Close
Breaking News
Home » பிரதான செய்திகள் (page 2)

பிரதான செய்திகள்

தமிழ் பேசும் சமூகங்களாலே நல்லாட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்….

BUP_DFT_DFT-1-22

-எஸ்.அஷ்ரப்கான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குதல் மற்றும் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துதல் தொடர்பில் விசேடமாக ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்படும் ஏற்பாடும் நடந்தேறி வருகிறது. மிகவும் குறுகிய காலத்தில் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் புதியதொரு தேர்தல் முறையினை அறிமுகப்படுத்துவதற்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கி ஜனாதிபதியிடம் உள்ள அதிகாரங்களை பாராளுமன்றத்திடமும், சுயாதீன ஆணைக்குழுக்களிடமும் ஒப்படைப்பதே தனது எதிர்பார்ப்பாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டு வருகின்றார். தேர்தல் பிரகடனத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி, புதியதொரு அரசியல் யாப்பினை உருவாக்குவது தொடர்பாகவும் ... Read More »

பிரதி அமைச்சர் ஹரீஸுக்கு நன்றிகள் – சுபீட்சம் சமுக நற்பணி மன்றம்

harees

-எஸ்.அஷ்ரப்கான் கடந்த கால அரசில் செய்ய முடியாமல் போன பல அபிவிருத்தித் திட்டங்களை தற்போதைய நல்லாட்சியின் கீழ் மக்களின் நன்மை கருதி முன்னெடுத்து செல்லும் படி ஜனாதிபதி பிரதமர் உட்பட உரிய அமைச்சர்களுக்கும் பிரதேச அரசியல்வாதிகளுக்கும் சாய்ந்தமருது சுபீட்சம் நற்பணி மன்றத்தினால் கீழ்வரும் கோரிக்கைகள்விடுக்கப்பட்டுள்ளன. 1. கல்முனை நகரில் அரச ஒசுசல ஒன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தல். 2. கடந்தகால அசாதாரணசூழ்நிலை காரணமாக 1979-1983 வரை இயங்கி ஸ்தம்பிதமடைந்த புகையிரத ஆசனப்பதிவு நிலையத்தை மீண்டும் கல்முனை நகரில் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்தல். 3. மட்டக்களப்பு ... Read More »

சித்திரவதை முகாம் பற்றி ஐ.நா வுக்கு தகவல் வழங்கியது யார்? யஸ்மின் சூக்கா – திடுக்கிடும் தகவல்கள்

Yasmin-Sooka

திருகோணமலையில் கடந்த வாரம் காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவினால் வெளியிடப்பட்ட கடற்படை இரகசிய வதை முகாம் தொடர்பில் மேலும் தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முகாம் தொடர்பில் கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்துரைத்த ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள், குறித்த முகாமில் சித்திரவதைகள் இடம்பெற்ற சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டிருந்தனர். முன்னதாக இந்த முகாம் குறித்து ஐக்கிய நாடுகளின் குழுவினருக்கு எவ்வாறு தெரியவந்தது என்பது தொடர்பில் சந்தேகங்கள் இருந்தன. எனினும் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளினால் முன்னதாக அமைக்கப்பட்ட தாருஸ்மான் குழுவில் ... Read More »

அரசாங்கத்தை வீழ்த்த திரைமறைவில் பேச்சுவார்த்தை

3d-small-people-session-behind-round-table-15317698

வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தி புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு திரைமறைவில் இரு சக்திகள் தற்பொழுது வெவ்வேறு கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனாதிபதியின் நம்பிக்கையை வென்ற ஐக்கிய தேசியக் கட்சியினால் தெரிவு செய்யப்பட்ட பிரபல அமைச்சர்கள் இருவருடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் தலைவர்கள் இணைந்து ஒரு கலந்துரையாடலிலும், ஐக்கிய தேசியக் கட்சியில் அதிருப்தியடைந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக கருதப்படக்கூடிய ஒரு குழுவினர் இணைந்து வேறு ஒரு ... Read More »

இலங்கையில் இரகசிய சித்திரவதைக் கூடம் இல்லை : முன்னாள் கடற்படை தளபதி மறுப்பு

wasantha-karannagoda

இலங்கையில் இரகசிய சித்திரவதைக் கூடங்கள் செயற்பட்டதாக ஐ.நா. விசாரணைக் குழு குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதுபோன்ற இரகசிய சிறைகள் எதுவும் செயற்படவில்லை என்று கடற்படையின் முன்னாள் தலைமை தளபதி வசந்த கரன்னகொட மறுத்துள்ளார். இலங்கையின் திருகோணமலை கடற்படை தளத்தில் பூமிக்கடியில் இரகசிய சிறைக்கூடம் ஒன்றை ஐ.நா. குழு கண்டறிந்துள்ளது. இலங்கையில் இறுதிக்கட்ட போருக்கு பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் இங்கு விசாரணை மற்றும் சித்திரவதை செய்யப்பட்டிருக்கலாம் என்று அக்குழு தெரிவிக்கிறது. ஐக்கிய நாடுகள் குழுவின் அறிக்கையை அடுத்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் ... Read More »

மஹிந்த தரப்பின் ஒரு தொகுதியினர் மைத்திரியுடன் இணையத் தீர்மானம்

Maithri_mahinda

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்து வந்த ஒரு தொகுதியினர், ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து கொள்ளத் தீர்மானித்துள்ளனர். எதிர்கால அரசியலை ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் இணைந்து மேற்கொள்ள இணக்கம் வெளியிட்டுள்ளனர். அண்மையில் நடைபெற்ற சர்வகட்சிக் கூட்டத்தின் போது இந்த விடயம் குறித்து பேசப்பட்டுள்ளது. இதேவேளை, இவ்வாறான இணக்கப்பாடு எதுவும் ஏற்படுத்திக் கொள்ளப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். கூட்டணி அமைப்பது குறித்து உத்தியோகபூர்வமாக இணங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். Read More »

தமிழக சிறைகளில் இருந்து 34 இலங்கை மீனவர்கள் விடுதலை

fisher-men

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய சிறையில் அடைக்கப்படிருந்த 34 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் கடலோர காவல் படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டனர். மத்திய அரசு எடுத்த முயற்சியின் விளைவாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும், இந்தியக் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களும் பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். அண்மையில் இலங்கையில் இருந்து தமிழக மீனவர்கள் 124 பேர் தமிழகம் திரும்பினர். கோடியக்கரை கடல் பகுதியில் பிடிபட்ட இலங்கை மீனவர் இருவரும் காரைக்காலில் இருந்து ... Read More »

மஹிந்தவின் ஆட்சியை கவிழ்த்தது நாங்கள்தான் : சம்பிக்க ரணவக்க

mahinda-champika

நூறாண்டுகள் தாக்குப் பிடிக்கும் என்று வர்ணிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்த்தது நாங்கள் தான் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க உரிமை கோரியுள்ளார். இன்றைய சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள சம்பிக்க ரணவக்க, முன்னொரு காலத்தில் ஒரு குடும்பத்தின் கையில் மட்டும் ஆட்சி அதிகாரம் தங்கியிருந்தது. ஆனால் இன்று இரண்டு கட்சிகளின் தலைவர்கள் புரிந்துணர்வுடன் ஒன்றிணைந்து நல்லாட்சியின் மூலம் மக்களை அதிகாரம் கொண்டவர்களாக மாற்றியுள்ளார்கள். மஹிந்தவின் ஆட்சியில் ஊழல், மோசடி, லஞ்சம் என்பன ... Read More »

திருகோணமலை வைத்திய சாலைகளுக்கு அதிரடி சேவைகள் – களத்தில் சுகாதார பிரதியமைச்சர் மற்றும் சுகாதர அமைச்சர்

kilakku

-சப்னி கடந்த 20.11.02015 அன்று  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரின்  அழைப்பின் பேரில் மத்திய அரசாங்கத்தின் சுகாதார மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் கௌரவ பைசல் காசீம், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ நசீர், மத்திய சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டாக்டர் பாலித, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ லாகிர், முன்னாள் பிரதி அமைச்சர் கௌரவ தௌபீக், முன்னாள் தவிசாளர் பாய்ஸ், முன்னாள் தவிசாளர்களான கௌரவ முபாறக் ஹரீஸ், கிழக்கு மாகாண பணிப்பாளர் டாக்டர் முருகானந்தம் பிராந்திய ... Read More »

தேர்தல் இடாப்புகள் பெறுவதில் சிரமம் – கல்வியற் கல்லூரி விண்ணப்பத்தாரிகள் முறைப்பாடு

complaint-1

-எப்.முபாரக் திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் தேர்தல் இடாப்புக்கள்  பெறுவதில் சிரமங்கள் ஏற்படுவதாக கல்வியியற் கல்லூரி விண்ணப்பத்தாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். தற்போது நாடு முழுவதிலும் உள்ள கல்வியியற் கல்லூரிகளில் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பத்தாரிகளுக்கு நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன. இந் நேர்முகப் பரீட்சைகளின்போது  தேர்தல் இடாப்பு கொண்டு வருமாறு விண்ணப்பத்தாரிகளிடம் கோரப்பட்டுள்ளது. எனினும், திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர் ஒருவர் இல்லாத காரணத்தினால் உடனடியாக தேர்தல் இடாப்பு தர முடியாதென அங்கு கூறப்படுவதாகவும் விண்ணப்பத்தாரிகளினால் ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg