Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
பிரதான செய்திகள் | OnlineCeylon | Page 4
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் (page 4)

பிரதான செய்திகள்

வரவு- செலவுத் திட்டத்தில் தீர்வையற்ற வாகன அனுமதி ரத்து

budget 2016

கடந்த சில ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டு வந்த தீர்வையற்ற வாகன அனுமதி 2016ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசாங்கத்துக்கு பாரிய நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 90 லட்சம் ரூபாவரையிலும் அரச அதிகாரிகளுக்கு 60 லட்சம் ரூபா வரையிலும் இந்த தீர்வையற்ற வாகன அனுமதிகள் இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்தன. இதற்கு மேலதிக மஹிந்தவின் ஆட்சியின் சாதாரண இராணுவ அதிகாரிகளுக்கும் இந்த வாகன அனுமதிகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ... Read More »

O L பரீட்சை நுழைவுச்சீட்டுக்களை அதிபர்கள் வைத்திருக்க முடியாது : பரீட்சை திணைக்களம்

pushpakumara

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான நுழைவுச்சீட்டுக்களை அதிபர்கள் வைத்திருக்க முடியாது என பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. சாதாரண தரப் பரீட்சைக்காக பாடசாலைகளின் ஊடாக தோற்றும் மாணவ மாணவியருக்கான பரீட்சை நுழைவுச் சீட்டுக்கள் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தபால் ஊடாக நுழைவுச்சீட்டுக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நுழைவுச்சீட்டுக்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் உடனடியாக அவற்றை மாணவர்களுக்கு வழங்க வேண்டும். எந்த காரணத்திற்காகவும் அதிபர்கள் நுழைவுச் சீட்டுக்களை வைத்திருக்க முடியாது. நுழைவுச்சீட்டுக்களை அதிபர்கள் வைத்துக் கொள்வதனால் மாணவர்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்கினால் அதன் முழுப் பொறுப்பினையும் அதிபர்கள் ... Read More »

அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான நிர்ணய விலை இன்று முதல் நடைமுறைக்கு

food

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அறிவிக்கப்பட்ட 6 அத்தியாவசிய பொருட்களுக்கான நிர்ணய விலைகள் இன்று (20) முதல் நடைமுறைக்கு வரவுள்ளன. மைசூர் பருப்பு, உருளைக்கிழங்கு, பெரிய மற்றும் சிறிய வெங்காயம், கோழி இறைச்சி, கோதுமை, செத்தல் மிளகாய் ஆகிய ஆறு உணவுப் பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலைகள் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் நேற்று முந்தினம் அறிவிக்கப்பட்டன. அதன்பிரகாரம் ஒரு கிலோகிராம் மைசூர் பருப்புக்கு 190 ரூபாவும், ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்குக்கு 145 ரூபாவும் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோகிராம் வெங்காயத்தின் சில்லறை ... Read More »

நிதிமோசடி தொடர்பில் மஹிந்த ராஜபக்சவிடம் விசாரணை

Mahinda-Rajapaksa

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் பாரிய நிதிமோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு இன்று வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தவுள்ளது. குறித்த ஆணைக்குழு நேற்றைய தினம் இந்த விசாரணைகளை நடத்தவிருந்த நிலையில், மஹிந்த ராஜபக்ச சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணியின் வேண்டுகோளுக்கு இணங்க விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன. முறைப்பாட்டாளரின் சாட்சியம் தங்களுக்கு கிடைக்காத காரணத்தினால் குறுக்கு கேள்விகளைக் கேட்க முடியாதென மஹிந்த ராஜபக்ச சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி காமினி மாரப்பன நேற்று சுட்டிக்காட்டியிருந்தார். இதனைக் கருத்திற்கொண்ட ஆணைக்குழு முறைப்பாட்டாளரின் சாட்சியத்தை பிரதிவாதிக்கு வழங்குமாறு பணிப்புரை விடுத்திருந்தது. இதற்கமைய மஹிந்தவிடம் ... Read More »

வரவு செலவுத் திட்டத்துக்கான அமைச்சரவை அனுமதி இன்று காலை

cabinet

வரவு செலவுத் திட்டத்தை அனுமதிப்பது தொடர்பான விசேட அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெற விருப்பதாக அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் அமைச்சர் கயந்த கருணாதிலக அறிவித்துள்ளார். இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் சுதந்திரக் கட்சியின் யோசனைகளும் உள்வாழ்கப்பட்டுள்ளதாக விசேட செயற்றிட்ட அமைச்சர் கலாநிதி சரத் அனுமுகம தெரிவித்துள்ளார். இலங்கைக்கு புதியதொரு ஆரம்பமாக அமையவிருக்கும் இந்த வரவுசெலவுத்திட்டத்தில், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பது மற்றும் நாட்டின் அபிவிருத்தி ஆகிய இரண்டு முக்கிய விடயங்கள் கூடுதல் கவனம் செலுத்தப் பட்டிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார். ... Read More »

வரவு செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு

budget

கூட்டரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 2016 வரவுசெலவுத்திட்டத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவீனம் 3,138 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ள தோடு அரச வருமானம் 1,941 பில்லியன்களாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. துண்டு விழும் தொகையை 6.8 வீதமாக மட்டுப்படுத்தவும், 2017ல் இதனை 6.2 வீதமாகவும் 2020ல் 3.2 ஆகவும் குறைக்க அரசாங்கம் உத்திதேசித்துள்ளது. ... Read More »

வைத்தியசாலை குறைபாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சரிடம் வேண்டுகோள்

a0555222-c0cd-4587-be3f-0b1884402b22

-பழுலுல்லாஹ் பர்ஹான் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கிவரும் காத்தான்குடி தள வைத்தியசாலை மற்றும் மீராவோடை பிரதேச வைத்தியசாலை ஆகிய இரு வைத்தியசாலைகளில் வைத்திய சேவையை பெறும் பொது மக்களின் நன்மை கருதி அங்கு நிலவும் ஆளணிப் பற்றாக்குறை , பிரசவ விடுதி இயங்காமை,வைத்தியர்கள் பற்றாக்குறை,பொதுச் சுகாதார மருத்துவ மாதுப் பற்றாக்குறை உட்பட பல்வேறு குறைபாடுகள் குறித்தும் விஷேடமாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலை தள வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்பட்டதற்கான ஆவணங்கள் வைத்தியசாலையில் இல்லாமை போன்ற விடயங்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை ... Read More »

காரணமின்றி மாணவியை விலக்கிய அதிபருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

human-rights-commission-of-sri-lanka

-க.கிஷாந்தன் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பிரபல உயர்தர பாடசாலை ஒன்றில் உயர்தரம் கற்கும் தனது மகளை எந்த வித காரணங்களுமின்றி அதிபர் விலக்கியுள்ளதாக அவரின் தந்தை விசனம் தெரிவித்துள்ளார். அட்டன் கல்வி வலய பாடசாலை ஆசிரியர் ஒருவர் தனது மகளை பின் தொடர்ந்து இடையூறு செய்து வந்தததால் இது குறித்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்ததோடு கல்லூரி நிர்வாகத்திற்கு அறிவித்திருந்தார். இதனிடையே  குறித்த ஆசிரியர் தனது மகள் வகுப்பு மாணவன் ஒருவர் மூலமே மகளுக்கு இடையூறுகள் செய்து வந்ததாக தெரியவந்துள்ளது. இதையடுத்து பெற்றோர்களிடம் ... Read More »

ஞானசார தேரரை கண்ட இடத்தில் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

galagodaatte-gnanasara

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக மத்துகம மஜிஸ்திரேட் நீதிமன்றம் கண்ட இடத்தில் கைதுசெய்வதற்கான வாரண்ட் ஒன்றை பிறப்பித்துள்ளது. கடந்த பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது களுத்துறை வெளிபென்ன பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரைக்குள் பிரச்சாரக் கூட்டமொன்றை நடத்தியதால் ஞானசார தேரர் தேர்தல் சட்டங்களை மீறியதாக வழக்கு தொடரப்பட்டது. பிரச்சாரக் கூட்டத்தை பொது இடத்தில் நடத்துவதற்கு பொதுபல சேனாவிற்கு அனுமதி வழங்கியிருந்த போதிலும் முன்னறிவித்தல் எதுவுமின்றி பிரச்சாரக்கூட்டத்தின் இடத்தை மாற்றியதாக வெளிபென்ன பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பான வழக்கு ... Read More »

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் தாயார் காலமானார்

janaza

-பழுலுல்லாஹ் பர்ஹான் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் தாயார் அலியார் பாத்தும்மா (வயது 86) இன்று (19.11.2015) வியாழக்கிழமை அதிகாலை காலமானார் (இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்.) சுகவீனமுற்றிருந்த மேற்படி பாத்தும்மா இன்று அதிகாலை புதிய காத்தான்குடி முகைதீன் ஜும் ஆப்பள்ளிவாயல் வீதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து காலமானார். இவரின் ஜனாசா நல்லடக்கம் காத்தான்குடி முகைதீன் மெத்தைப்பெரிய ஜும்ஆப்பள்ளிவாயலில் இன்று வியாழக்கிழமை அஸர் தொழுகையின் பின்னர் ஜனாஸா தொழுகை நடாத்தப்பட்டு அதே பள்ளிவாயல் மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். மேற்படி அலியார் பாத்தும்மா ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg