆன் அன்பளிப்பு

sltj iniya  markkam

நூற்றுக்கும் மேற்பட்ட மாற்று மத நண்பர்கள் கலந்து கொண்ட இஸ்லாம் பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் வரகாமுற கிளை சார்பாக மாற்று மத நண்பர்களுக்கான இஸ்லாம் பற்றிய பகிரங்க கேள்வி பதில் நிகழ்ச்சி “இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்” இன்று (14.11.2015) வரகாமுற   HILL VIEIS மண்டபத்தில் நடைபெற்றது. ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் B.Com அவர்கள் நிகழ்வில் கலந்து கொண்ட மாற்று மத நண்பர்களின் இஸ்லாம் பற்றிய கேள்விகளுக்கு ... Read More »

4 ஆண்டுகளில் 43,200 முறை பாலியல் வன்முறைக்கு ஆளான இளம்பெண்

karla

மனித கடத்தல் கும்பலால் கடத்தப்படும் இளம்பெண்கள விபசாரத்தில் தள்ளப்படுவதாக அமெரிக்கா மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நடைபெறும் மனித கடத்தல்களின் கொடூரமான உண்மைகளை கர்லா ஜாசின்டோ என்ற இளம்பெண்ணின் கதை உணர்த்துகிறது. மனித கடத்தல் ஒரு லாபகரமான தொழில் என்பதால் மத்திய மெக்சிகோவில் இருந்து அட்லாண்டா மற்றும் நியூயார்க் வரை இந்த துயரநிலை பரவி வருகிறது. கர்லா போன்றே சுமார் 10 ஆயிரம் மெக்சிகன் பெண்களின் வாழ்வை இந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அழித்துள்ளனர். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களில் ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg