Close
Breaking News
Home » பிரதேச செய்திகள் (page 3)

பிரதேச செய்திகள்

போதை வெறி – மனைவியையும் வீட்டையும் மண்ணெண்ணை ஊற்றி எறிக்க முற்பட்ட நபர்

fire

(எப்.முபாரக்)                   திருகோணமலை பிரதேசத்தில் தனது மனைவியையும் வீட்டையும் மண்ணெண்ணை ஊற்றி எறிப்பதற்கு முயற்சி செய்த சந்தேக நபயொருவரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஞாயிற்றுக்கிழமை (15) திருகோணமலை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.             திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பகுதியில் சந்தேக நபர் மனைவியோடு ஏற்பட்ட முரண்பாடு காரணமாக சாராயம் குடித்துக்கொண்டு சனிக்கிழமை(14) இரவு வீட்டுக்குச் சென்று மனைவியையும், வீட்டையும்,மண்ணெண்ணை ஊற்றி தீ வைப்பதற்கு முற்பட்ட போது மனைவி ஊக்குரலிட்டு ... Read More »

பொலன்னறுவையில் கடைத்தொகுதியொன்றில் தீ – ஒருவர் பலி

polonnaruwa kaduruwela kada dekak gini gani (7)

பொலன்னறுவை, கதுருவெல நகரிலுள்ள வியாபார நிலையமொன்றில் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் ஏற்பட்ட தீயில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மன்சார ஒழுக்கு காரணமாக இந்த தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மின்சார தொடர்பொன்றை மேற்கொண்டிருக்கும் போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கதுருவெல முஸ்லிம் கொலனியில் வசிக்கும் 42 வயதுடைய ஒருவரே தீயில் சிக்கி மரணமடைந்துள்ளார். இந்த தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சுமார் ஒரு மணி நேரம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தமன்கடுவ பிரதேச சபை தீயணைப்புப் பிரிவு, பொலன்னறுவைப் பொலிஸார் மற்றும் கதுருவெல பிரதேச வாசிகள் ... Read More »

திருமலையில் அடை மழை காரணமாக 1500 குடும்பங்களுக்கு மேல் பாதிப்பு – அரசாங்க அதிபர்

trincomale

(எப்.முபாரக்)   திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழை காரணமாக 1506 குடும்பங்களைச்சேர்ந்த 5946 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குச்சவௌி பிரதேசத்தில் பாலர் பாடசாலையொன்றில் 40 குடும்பங்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார இன்று ஞாயிற்றுக்கிழமை (15) தெரிவித்தார். மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் பிரதேச செயலாளர்களுக்கான விசேட கூட்டம் இன்று (15) காலை இடம்பெற்றதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். குச்சவௌி -கிண்ணியா-பட்டனமும் சூழலும் பிரதேசங்களில் வௌ்ளநீர் தேங்கி நிற்பதால் பிரதேச சபைகளின் ஊடாக பெக்கோ இயந்திரங்களை பயன்படுத்தி வடிகான்களை ... Read More »

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட பா.உ. இம்றான் மகரூப்

imran flood2

(எப்.முபாரக்) திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழைகாரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் இன்று ஞாயிற்றுக்கிழமை விஜயமொன்றினை மேற்கொண்டார். இதன்போது,கிண்ணியா,தோப்பூர்,புல்மோட்டை,குச்சவளி பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து அப்பகுதி மக்களுக்கு அவசரமாக தேவைப்படும் உதவிகளை செய்து கொடுக்குமாறு அரச உத்தியோகத்தர்களை அறிவுறுத்தியதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கான சமைத்த உணவு வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார். Read More »

புழுதிவயல் SLTJ மர்கஸ் வெள்ளத்தால் பாதிப்பு – தொழுகைக்காக மக்கள் அவஸ்த்தை (படங்கள்)

sltj pvl markas flood

ஸ்ரீலாங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புத்தளம் மாவட்ட புழுதிவயல் கிளையின் மர்கஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தொழுகைக்காக மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். கடந்த வெள்ளிக் கிழமை முதல் பெய்து வரும் அடை மழையால் புழுதிவயல் மற்றும் அதை அண்டிய கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கட்டுள்ளன. இன்றைய தினம் காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் இப்பகுதியில் அதிகமான இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. இதே நிலையில் தொடர்ந்து மழை பெய்தால் இப்பகுதியில் பல வீடுகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பல தசாப்தங்களின் பின்னரே இப்படியானதொரு ... Read More »

மத்தியமுகாம், சவளக்கடை பிரதேசத்திற்கான இளைஞர் காங்கிரஸின் புதிய நிர்வாக தெரிவு

maththiya muham slmc youth

(எம்.எம்.ஜபீர்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்தியமுகாம், சவளக்கடை பிரதேசத்திற்கான இளைஞர் காங்கிரஸின் புதிய நிர்வாக தெரிவு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினரும் மத்தியமுகாம், சவளக்கடை மத்திய குழுவின்  அமைப்பாளருமான ஏ.சீ.நஸார் ஹாஜி தலைமையில் 5ஆம் கொளனி மிராஜ் பல்தேவைக் கட்டிட மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது மத்தியமுகாம், சவளக்கடை அமைப்பாளராக எம்.வீ.நவாஸ், செயலாளராக எம்.அர்சாத், பொருளாளராக எம்.ஐ.எம்.ஜஹான், உப தலைவராக எஸ்.றிபாஸ் மௌலவி, உப செயலாளராக ஏ.எம்.அஸ்லம், கல்வி பிரிவுக்கான செயலாளராக ஆர்.எம்.பாரிஸ், கலாச்சார பிரிவுக்கான செயலாளராக யூ.எல்.எம்.நதீம், சுயதொழிக்கான பிரிவு ... Read More »

திருகோணமலை மாவட்டத்தின் சேருவில தேர்தல் தொகுதியின் எல்லை நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல்

seruvila2

(எப்.முபாரக்)   திருகோணமலை மாவட்டத்தின் சேருவில தேர்தல் தொகுதியின் எல்லை நிர்ணயம் மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் வெற்றிபெறுவது தொடர்பான கலந்துரையாடல் ஐக்கிய தேசியக் கட்சியின் சேருவில தொகுதியின் பிரதான அமைப்பாளரும் ,கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான வைத்தியர் அருண சிறிசேனாவின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (14)மாலையில் கந்தளாயில் நடைபெற்றது. சேருவில தொகுதியில் எதி்ர்வருகின்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் அரசாங்கம் எல்லை நிர்ணய திட்டத்தினை மேற்கொள்ளுமாக இருந்தால் தாம் திருகோணமலை மாவட்டத்தின் சேருவில தொகுதியில் எவ்வாறு மேற்கொள்ளுவது என்ற வகையில் கலந்துரையாடப்பட்டது.அதேபோன்று எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ... Read More »

புத்தளம் புழுதிவயலில் வெள்ளம் – விவசாய நிலங்கள் பாதிப்பு

????

நாட்டின் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. பல பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. குளங்கள் நிரம்பியுள்ளன. மக்களின் இயழ்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்திலும் நேற்று அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள நிலையில் தாழ்நிலப் பகுதிகளில் நீர் நிரம்பி காணப்படுகிறது. நேற்று மதியம் பெய்த கடும் மழையை தொடர்ந்து புழுதிவயல், பணையடிச் சோலை மற்றும் உழுக்காப்பளளம் கிராமங்களில் வெள்ள நீர் நிரம்பி இருப்பதாகவும் அப்பகுதி மக்களின் பிரதான தொழிலான விவசாயமும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் குறிப்பிட்டார். வருடந்தோரும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் ... Read More »

கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் பொகவந்தலாவையில் சத்தியாக்கிரகப்போராட்டம்

saththiyagraha

(க.கிஷாந்தன்) தோட்டத் தொழிலாளர்களுக்குச் சம்பள அதிகரிப்பைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் கூட்டொப்பந்தத் தொழிற்சங்கங்கள் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க வேண்டுமெனக்கோரி பொகவந்தலாவை பிரதான பஸ் நிலையப்பகுதியில் 14.11.2015 அன்று சத்தியாக்கிரகப் போராட்டமொன்றினை தொழிலாளர் தலைவர்கள் மேற்கொண்டனர். தொழிலாளர் தேசிய சங்கத்தின் அம்பகமுவ தொகுதி அமைப்பாளர் பி.கல்யாணகுமார் தலைமையில் இடம் பெற்ற இந்தச்சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொகவந்தலாவைப் பிரதேச தோட்டத் தலைவர்கள் தோட்டத் தலைவிகள் கலந்து கொண்டனர். தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பள உயர்வைப் பெற்றுத்தருவதாக உறுதியளித்த ... Read More »

திருகோணமலை கந்தளாயில் தொடர்சியான அடைமழை தாழ் நிலங்கள் பாதிப்பு

trinco flood1

(எப்.முபாரக்)                   திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (13)காலையில் பெய்வதற்கு அரம்பித்த அடை மழை இன்று சனிக்கிழமை(14)காலை வரை தொடர்ந்து பெய்த வண்ணமாக உள்ளது.இவ்வாறு மழை பெய்து வருவதால் கந்தளாய் பிரதேசத்தில் நெற் செய்கை பண்ணப்படவிருக்கும் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி காணப்படுவதோடு இப்பிரதேசத்தில் இருக்கின்ற கிராமங்களான  பேராறு,மத்ரஸாநகர்,பொட்டம்காடு,மற்றும் ரஜஎல பகுதியில் இருக்கின்ற தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கி காணப்படுகின்றது. வடிகாண்களின் நீர் மட்டம் உயர்ந்து வீதியின் பரவும் அபாய ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg