Close
Breaking News
Home » பிரதேச செய்திகள் (page 2)

பிரதேச செய்திகள்

கந்தளாய் பேராறு பொது விளையாட்டு மைதானத்தில் கஞ்சா புகைத்த இரு இளைஞர்கள் கைது

arrested-

-எப்.முபாரக்                    கந்தளாய் பேராறு பொது  விளையாட்டு மைதானத்தில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை செவ்வாய் கிழமை(17)இரவு கைது செய்துள்ளதாக கந்தளாய்பொலிஸார் தெரிவிக்கின்றார்கள்.           கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பொது விளையாட்டு மைதானத்தில் கஞ்சா புகைப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் செயற்பட்ட பொலிஸார் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த சமயம் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.       சந்தேக நபர்கள் இவ்வாறு தினமும் அப்பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் கஞ்சா புகைப்பதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.              23மற்றும் 26வயதுடைய இரண்டு சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணைகள் ... Read More »

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைப்பு

net

-பழுலுல்லாஹ் பர்ஹான் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பொது மக்களுக்கு சுகாதார சேவையை வழங்கி வரும் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு ரெயின்கோநிறுவனத்தினால்; சுமார் 1500 ரூபா பெறுமதியான 50 நுளம்பு வலைகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அன்பளிப்பு செய்யப்ட்ட மேற்படி நுளம்பு வலைகளை வைத்தியசாலை நிருவாகத்திடம் கையளிக்கும் நிகழ்வு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் ஏற்பாட்டில் 17-11-2015 இன்று செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாiயின் கேட்போர் கூடத்தில் மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்ச்சகரும்,வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழுவின் தலைவருமான டாக்டர் எஸ்.எப்.அல்மீடா தலைமையில் இடம்பெற்றது. இதன் ... Read More »

தெனியாய அக்குரஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழப்பு

ukrein

-க.கிஷாந்தன் மாத்தளை தெனியாய அக்குரஸ்ஸ பகுதியில் 17.11.2015 அன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விபத்தில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். தெனியாய அகுரஸ்ஸ பிரதான வீதியின் பிட்டபெத்தர தென்னபிட்ட என்ற இடத்தில் முற்பகல் நடந்த விபத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். காலியில் இருந்து சிங்கராஜா வனாந்தரத்தை பார்வையிட 5 நபர்கள் அடங்கிய குழு ஒன்று 4 மோட்டார் சைக்கிள்களில் சென்ற போது, இவர்களில் ஒருவர் பிட்டபெத்தர தென்னபிட்ட என்ற இடத்தில் லொறியை முந்திச் செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பிட்டபெத்தர பொலிஸார் ... Read More »

மூதூர் இத்திக்குளம்,பாட்டாளிபுரம் செல்லும் பஸ்சேவையை ஏற்படுத்தி தருமாறு மக்கள் கோரிக்கை

sltb

-எப்.முபாரக் மூதூர் கிழக்கில் இத்திக்குளம் மற்றும்   சின்னக்குளம் பிரதேசங்களுக்கு இடைப்பட்ட பிரதான வீதி அண்மையில் பெய்த மழையினால் சேதமடைந்துள்ளமையினால், அவ்வீதியூடான பஸ் சேவை தடைப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இத்திக்குளம், இலக்கந்தை, பாட்டாளிபுரம், நீணாக்கேணி, நல்லூர், சீனன்வெளி ஆகிய பிரதேசங்களிலிருந்து மூதூர் நகருக்குச் செல்லும் பஸ் சேவையே தடைப்பட்டுள்ளது. மேற்படி பிரதேசங்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் பின்தங்கியுள்ளது. இப்பிரதேசங்களில்  வைத்தியசாலைகளோ, வங்கிகளோ, பெரிய கடைகளோ கிடையாது. இங்கிருந்து  நாளொன்றுக்கு இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் ஒரு தடவை மாத்திரமே  15 கிலோமீற்றருக்கு அப்பாலுள்ள மூதூருக்கு சேவையில் ... Read More »

திருகோணமலை மாவட்டத்தில் வீடமைப்புக்கான காசோலை வழங்கள்

98f5340a587e5490bcb15a263dc7c7ff_XL

-எப்.முபாரக்    வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச அவர்களின் வழிகாட்டலில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 25 வீடமைப்பு திட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசத்திற்குறிய வீட்டு திட்டம் மூதூர் பிரதேச செயலக பிரிவின் தோப்பூர் இக்பால் நகரில் அமைக்கபடவிருக்கின்றது. இவ் வீடமைபிற்கான ஆரம்ப கொடுப்பனவுக்குரிய காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை(16) மூதூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. பிரதேசசெயலாளர் திரு. யூசுப் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மகரூப் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்ப ... Read More »

இம்ரான் மஹ்ரூப்பின் நிதி ஒதுக்கீட்டில் கிண்ணியாவில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு

imran sport

-எப்.முபாரக்                    திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்பின் நிதி ஒதுக்கீட்டின் கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஏழு விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும், இரண்டு மாதர் சங்கங்களுக்கு தையல் இயந்திரங்களும் திங்கட்கிழமை (16)மாலையில் கிண்ணியா பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.                 கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஏழு விளையாட்டுக் கழகங்களுக்கு இரண்டு இலட்சம் ரூபாவும்,மாதர் சங்கங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாவும் ஒதுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. Read More »

முச்சக்கரவண்டி ஒன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து – நான்கு பேர் படுங்காயம்

3weal

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் 16.11.2015 அன்று இரவு 9 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் படுங்காயத்திற்குள்ளாகியுள்ளனர். அட்டனிலிருந்து நோர்வூட் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று அட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா பிரதேசத்தில் பிரதான வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மூன்று இளைஞர்களும் மற்றும் முச்சக்கரவண்டியின் சாரதியும் இவ்வாறு படுங்காயங்களுக்குள்ளாகி டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வைத்தியா்கள் தெரிவித்தனா். குறித்த முச்சக்கரவண்டியின் வேகத்தைகட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக அட்டன் ... Read More »

அனுமதிப் பத்திரமின்றி முதிரை மரக்குற்றிகளை கொண்டு சென்ற மூவர் விளக்கமறியலில்

arrest

-எப்.முபாரக்                    அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமான முறையில் முதிரை மரக்குற்றிகள் பதின் மூன்றினை கொண்டு சென்ற மூன்று பேரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்றம் திங்கட்கிழமை(16) உத்தரவிட்டுள்ளது.              சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயந்திபுரவிலிருந்து சமகிபுரவிற்கு பதின் மூன்று முதிரை மரக்குற்றிகளை உழவு இயந்திரமொன்றில் கொண்டு சென்ற போதே பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸார் திங்கட்கிழமை அதிகாலை 3.00மணியளவில் மூன்று சந்தேக நபர்களையும் உழவு இயந்திரத்தையும் கைப்பற்றியதாகவும் சூரியபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உழவு இயந்திரம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதோடு    சந்தேக நபர்கள் மூன்று ... Read More »

இறம்பொடையில் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து வாகன விபத்து – ஐவர் காயம்

ramboda accident

(க.கிஷாந்தன்) நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற (எல்ஏச்) வாகனம் ஒன்று 15.11.2015 அன்று இரவு 11 மணியளவில் கொத்மலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இறம்பொடை கெரண்டியல பிரதேசத்தில் பிரதான வீதியை விட்டு விலகி 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 05 பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு பின் கம்பளை வைத்தியசாலைக்கு மாற்றபட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக பேராதனை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காயத்துக்குள்ளானவர்கள் கொழும்பில் இருந்து நுவரெலியாவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று மீண்டும் கொழும்பு ... Read More »

திருகோணமலை அரச வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் கையளிப்பு

motor

(எப்.முபாரக்) திருகோணமலை மாவட்டத்தில் வெளிக்கள அரச உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் பெண்களுக்கு சலுகையடிப்படையில் அரசாங்கத்தினால் மோட்டார் சைக்கிள் வழங்கும் மூன்றாம் கட்ட நிகழ்வுகள் இன்று திங்கட்கிழமை(16)திருகோணமலை பிரட்றிக் கோட்டைக்கருகாமையில் அமைந்துள்ள சங்கமித்தை பௌத்த விகாரைக்கருகில் வைத்து திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்றது. கடந்த 2014-12-31ஆம் திகதிக்கு முன்னர் கட்டணம் செலுத்திய 470பேருக்கு இம்மோட்டார் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டது.                 வெளிக்கள அரச உத்தியோகத்தர்களுக்கான மோட்டார் சைக்கிள்களை மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கி வைத்தார்.                            நீண்ட நாட்களாக எதிர்பார்புடன் இருந்த பெண் உத்தியோகத்தர்கள் இது ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg