Close
Breaking News
Home » பிரதான செய்திகள் (page 30)

பிரதான செய்திகள்

16 கொலைகளுக்கு கோத்தாவும் கருணாவும் பொறுப்பு : கொலை செய்த பொலிஸ் அதிகாரி அவுஸ்திரேலியாவில்

GOTA-KARUNA

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்தக்கொலைகளுக்கு தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கும் பறங்கியரான முன்னாள் பொலிஸ் அதிகாரி- பாபியன் ரோய்ஸ்டர் டௌஸியன்ட் உடந்தையாக இருந்துள்ளார். கொழும்பின் ஆங்கில செய்தி இணையம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. முன்னாள் பொலிஸ் அதிகாரியான பாபியனுக்கு வழங்கப்பட்ட பெருந்தொகை பணத்துக்காகவே அவர் இரண்டு செஞ்சிலுவை சங்க அதிகாரிகளை கொழும்பு ... Read More »

வடக்கை சீரழித்தது இந்தியாவின் றோவே : அநுரகுமார

Anurakumara copy

உலக நியமங்களுக்கு ஏற்ப நடப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றஞ்சாட்டியுள்ளார். உதலகம, பரணகம மற்றும் ஐக்கிய நாடுகளின் அமரிக்க யோசனை என்பவை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற இரண்டாம் நாள் விவாதத்தில் பங்கேற்று அவர் உரையாற்றிய போதே மேற்காண்டவாறு அக்குற்றச்சாட்டை முன்வைத்து பேசினார். அவரின் உரையில் முக்கியமாக குறிப்பிடப்பட்டவை வருமாறு, இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய நாடுகளினால் தீர்வை காணமுடியாது. இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உணரவேண்டும். இந்திய உளவுச்சேவையான றோவே வடக்கை சீரழித்தது ... Read More »

வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்றம் உடனடியாக நடக்க வேண்டும் என்பதை உலமா கட்சி அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளது

mubarak

பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற விடயத்தில் சந்தர்ப்பத்தை வேண்டுமென்றே தவறவிட்டு விட்டு போன பஸ்ஸுக்கு கைகாட்டும் நிலைக்கு அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளின் அசமந்த போக்கே காரணம் என உலமா கட்சித்தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார். வடமாகாண முஸ்லிம்களின் மீள் குடியேற்ற தாமதம் சம்பந்தமாக கட்சித்தலைமையகத்தில் நடை பெற்ற  ஆய்வு கூட்டத்திலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து குறிப்பிட்டதாவது, 1990ம் ஆண்டு வெளியேற்றப்பட்ட வட மாகாண முஸ்லிம்கள் தமக்கு விடிவு கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்த சூழ்நிலையிலேயே 2009ம் ... Read More »

ஐக்கிய நாடுகள் சபையின் 70வது ஆண்டு நிறைவு – கொழும்பு வைபவங்களில் ஜனாதிபதி பங்கேற்பு

janapathi

ஐக்கிய நாடுகள் சபையின் 70 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஐ.நா.கொழும்பு அலுவலகத்தில் நடைபெறவுள்ள வைபவங்களின் பிரதம அதிதியாக மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார். 1945ம் ஆண்டு அக்டோபர் 24ம் திகதி உருவாக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் அமைப்பு நாளையுடன் 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதனை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் தலமை அலுவலகத்தில் மட்டுமன்றி உலகெங்கும் பல்வேறு நாடுகளில் கொண்டாட்ட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இலங்கை ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்று ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1954ம் ஆண்டு டிசம்பர் மாதம் ... Read More »

கைது செய்யப்பட்ட வீரவன்ஸ பிணையில் விடுதலை

wimal interview 2.jpg

செல்லுப்படியற்ற கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயற்சித்ததால், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட வீரவன்ஸ 10 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். டுபாய்,இங்கிலாந்து, இத்தாலி நாடுகளுக்கு செல்லும் நோக்கில் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த போது வீரவன்ஸ கைது செய்யப்பட்டார். இது குறித்து தினேஸ் குணவர்த்தன பிரதமரின் ... Read More »

கொண்டயா என்ற பெயரை ஊடகங்களே சூட்டின : துனேஷ் பிரியசாந்த

dunesh

சிறுமி சேயாவை கொலை செய்ததாக தான் வாக்குமூலம் வழங்கவில்லை எனவும் காவற்துறையினரின் தாக்குதலை தாங்கி கொள்ள முடியாத நிலையில், அவர்கள் வழங்கிய ஆவணத்தில் கையெழுத்திட்டதாகவும் கொண்டயா என்ற துனேஷ் பிரியசாந்த தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் உர பையை தலையில் போட்டு தன்னை ஜீப் வண்டி ஒன்றில் ஏற்றிச் சென்றதாகவும் தாக்கியதாகவும் சுவரில் தலைப்பட்டதால் காயம் ஏற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் கொண்டயா என்று தன்னை எவரும் அழைப்பதில்லை எனவும் துனேஷ் அல்லது பொடி என்றே நண்பர்கள் தன்னை அழைத்து வந்ததாகவும் ஊடகங்களே ... Read More »

திருகோணமலையில் சிரேஷ்ட பிரஜைகள் தினம் அனுஸ்டிப்பு

pirajai thinam

(எப்.முபாரக்)                    கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிரேஷ்ட பிரஜைகள் தினம் இன்று வியாழக்கிழமை (8) திருகோணமலை நகர மண்டபத்தில் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஆர்.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.            இத் சிரேஷ்ட பிரஜைகள் தினத்தில் திருகோணமலை மாவட்டத்திலுள்ள பதினெரு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் தெரிவு செய்யப்பட்ட சான்றோர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.                   இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருகோணமலை உயர் நீதிமன்ற நீதிபதி பா.சசிமகேந்திரன்,  கிழக்கு மாகாண சுகாதார ... Read More »

இன, மத துவேச கருத்துக்களுக்கு இனி இடமில்லை : மீறினால் கடும் தண்டனை

vijayadasa

இன, மத ரீதியான விமர்சனங்களை முன்வைக்கும் கருத்துக்கள் தொடர்பில் கடுமையான தண்டனை வழங்கும் வகையிலான சட்டதிருத்தத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார். இலங்கையில் பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அமைப்புகள் இன, மத வெறுப்புகளைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன. இதன் காரணமாக பதட்ட நிலைமை மற்றும் இன மோதல்கள் ஏற்படுகின்றன. இதனைக் கருத்திற்கொண்டு, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் நிகழாத வகையில் அரசாங்கம் இந்த சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள உத்தேசித்துள்ளது Read More »

2014 / 2015 பல்கலைக்கழக கல்வியாண்டிற்கான பதிவு நடவடிக்கைகள் ஆரம்பம்

UGC-Hand-book

கடந்த வருடத்தில் உயர்தரப் பரீட்சையின் சித்தியடைந்து பல்கலைக்கழக பிரவேசத்தை பெற்றுக்கொண்ட மாணவர்களின் 2014 / 2015 ஆம் கல்வியாண்டிற்கான பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக பதிவுகளை மேற்கொள்ள முடியும் என ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா குறிப்பிடுகின்றார். இதுவரைக் காலமும் பல்கலைக்கழகங்களிலேயே பதிவுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஆயினும் இனிமேல் மாணவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் மாத்திரமே பதிவுசெய்துகொள்ள முடியும் என்றும் ஆணைக்குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். ஆணைக்குழுவில் பதிவுசெய்ததன் பின்னர், ... Read More »

இலங்கை மனித உரிமைகள் ஆணையாளராக கஸ்ஸாலி ஹுஸைன்

hrcs

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்கள் ஐந்துபோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி தீபிகா உடுகமவும், ஏனைய உறுப்பினர்களான லயனல் பிரணாந்து, சீரேஷ்ட சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணி கஸ்ஸாலி ஹுசைன் மற்றும் அம்பிகா சத்குணநாதன் ஆகியோர் ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு சபையினால் சுயாதீன ஆணைக்குழுக்கள் 9 இற்கான உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இவர்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு பெயரிடப்பட்டுள்ளவர்களுக்கு ஜனாதிபதியின் அங்கிகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. ஏற்கனவே, பொலிஸ், லஞ்ச ஊழல், அரச சேவைகள் ஆகிய ஆணைக்குழுக்களுக்கு ஜனாதிபதியின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg