Close
Breaking News
Home » பிரதேச செய்திகள்

பிரதேச செய்திகள்

கந்தளாயில் வெளிநாட்டு சாரய போத்தல்களுடன் இருவர் கைது

arrested-

-எப்.முபாரக்      சட்டவிரோதமான முறையில் முச்சக்கரவண்டியொன்றில் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டு சாராய போத்தல்கள் கொண்டு சென்ற இருவரை ஜயந்திபுர பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (22) மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.              கந்தளாயில் இருந்து சேருநுவரவிற்கு முச்சக்கரவண்டியில் அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற போதே போக்குவரத்து கடமைகளில் நின்ற பொலிஸாரினால் குறித்த முச்சக்கர வண்டியை நிறுத்தி மேற்கொண்ட போதே வெளிநாட்டு சாரயப் போத்தல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.               சந்தேக நபர்களினால் பயன்படுத்தப் பட்ட முச்சக்கரவண்டியும், சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டுவருவதாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ... Read More »

கிண்ணியாவில் கஞ்சா வைத்திருந்தவருக்கு சரீர பிணை

law-court

-எப்.முபாரக் 1.8 கிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பேரில் கைது செய்யப்பட்ட கிண்ணியா பெரியாற்றமுனையைச் சேர்ந்த 60 வயதான சந்தேக நபரை, 1 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்வதற்கு  திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். முஹீத் சனிக்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார். குறித்த நபர், திருகோணமலை, சீனக்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து,  கிண்ணியாவிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற நபரை சோதனைக்குட்படுத்திய போது, அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார்மேற்கொண்டு வருவதாக ... Read More »

SLMC யின் பொத்துவில் பிரதேச அமைப்பாளராக எம்.எஸ்.வாசீத் நியமனம்

safeek

-சப்னி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பொத்துவில் பிரதேசத்துக்கான அமைப்பாளராக பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.வாசீத் அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவ் நியமனக்கடிதத்தினனை சென்ற புதன் கிழமை அதாவது 2015.11.18ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் உத்தியோகபூர்வமாக கையளித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொத்துவில் அமைப்பாளராக செயற்ப்பட்டு வந்த எம்.ஏ.மஜீத் கடந்த வருடம் அக்கட்சியிலிருந்து விலகியமையால் அவரின் வெற்றிடத்துக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Read More »

அட்டன் பகுதியில் கஞ்சாவுடன் 4 சிறுவர்கள் கைது

arrested-

-க.கிஷாந்தன் அட்டன் பகுதியில் கஞ்சாவுடன் 4 சிறுவர்கள் 21.11.2015 அன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு நகரிற்கு தொழில்புரிய செல்லவிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர்களான 4 சிறுவர்களும் அட்டன் பஸ் நிலையத்திற்கு அருகாமையில் வைத்து இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த விசேட தகவலையடுத்தே குறித்த சந்தேக நபர்கள் நான்கு பேரையும் விசாரணைக்குட்படுத்தும் போது நான்கு பேரிடமும் கஞ்சா இருந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கஞ்சா பக்கட்கள் நான்கினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக ... Read More »

பெண்ணின் கழுத்திலிருந்த தாலிக்கொடியும் தங்கச்சங்கிலியும் கொள்ளை

unnamed-521

-எப்.முபாரக்     திருகோணமலை திருஞானசம்பந்தர் வீதியில் அமைந்துள்ள சில்லறைக் கடையொன்றில் தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று வெள்ளிக்கிழமை மாலை 6.45 மணியளவில் குறித்த கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற  இரண்டு இளம் இளைஞர்களால் தங்கச் சங்கிளி கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும், குறித்த கடையில் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக வந்திருந்த பெண்னொருவரின் கழுத்திலிருந்த தாலி மற்றும் தங்கச் சங்கிலி கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றனர். Read More »

திருகோணமலை கடற்கரையில் இனந்தெரியாத ஒருவரின் சடலம் கண்டெடுப்பு

Covered-dead-body

-எப்.முபாரக்      திருகோணமலை கடற்கரையில் வெள்ளிக்கிழமை(20) மாலையில் சுமார் 5.30 மணியளவில் அடையாளம் தெரியாத சடலம் கரை ஒதுங்கியது.அதைகண்டபொதுமக்கள் திருகோணமலை துறைமுகப்பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸாராhல் சடலம் கைப்பற்றப்பட்டு திருகோணமலை தள வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.சடலம் 48வயதுடைய ஒருவராக இருக்கலாம் எனவும் மது அருந்தியயே பின்பே கடலுக்குச் குளிக்கச் சென்ற வேளையில் நீரிழ் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.     சடலம் தற்போது திருகோணமலை வைத்தியசாலையின் பிரேதஅறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் உரியவர்கள் சடலத்தினை பொறுப்பேற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றதது. Read More »

பொகவந்தலாவையில் 6 வர்த்தக ஸ்தாபனங்களில் கொள்ளை

kollai

-க.கிஷாந்தன் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட டின்சின் நகரில் 20.11.2015 அன்று  அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் 06 வர்த்தக ஸ்தாபனங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக  பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிகாலை 2.00 மணியவில் இனந் தெரியாதவர்களால் வர்த்தக ஸ்தாபனங்கள் உடைக்கப்பட்ட நிலையில்,  வர்த்தக உரிமையாளர் ஒருவர் சத்தமிட்டதை அடுத்து இனம் தெரியாத திருடர்கள் தப்பி சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இரண்டு தங்க விற்பனை நிலையங்கள், ஒரு புடவைக்கடை, மூன்று பலசரக்கு கடைகளுமே இவ்வாறு இனம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இதில் ஒரு ... Read More »

தொழில்நுட்ப பாடநெறி கிண்ணியா அல்அக்ஸாக் கல்லூரியில் ஆரம்பம்

al aqsa kinniya

-எப்.முபாரக்                    அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட தொழிநுட்ப பாட நெறி திருகோணமலை தி/கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியில் மாணவர்களுக்கு வீட்டு மின் சுற்று பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்ட போது மாணவர்கள் சிறப்பாக பயிற்சிகளில் ஈடுபடுவதைப் காணலாம். Read More »

குருநாகல் மல்லவபிட்டியில் இடம்பெற்ற விபத்தில் முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு

malwapitiya accident

-க.கிஷாந்தன் குருநாகல் மல்லவபிட்டியில் 18.11.2015 அன்று நண்பகல் வேளையில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த முச்சக்கரவண்டி குருநாகல் மல்லவபிட்டி பள்ளிக்கு அருகில் வைத்து பஸ் வண்டி ஒன்றுடன்  மோதியதில் ஒருவர் ஸ்தலத்தில் உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கரவணடியில் இருந்த மேலும் இருவர் படுங்காயமடைந்து குருநாகல் போதான வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட பின்னர் அங்கு ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் பரீனா உம்மா (38 வயது) என்பவரும் சபீனா (45வயது) என தெரியவந்துள்ளது. குறித்த முச்சக்கரவண்டியின் சாரதி, சாரதியின் தாயார் மற்றும் ... Read More »

காரைதீவில் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு தொடர்பான செயலமர்வு

karaitheevu

-எம்.எம்.ஜபீர் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு தொடர்பான செயலமர்வு பிரதேச செயலாளர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது கோவை முகாமைத்துவம் தொடர்பாக சிரேஸ்ட முகாமைத்துவ உதவியாளர் பி.மோகன், ஜப்பானிய 5 எஸ் தொடர்பாக அபிவிருத்தி உத்தியோகத்தர் மு.ரமணீதரன், மக்கள் பட்டயம் தொடர்பாக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. திலகா கிருபைராஜா மற்றும் சமூக அபிவிருத்தி உதவியாளர் ஏ.எம்.எம்.சபீர் ஆகியோர்கள் விரிவுரைகளை  வழங்கினர். காரைதீவு பிரதேச செயலக உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg