Close
Breaking News
Home » பிரதேச செய்திகள் (page 10)

பிரதேச செய்திகள்

பதினெட்டு திருட்டு வழக்குகள் உடைய ஒருவருக்கு விளக்கமறியல்

arrest

(எப்.முபாரக்)                    திருகோணமலை பிரதேசத்தில் திருட்டு பொருட்களை தம் வசம் வைத்திருந்தமை,மற்றும் விற்பனை செய்தமை,திருடியமை போன்ற பதினெட்டு திருட்டு வழக்கள் உடைய சந்தேக நபரை அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிபதி நேற்று சனிக்கிழமை(24)உத்தரவிட்டார்.   திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லவ்லேன்,அன்புவழிபுறம்,மற்றும் பாலையூற்று போன்ற பகுதிகளில் சந்தேக நபருக்கெதிராக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.    அலைபேசிகள்,மடிக்கணணி,பெறுமதியான கைக்கடிகாரம் மற்றும் இலத்திரணியல் பொருட்களும் திருடியுள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய ... Read More »

கொழும்பு அல்-ஹக்கீம் வித்தியாலய பரிசளிப்பு நிகழ்வு – முஜிபுர் ரஹ்மான் & மரிக்கார் பங்கேற்பு

al hakeem7

(ஏ.எஸ்.எம்.ஜாவித்) கொழும்பு-12 அல்-ஹக்கீம் வித்தியாலயத்தின் பரிசளிப்பு நிகழ்வு மாளிகாவத்தை வை.எம்.எம்.ஏ கேட்போர் கூடத்தில் பாடசாலை அதிபர் திருமதி மர்லியா சித்தீக் தலைமையில் சனிக்கிழமை(24) நடைபெற்றது. பிரதம அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான் மற்றும் எஸ்.எம்.மரைக்கார் (மரிக்கார்) ஆகியோர்கள் கலந்து கொண்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம்.மரைக்கார் ஆகியோர் மாணவர்களுக்கான பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினர். பாடசாலை அதிபர் திருமதி மர்லியா சித்தீக், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கான எம். முத்தலிப், அப்துல் அஸீஸ் ஆகியோர்கள் இதில் கலந்து கொண்டதுடன் மாணவ, மாணவிகளின் கலை ... Read More »

இளைஞர் யுவதிகளுக்கான ஊடகச் செயலமர்வு

images

(எஸ்.அஷ்ரப்கான்) தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஆதரவுடன் ஊடகத்தின் குரல் சாய்ந்தமருது லக்ஸ்டோ மீடியா ஸ்ரீ லங்கா நிறுவனம், இளைஞர் யுவதிகளுக்கான ஊடகச் செயலமர்வு ஒன்றை நடாத்தவுள்ளதாக அந்நிறுவன தலைவர் மருதூர் ஏ.எல். அன்ஸார் தெரிவித்தார். ஆரோக்கியமிக்க ஊடக சமூகத்தை உருவாக்கும் சமூக நல விசேட திட்டத்தின் கீழான இச்செயலமர்வில், வானொலி மற்றும் தொலைக் காட்சி போன்ற ஊடகங்களில் அறிவிப்பாளராக, தயாரிப்பாளராக பணியாற்ற விரும்பும் இளைஞர்,யுவதிகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறமுடியும். நிந்தவூர் பிரதேச செயலகத்தில் காலை 8.30 முதல் மாலை 3 ... Read More »

பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் கைது

arrested-

(எப்.முபாரக்)                   கந்தளாய் பிரதேசத்தில் பல கடைகள் உடைப்பு சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை சனிக்கிழமை(24) கைதுசெய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.     சந்தேக நபருக்கு கந்தளாய் நகரம் மற்றும் முள்ளிப்பொத்தானை மற்றும் பேராறு போன்ற பிரதேசங்களிலும் ஐந்துற்கும் மேற்பட்ட கடைகள் உடைப்பு சம்பவங்களுடன் தொடர்பு இருப்பதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். உடைக்கப்பட்ட கடைகளில் பணம் மற்றும் மற்றும் பெறுமதியான பொருட்களும் திருடியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.                         ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த ... Read More »

வவுனியாவில் அதிகரிக்கும் கத்தி முனைத் திருட்டுக்கள்

Cash-DacoityC_0

வவுனியாவில் கத்தி முனையில் இடம்பெறும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதால் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் ஒரே இரவில் மூன்று திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்ததாவது, வவுனியாவில் இந்த மாதத்தில் இதுவரை கத்தி முனையில் ஒரே பாணியிலான நான்கு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. கோவில்குளம், தட்சன்குளம், சாம்பல் தோட்டம் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தது. இதன் பின் கடந்த வெள்ளிக்கிழமை ... Read More »

புண்ணையடியிலிருந்து ஈச்சிலம்பற்றுக்குச் செல்ல மேம்பாலம் அமைக்குமாறு கோரிக்கை

Bridge

(எப்.முபாரக்) திருகோணமலை வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புண்ணையடி பிரதேசத்திலிருந்து ஈச்சிலம்பற்று கிராமத்திற்கு பாதையினூடாக செல்பவர்களுக்கு எவ்வித பாதுகாப்பு மேலங்கிகளும் இல்லாமையினால் இப்பாதையினூடாக தினமும் பாடசாலைக்குச் செல்லும் மாணவர்களும் பொது மக்களும் பயத்தின் மத்தியில் இப்பாதையினூடாக பயணிக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.இந்த இழுவை இயந்திரம் பொருத்தப்படாமையினால் இதில் பயணிப்போர் கையினால் பாதையை இழுத்துச் செல்ல வேண்டியுள்ளதோடு அவ்வாறு இழுத்துச் செல்வதற்கு பிரயாணிகள் அதிகமானோர் வரும் வரை காத்துக்கிடக்க வேண்டியுள்ளதாகவும் இப்பாதையூடாக பயணிப்போர் தெரிவிக்கின்றனர்.              புண்ணையடியில் இருந்து ஈச்சிலம்பற்றுக்குபாதையியூடாக செல்லும் தூரம் 100 மீற்றருக்கு குறைவாக காணப்படுவதனால் ... Read More »

வெள்ளம் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்ததால் 20 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிப்பு

maskelitya flood3

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அப்கட் கவரவில பாடசாலை சந்தி பகுதியில் 24.10.2015 அன்று சனிக்கிழமை மாலை 4 மணியளவில் பெய்த கடும்மழை காரணமாக மவுஸ்ஸாக்கலை நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மஸ்கெலியா ஓயா பெருக்கெடுத்ததால் வெள்ளம் அப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கும், கடைகளுக்கும் உட்புகுந்ததால் 20 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர். எனினும் நீர் வடிந்து சென்றதன் பின் தங்களுடைய வீடுகளுக்கு சென்று விட்டனர். அத்தோடு ஒரு வீட்டின் பின்பகுதியில் இருந்த அறையும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இடைவிடாது பெய்துவரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அத்தோடு இப்பகுதியில் ... Read More »

வாள்வீச்சுக்கு இலக்காகி கராத்தே வீரர் பலி – அநுராதபுரத்தில் சம்பவம்

kaththi

அனுராதபரம் – கடபனஹா – முதிதா மாவத்தையில் உள்ள இரவு விடுதி ஒன்றின் உரிமையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். முகத்தை மூடியவாறு நேற்று இரவு குறித்த விடுதிக்குள் நுழைந்த சிலர், அவரை தாக்கி கொலை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கராட்டே பயிற்றுவிப்பாளரான 57 வயதுடைய அவர், அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவற்துறை ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. சுமார் 20 பேர் வரையில் முகமூடி அணிந்து வந்து இந்த தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. அவர்களால் விடுதியின் முகாமையாளர் உள்ளிட்ட 3 சேவையாளர்கள் ... Read More »

நல்லதோர் வீணை நூல் வெளியீடு

book rel

(எப்.முபாரக்) கேணிப்பித்தன் ச.அருளானந்தம் எழுதிய நல்லதோர் வீணை நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை(24) மாலை 4.00மணிக்கு திருகோணமலை கோணேஸ்வரா  இந்துக் கல்லூரியின் சம்பந்தர் மண்டபத்தில் கணக சபாபதி சரவணபவன் தலைமையில் கோலாகளமாக நடைபெற்றது.   இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்வி,கலாச்சார அமைச்சர் சி.தண்டாயுதபாணி திருகோணமலை முன்னாள் வலயக்கல்விப் பணிப்பாளர் ராசரத்தினம் மற்றும் களைஞர்கள் எழத்தாளர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தார்கள். Read More »

புத்தளம், தில்லையடியில் பாழடைந்த வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்

death body thillaiyadi

புத்தளம், தில்லையடி பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி நடத்தப்பட்ட தேடுதலில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதே பிரதேசத்தில் வசிக்ககூடிய 50 வயதுடைய பெண்ணொருவரின் சடலம் இதுவென்று ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. குறித்த பெண் எவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என்பது தொடர்பில் இதுவரை தெரியவில்லை என்பதுடன், புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg