Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
பிரதான செய்திகள் | OnlineCeylon | Page 3
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் (page 3)

பிரதான செய்திகள்

பொது அறிவுக் குறையிலே தமிழ் தாய்மொழி பற்றி சீமான் பேசுகிறார் : முபாறக் அப்துல் மஜீட்

seeman-mubarak

-எஸ்.அஷ்ரப்கான் தமிழ் மொழியை தாய் மொழியாக கொள்ளாதவர் தமிழர் அல்ல என சைமன் என்ற சீமான் சொல்லியிருப்பது அவரது பொது அறிவுக்குறையை காட்டுகிறது என உலமா கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்தார். அவர் இது விடயமாக மேலும் குறிப்பிடும்போது, ஒரு மொழியை தாய் மொழியுடன் சம்பந்தப்படுத்தி பார்த்தால் உலகில் உள்ள பல மொழியை சேர்ந்தவர்களை நாம் மறுக்க வேண்டி வரும். உதாரணமாக இன்றைய பல அறபு நாடுகள் ஒரு காலத்தில் அறபு மொழி பேசுபவையாக இருக்கவில்லை. அங்கு இஸ்லாம் ... Read More »

உலக சாதனை படைத்த நிதி அமைச்சருக்கு டலஸ் அலகபெருமவினால் பாராட்டு

dullas alahapperuma

உலகத்திலே மிக நீளமான வரவு செலவினை நேற்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகபெரும தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அது ஒரு உலக சாதனை எனவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். நிறுத்தப்படாமல் தொடர்ந்த மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு இதுவென வரலாற்றில் பதிவு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறே நேற்று வருகை தந்த தூதுவர்கள் தன்னிடம் உறுதி செய்ததாக அவர் ... Read More »

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 2ல்

Parlimnt

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. இந்த வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்காக 9 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்று சமர்பிக்கப்பட்ட 69வது வரவு செலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 19ம் திகதி இடம்பெறவுள்ளது. Read More »

விமல் அமைச்சராக இருந்த போது உறவினர்களுக்கு அதிக சலுகை – அரசுக்கு 600 லட்சம் நஷ்டம் : சஜித்

sajith-Wimal

விமல் வீரவன்ச அமைச்சராக செயற்பட்ட காலத்தில் அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டங்களில் அவரது உறவினர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த சலுகை காரணமாக அரசாங்கத்துக்கு 600 லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸவின் கேள்வியொன்றுக்குப் பதில் அளிக்கும் வகையில் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் சஜித் பிரேமதாச, மத்தேகொட மற்றும் கஹதுடுவை பிரதேசங்களில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட சொகுசு மாடி வீட்டுத் திட்டங்களில் ஐந்து வீடுகள் விமல் வீரவன்சவின் உறவினர்களுக்கு சலுகை கட்டணத்தில் ... Read More »

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன் – பல்கலைக்கழகங்களுக்கு இலவச WIFI

budget 2016

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இலவச WIFI வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மகபொல பல்கலைக்கழகம் மாலபேயில் அமைக்கப்படுவதுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் 2018ம் ஆண்டிற்குள் விடுதி வசதிகள் வழங்கப்படும் என்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாக்க தெரிவித்தார். உயர்தரப் பரீட்சைக்கு பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் தொழில் பயிற்சி வழங்கப்படவுள்ளது என்றும் குறிப்பிட்டார். அத்துடன் ஆரம்ப பாடசாலை அபிவிருத்திகளுக்காக 10000 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு ... Read More »

இரட்டைப் பிரஜாவுரிமைக்கான விண்ணப்பக் கட்டணம் அதிகரிப்பு

budget 2016

இரட்டைப் பிரஜாவுரிமை கோருவோருக்கான விண்ணப்பக் கட்டணம் இம்முறை வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த மஹிந்த அரசின் காலத்தில் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு, தனிச்சிங்களவர்கள் மட்டுமே அதனைப் பெற்றுக் கொள்ளும் முறையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதன் காரணமாக கடந்த காலங்களில் வேறு நாடுகளில் குடியுரிமை பெற்ற தமிழ் மக்கள் இலங்கையில் இரட்டைப்பிரஜாவுரிமை பெற்றுக் கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தது. அத்துடன் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட இரட்டைப் பிரஜாவுரிமைகளில் சிங்களவர்களே பெருமளவில் உள்ளடக்கப்பட்டிருந்தனர். எனினும் தேசிய அரசாங்கத்தின் பதவியேற்பின் பின்னர் நாட்டில் படிப்படியாக ... Read More »

கடவுச்சீட்டு ஒருநாள் சேவைக்கான கட்டணம் 10000 ரூபாவாக அதிகரிப்பு – சாதாரண மக்களுக்கு கடுமையான சுமை

budget 2016

எதிர்வரும் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் ஒரு நாள் சேவை மூலமாக கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் 7,500 ரூபாவில் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக கடவுச்சீட்டு ஒருநாள் சேவைக்கான கட்டணம் அதிகரித்திருப்பது சாதாரண மக்கள் மீதான கடுமையான சுமை என்று விமர்சிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அவசர வேலைவாய்ப்பை பெற்றுச் செல்லும் சாதாரண பொதுமக்கள் ஒரே நாளில் கடவுச்சீட்டு பெற்றுக் கொள்ளும் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் தமிழ் மக்களும் இச்சேவையை கூடுதலாக ... Read More »

ஜனவரி முதல் இலத்திரனியல் அடையாள அட்டை

budget 2016

நாட்டிலுள்ள அனைத்து கிராமசேவக பிரிவுகளையும் அபிவிருத்தி செய்வதற்கு 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பிரதேச சபை மற்றும் மாகாண சபைகள் இலத்திரனியல் திட்டம் மூலம் இயங்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்தார். இறக்குமதி வரிகள் இன்றி தங்கம் இறக்குமதி செய்வதற்கான விஷேட அனுமதிப்பத்திரங்கள் 50 வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மேலும் தெரிவித்தார். அடுத்த வருடம் ஏப்ரல் முதல் இலங்கையில் வருடாந்த இரத்தினக் கல் ... Read More »

வரவு செலவுத் திட்டத்தில் 11 பொருட்களின் விலைகள் குறைப்பு

budget 2016

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த வரவு செலவுத் திட்டத்தில் 11 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில், 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு கொள்கலன் ஒன்றில் விலை 150 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும் 425 கிராம் டின் மீனின் விலை 125 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ பருப்பின் சில்லறை விலை 169 ரூபாவாகவும் ஒரு கிலோ கடலையின் சில்லறை விலை 169 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதனை தவிர, ... Read More »

நேற்று வாசிக்கப்பட்ட வரவு – செலவு திட்டத்தின் முழு விபரம்

budget 2016

2016ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் நேற்ற மாலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 69ஆவது வரவு செலவு திட்டத்தினை சமர்ப்பித்து நிதியமைச்சர் தற்போது உரையாற்றுகிறார். இதன்போது நாடு பாரிய சிக்கல் நிலையில் இருந்த போதே அரசாங்கத்தை பொறுப்பேற்றுக்கொண்டதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். ஊழல், மோசடிகள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் நிறைந்து காணப்பட்ட சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்றுள்ளதோடு நூறு நாள் வேலைத்திட்டத்தில் பல்வேறு திட்டங்களை முன்வைத்துள்ளது. பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் 19 ஆவது அரசியலமைப்பு ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg