Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
பிரதான செய்திகள் | OnlineCeylon | Page 5
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் (page 5)

பிரதான செய்திகள்

மத்திய மாகாண வரலாறு பாட வினாத்தாளில் குளறுபடிகள் – ஆசிரியர்களும் மாணவர்களும் விசனம்

varalaru exam paper

-க.கிஷாந்தன் மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் மூன்றாம் தவணை பரீட்சைக்காக தரம் 10ற்கு அச்சிட்டு வெளியிடப்பட்ட வரலாறு பாட வினாத்தாளில் குளறுபடிகள் காணபட்டுள்ளதாக ஆசிரியர்களும், மாணவர்களும் குற்றசுமத்தியுள்ளனர். மத்திய மாகாண கல்வி திணைக்களத்திற்குட்பட்ட பாடசாலைகளில் 18.11.2015 அன்று புதன்கிழமை இடம் பெற்ற வரலாறு பாடப்பரீட்சையின் போது மாணவர்களுக்கு வழங்கபட்ட வினாத்தாளில் குளறுபடிகள் காணபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. குறித்த வினாத்தாளில் வழங்கபட்டுள்ள அறிவுறுத்தல்கள் இவ் வினாப்பத்திரம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளதாகவும், முதலாம் பகுதியில் முதலாவது வினாவிற்கும், இரண்டாம் பகுதியில் 05 வினாக்களுக்கும் விடையளிக்குமாறு மொத்தம் 06 வினாக்களுக்கு ... Read More »

குருநாகல் மல்லவபிட்டியில் இடம்பெற்ற விபத்தில் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு

malwapitiya accident

-க.கிஷாந்தன் குருநாகல் மல்லவபிட்டியில் 18.11.2015 அன்று நண்பகல் வேளையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த முச்சக்கரவண்டி குருநாகல் மல்லவபிட்டி பள்ளிக்கு அருகில் வைத்து பஸ் வண்டி ஒன்றுடன்  மோதியதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கரவணடியில் இருந்த மேலும் இருவர் படுங்காயமடைந்து குருநாகல் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் அங்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் பரீனா உம்மா (38 வயது) என்பவரும் சபீனா (45வயது) என தெரியவந்துள்ளது. குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி, சாரதியின் தாயார் மற்றும் ... Read More »

முஸ்லிம்களுக்கும் சிறுபான்மைகளுக்கும் பாதிப்பு : உலமா கட்சி

ulama-Party

-எஸ்.அஷ்ரப்கான் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிப்பதும், தேர்தல் முறையை மாற்றுவதும் சிறுபான்மை மக்களின் கருத்துக்களை உதாசீனம் செய்யும் பேரினவாத சிந்தனையாகும் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. இது பற்றி அக்கட்சி தலைவர் கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை என்பது சிறு பான்மை மக்களுக்கு அதிகம் நன்மையளிப்பதாகும். இதில் சில குறைபாடுகள் இருந்தாலும், நிறை வேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக நீக்காது ஒரு சில மாற்றங்களை மட்டும் கொண்டு வரவேண்டும் என்பதே உலமா கட்சியின் தொடர்ச்சியான ... Read More »

அரசாங்கத்தை கவிழ்க்க அமைச்சர்களை அழைக்கும் மஹிந்த

Mahinda-Rajapaksa

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மனமுடைந்து ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வரும் அமைச்சர், உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி வேறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதுவரையில் பல அமைச்சர்கள் அரசாங்கத்தை விமர்சித்து கருத்து வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நல்லாட்சி என்று ஒன்றும் இல்லை என அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களினால் கருத்து வெளியிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலைமையினுள் அமைச்சு பதவிகளில் இருந்து விலகி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியில் இணையுமாறும் முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர் மற்றும் உறுப்பினர்களிடம் கோரிக்கை ... Read More »

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு அவன்ட்கார்ட் ஊழியர்கள் கண்டனம்

rajitha

அவன்ட் கார்ட் நிறுவன ஊழியர்கள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் நடவடிக்கைகள் தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவன்ட் கார்ட் நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் அபிமானிகள் ஒன்றிணைந்து அவன்ட் கார்ட் நிறுவனத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான சங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் முதலாவது செய்தியாளர் சந்திப்பு நேற்று பிட்டகோட்டே பிரதேசத்தில் நடைபெற்றிருந்தது. இதன் போது கருத்து வெளியிட்டுள்ள அவன்ட் கார்ட் ஊழியர்கள், ஒருசில பல் வைத்தியர்கள் (அமைச்சர் ராஜித சேனாரத்ன) பல் பிடுங்கும் தொழிலின் ஊடாக கப்பல்கள் வரை கொள்வனவு செய்துள்ளார்கள். அவர்களின் வருமானத்தை வைத்துப் பார்க்கும்போது ... Read More »

அலரிமாளிகைக்கு தனிவாகனத்தில் வரவேண்டாம் – அரச அதிகாரிகளுக்கு பிரதமர் கண்டிப்பான உத்தரவு

PM RANIL WIKI

அலரி மாளிகை வைபவங்கள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு வருகை தரும் அரச அதிகாரிகள் தனி வாகனங்களில் வரக்கூடாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளார். கடந்த வாரம் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றுக்கு வருகை தந்த அரச அதிகாரிகள் 15 பேர் 16 வாகனங்களைப் பயன்படுத்தியிருந்தனர். அவர்களில் ஒரு அதிகாரி வரும்போது வந்த வாகனம் சற்று நேரம் கழித்து அவரது மனைவியின் தேவைக்காக புறப்பட்டுச் சென்றுவிட, அவர் மீண்டும் வேறொரு வாகனத்தை வரவழைத்து கலந்துரையாடலின் முடிவில் புறப்பட்டுச் சென்றுள்ளார். இது குறித்து ... Read More »

வரவு செலவுத்திட்டத்தில் வசதிபடைத்தவர்களுக்கு வரி அதிகரிப்பு – பொருட்கள் மீதான வரிகுறைப்பு

ravi

எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வசதிபடைத்தவர்களுக்கான வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படவுள்ளன. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு நெருக்கமான தரப்புகளிலிருந்து இது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. வசதி படைத்த செல்வந்தர்கள் இதுவரை காலமும் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரியை ஏமாற்றி மோசடி செய்வதன் ஊடாக பெரும் வரி இழப்பை ஏற்படுத்தி வந்துள்ளார்கள். இதனைக் கருத்திற் கொண்டு அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தில் புதிய வரிகள் ஊடாக அவர்களிடமிருந்து உரிய வரிகளை அறவிட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதே நேரம் பொதுமக்களின் வாழ்க்கைச் செலவைக்கு குறைக்கும் ... Read More »

மீண்டும் மஹிந்த ராஜபக்ச விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்

mahinda raja

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நாளையதினம் பாரிய ஊழல் மோசடிகளுக்கு எதிரான ஜனாதிபதி ஆணைக்குழு முன் பிரசன்னமாகுமாறு கோரப்பட்டுள்ளது. ஐடிஎன் தொலைக்காட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைப் பணம் தொடர்பிலேயே அவர் அழைக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே நான்கு தடவைகள் மஹிந்த, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னாள் பிரசன்னமானார். இதேவேளை ஐடிஎன் தொலைக்காட்சியின் உள்ளக கணக்காய்வு தலைவர் மஞ்சுள அழகியவன்ன வழங்கிய முரண்பட்ட வாக்குமூலம் காரணமாக வாக்குமூலங்கள் ஒத்திவைக்கப்பட்டு நாளை மற்றும் நாளைமறுதினம் இடம்பெறுகின்றன. இந்த விடயம் தொடர்பில் ஏற்கனவே முன்னாள் அமைச்சர்கள் கெஹலிய ரம்புக்வெல்ல, ... Read More »

பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்புவதற்கு எதிராக நடவடிக்கை

Sri-lanka-bus

பஸ்களில் அதிக சத்ததுடன் பாடல்களை ஒலிபரப்பு செய்வதினால் பயணிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வியடம் தொடர்பில் பயணிகளிடம் இருந்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சபையின் தலைவர் பேராசிரியர் லால் தர்மசிறி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கைள் எடுக்கப்படும் எனவும் சபை தலைவர் தெரிவித்துள்ளார். பயணிகளிடம் இருந்து கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமைய விசாரணைகளை முன்னெடுக்குமாறு மத்திய சுற்றாடல் சபையின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் பேராசிரியர் லால் தர்மசிறி கூறியுள்ளார் இது தொடர்பிலான ... Read More »

பாரிஸ் தாக்குதலுக்கு அமைச்சர் பைசல் முஸ்தபா கண்டனம்

faizer Mustafa

பிரான்ஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், இந்தத் தாக்குதல் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். பிரான்ஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பிரான்ஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைக் கேள்வியுற்றதும் நான் அதிர்ச்சிக்குள்ளாகியது மட்டுமல்லாமல், கவலையிலும் மூழ்கிப் போனேன். உண்மையில் இந்தத் தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இவ்வாறான மிகவும் மோசமான தாக்குதல்களை இலங்கைவாழ் முஸ்லிம்களும் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். இஸ்லாம் மார்க்கமும் நிராகரிக்கின்றது. இச்சந்தர்ப்பத்தில் ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg