Close
Breaking News
Home » பிரதான செய்திகள் (page 20)

பிரதான செய்திகள்

நவம்பர் 7 இல் இளைஞர் பாராளுமன்றத் தேர்தல்

election_17

தேசிய இளைஞர் சேவை சபை, ஸ்ரீ லங்கா இளைஞர் சமூக சம்மேளனம் மற்றும் தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு என்பன இணைந்து ஏற்படுத்தப்பட்டுள்ள இளைஞர் பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும் நவம்பர் 7 ஆம் திகதி காலை 8.00 மணி முதல்  மாலை 3.00 மணிவரையில்  334  பிரதேச செயலகங்களிலும் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வாக்களிப்பதற்கான உரிமையை நாடு முழுவதிலும் இயங்கும் பதிவு செய்யப்பட்ட 12938 இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பெற்றுள்ளனர். இவ்வாறு பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களிலுள்ள சுமார் 5 லட்சம் பேர் ... Read More »

மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் : ஜேவிபி

Anura-Kumara-Dissanayake-640x415

மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் அவர்களுக்கே வழங்கப்பட வேண்டும். இதனை அரசாங்கம் உறுதி செய்யவேண்டும் என்று ஜேவிபி கோரியுள்ளது ஜேவிபியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்தக்கருத்தை வெளியிட்டார். வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட நாளை நினைவுகூர்ந்து ஹஸ்புல்லா என்பவர் நூல் ஒன்றை எழுதி வெளியிட்டார். இந்தநிகழ்வில் அநுரகுமார பிரதம அதிதியாக பங்கேற்று உரையாற்றினார். இதன்போது கருத்துரைத்த அவர், வடக்கில் படையினரால் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீண்டும் வழங்கப்படும்போது உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று குறிப்பிட்டார். நிலச் சொந்தக்காரர்களுக்கு தமது நிலங்களின் உரித்து மாத்திரமல்லாமல் அந்த ... Read More »

10 மாதத்தில் 19 இளைஞர்களுக்கு எச்.ஐ.வி.

hiv

கடந்த 10 மாத காலத்துக்குள் எச்.ஐ.வி. தொற்றியவர்களில் 15 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் 19 பேர் காணப்படுவதாக தேசிய பாலியல் நோய் மற்றும் ஏய்ட்ஸ் ஒழிப்பு செயற்திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இவர்களில் அதிகமானோர் ஆண்கள் எனவும் இவர்களில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இன்று பாடசாலைகளில் பாலியல் ரீதியான கல்வி ஊட்டப்படுவதில்லை. இதனால், மாணவர்கள் அறியாமையினால் பல பாதிப்புக்களுக்கு உட்படுகின்றனர். எதிர்வரும் காலங்களில் செயலமர்வுகள் மூலம் பாடசாலை மாணவர்களுக்கு இந்த பாலியல் ரீதியான கல்வியை ... Read More »

தாஜுதீன் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என உறவினருக்கு அச்சுறுத்தல்

Wasim-Thajudeen

ரகர் வீரர் வசீம் தாஜுதீன் மரணம் தொடர்பிலான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என அவரது நெருங்கிய உறவினர் ஒருவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிடம் இதனைத் தெரிவித்துள்ளனர். இவ்வாறு அச்சுறுத்தல் விடுப்பது யார் ஏன் இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது என்பது குறித்து தனியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மையில் தாஜூடினின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு மீளவும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. தாஜூடினின் தாயாரிடம் இரத்த மாதிரி பெற்றுக்கொள்ளப்பட்டு தோண்டி எடுக்கப்பட்ட சடலம் தாஜூடினினது என்பதனை உறுதி ... Read More »

ஜனாதிபதி மைத்திரிக்கு சிங்­கள தேசிய அமைப்­பு­களின் ஒன்­றியம் எச்­ச­ரிக்கை

janapathi

ஜனா­தி­ப­திக்கு எதி­ராக எந்தச் சந்­தர்ப்­பத்­திலும் குற்­ற­வியல் பிரே­ர­ணையை கொண்­டு­வர முடியும் என சிங்­கள தேசிய அமைப்­பு­களின் ஒன்­றியம் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளது. அதேவேளை இலங்கை படை­யி­ன­ருக்கு எதி­ராக கடும் குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­கப்­பட்டு புதிய அறிக்­கை­யொன்றை தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு அண்­மையில் ஜெனி­வா­விற்கு அனுப்பி வைத்­துள்­ள­தா­கவும் தேசப்­பற்­றுள்ள தேசிய இயக்­கத்தின் தலை­வரும் சிங்­கள தேசிய அமைப்­புக்­களின் ஏற்­பாட்­டா­ள­ரு­மான டாக்டர் குண­தாஸ அம­ர­சே­கர குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ; பர­ண­கம ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை ஜெனி­வா­விற்கு முன்­வைக்­காது அதனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தன்­ன­கத்தே ... Read More »

இடம் பெயர்ந்த முஸ்லீம்கள் குறித்து நல்லாட்சி அரசு கவனமெடுக்க வேண்டும் : ACMC இளைஞர் அமைப்பாளர்

acmc youth

(சப்னி) “மக்களின் அன்றாட வாழ்வும், சகஜ வாழ்க்கையும்” திரும்புவதன் ஊடாக தமது இன,மத ரீதியிலான அபிலாசைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையின் மேலேயே இன்றைய அரசு ஆட்சிக்கு வந்தது. அதிலும் விசேடமாக சிறுபான்மை மக்களின் தெரிவாகவே இவ்வரசு இயங்கி வருகின்றது. இந்நிலையில் இலங்கையின் மூன்றாவது பெரும்பான்மையான முஸ்லீம்கள் மீது காட்டப்படும் நமபிக்கையூட்டக் கூடிய செயல்பாடுகள் மிகக் குறைந்தளவே காணப்படுகின்றது. என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்  இளைஞர் அமைப்பாளர் அன்வர் நெளஷாத் அவர்கள் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது நாட்டுக்குள் உள்ள இன முரண்பாடுகளை ... Read More »

இலங்கையில் நாளொன்றுக்கு 650க்கும் அதிகமான கருக்கலைப்பு

karu

இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல மருத்துவப் பிரிவு கூறியுள்ளது. அதேவேளை இலங்கையில் 77 வீதமான கருத்தரிப்புகள் எதிர்பாராத கருத்தரிப்புகள் என்று சம்பந்தப்பட்டவர்களால் கருதப்படுவதாகவும் தமது ஆய்வுகள் கூறுவதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து பிபிசியிடம் பேசிய கிழக்கு மாகாண சமூக நல மருத்துவ நிபுணரான டாக்டர் எஸ். அருள்குமரன், கருக்கலைப்புக்கள் 1000 என்ற எண்ணிக்கையில் இருந்து தற்போது 650ஆக குறைந்துள்ளதாக கூறுகிறார். கருக்கலைப்புகள் மருத்துவ காரணங்களுக்காக மாத்திரமே அரசாங்க மருத்துவமனைகளில் நடப்பதாகவும், ஆனாலும் சில ... Read More »

கராத்தே வீரர் கொலை : பிரதான சந்தேக நபர் கைது

Arrest-

அனுராதபுர இரவு விடுதியின் உரிமையாளரான கராத்தே வீரர் வசந்த சொய்சா கொலைக்கான பிரதான சந்தேக நபர் எஸ்.எப். லொகு என அழைக்கப்படும் இரோன் ரணசிங்க பொலிஸாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read More »

போனது ஹிட்லரா? வந்தது ஷப்லினா?

vimal-nff

போனது ஹிட்லரா? வந்தது ஷப்லினா? எனும் கருப்பொருளின் கீழ் பத்தாயிரம் பொதுக் கூட்டங்களை நாடு முழுவதும் நடாத்துவதற்கு விமல் வீரவங்சவின் கட்சியான தேசிய சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது. நவம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை இந்த கூட்டங்களை நடாத்த அக்கட்சி திட்டமிட்டுள்ளது. இக்கூட்டத்தில் தேசிய சுதந்திர முன்னணியின் முக்கிய உறுப்பினர்கள் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கவுள்ளதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது. Read More »

மட்டுவில் 18607 இளைஞர்கள் வாக்களிக்க தகுதி – இ.பா.ம. தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரம்

batti election

(பழுலுல்லாஹ் பர்ஹான்) இம் மாதம் 7ஆம் திகதி நாடு பூராகவும் நடைபெறவுள்ள 2015 இளைஞர் பாராளுமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றது. இந் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 32 வேட்பாளர்கள் இத் தேர்தலில் போட்டியிடுவதாகவும் இதில் மட்டக்களப்புத் தொகுதியில் 12 பேரும் கல்குடாத் தொகுதியில் 12 பேரும் பட்டிருப்புத் தொகுயில் 8 பேரும் போட்டியிடுவதாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைமையக பணிமனையின் உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைரூஸ் தெரிவித்தார். மேற்படி ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg