Close
Breaking News
Home » பிரதேச செய்திகள் (page 4)

பிரதேச செய்திகள்

திருகோணமலையில் உழவு இயந்திரத்துடன் மோதி ஒருவர் உயிரப்பு

accident

(எப்.முபாரக்)     திருகோணமலை – புத்தளம் பிரதான வீதியில் உழவு இயந்திரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் சிவில் பாதுகாப்பு படை சிப்பாய் ஒருவர் வியாழக்கிழமை(12) இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் ஹொரவ்பொத்தானை-சுஹதகம பகுதியைச்சேர்ந்த சரத் (38) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் சடலம் ஹொரவ்பொத்தானை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து இடம்பெற்ற இடத்தை நீதவான் பார்வையிட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உழவு இயந்திரத்தின் சாரதி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஆனாலும் மோட்டார் சைக்கிளில் வந்தவர் தானாகவே விழுந்து உயிரிழந்ததாகவும் ... Read More »

பசும் பொன் வீடமைப்பு திட்ட வீடுகள் கையளிப்பு

pasum pon1

(க.கிஷாந்தன்) இயற்கை அனர்த்ததால் பாதிக்கப்பட்ட மாத்தளை பிட்டகந்தை பகுதியில் 20 குடும்பங்களுக்கான பசும்பொன் வீடமைப்பு திட்டம் நிர்மாணிக்கப்பட்டு 13.11.2015 அன்று மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரத்தினால் பசுமை பூமி எனும் காணி உறுதிப்பத்திரத்துடன் மக்களுக்கு கையளிக்கப்பட்டது. பசும் பொன் வீடமைப்பு திட்டத்தின் மாத்தளை பிட்டகந்தை பகுதியில் 20 வீடுகளை கொண்ட தனித்தனி வீடமைப்பு தொகுதிக்கு ‘ராமானுஜம் புரம் என பெயர் சூட்டி காணி உறுதிப்பத்திரத்துடன்மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் 13.11.2015 அன்று கையளித்தார். இந்த வீடுகள் கையளிக்கும் ... Read More »

தபால் ஊழியர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

post office

(க.கிஷாந்தன்) தபால் ஊழியர்கள் 14 கோரிக்கைகளை முன்வைத்து சுகயீன விடுமுறை என்ற அடிப்படையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அந்தவகையில் 12.11.2015 அன்று நள்ளிரவு முதல் நுவரெலியா மாவட்டத்தில் பிரதான தபால் நிலையங்கள மற்றும் உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் 13.11.2015 அன்று காலை விநியோகிக்கப்படவிருந்த தபால்கள் நிலையங்களில் தேங்கி கிடப்பதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக பொது மக்கள் தங்களுடைய கடிதங்களை பெற்றுக்கொள்வதிலும் அவசர விடயங்களில் ஈடுப்படுவதிலும் முடியாமல் பல்வேறுப்பட்ட அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை 14 கோரிக்கைகளையும் நிறைவேற்றாவிட்டால் ... Read More »

கல்முனை நூரானியா மையவாடியின் மின் விளக்குகள் பழுதடைந்த நிலையில்…. திருத்த ஆளில்லை

burial

(எஸ்.அஷ்ரப்கான்) கல்முனை நூரானியா மையவாடியின் மின் விளக்குகள் மிக நீண்ட காலமாக இரவு வேளையில் ஒளிராமல் காணப்படுவதால் பிரசேவாசிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கின்றனர். நூளாந்தம் பல்லாயிரக்கணக்கான பாதசாரிகள், கடற்றொழிலில் ஈடுபடுவோர், மற்றும் தூர இடங்களிலிருந்து வியாபார நோக்கத்திற்காக இப்பிரதேசத்தை ஊடறுத்து செல்லும் காரைதீவு, பாண்டிருப்பு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர் மற்றும் கல்முனை பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களும் பாரிய சவால்களை எதிர் கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். அதுபோல் இந்த பிரதேசத்தை அண்டியே நூரானியா பள்ளிவாயல் அமைந்திருக்கின்றது. இங்கு ஐந்து நேரத் தொழுகைக்காக ... Read More »

கந்தளாயில் பொது இடத்தில் மதுபானம் அருந்தியவருக்கு தண்டம்

cq5dam.web.1280.1280

(எப்.முபாரக்)   பொது இடத்தில் மதுபானம் அருந்திய ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதனைத் செலுத்தத் தவறும் பட்சத்தில் மூன்று மாதம் சிறைதண்டனை விதித்து கந்தளாய் நீதிமன்றம் திங்கட்கிழமை(9)உத்தரவிட்டுள்ளது. கந்தளாய் வான்எல பகுதியைச் சேர்ந்த சாந்த குமார வயது(49) என்பவருக்கே அத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கந்தளாய் நகரின் பொது இடமொன்றில் பகள் வேளையில் மதுபானம் குடித்துக்கொண்டிருந்த வேளை கந்தளாய் கைது கந்தளாய் நீதிமன்றில் பொலிஸார் ஆஜர்படுத்ததிய போதே அத்தீர்ப்பினை கந்தளாய் நீதிமன்ற நீதிபதி ருவன் திஸாநாயக்க தீர்ப்பளித்தார். Read More »

கந்தளாயில் பத்து கஞ்சா கட்டுகளுடன் ஒருவர் கைது

Arrest-

(எப்.முபாரக் )                  கந்தளாய் பிரதேசத்தில் பத்து கஞ்சா கட்டுகளுடன் ஒருவர் ஒருவரை சனிக்கிழமை(7) மாலையில் கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.   கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளிலும் அண்மைக்காலமாக கஞ்சா பாவணைகள் அதிகரித்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்ற அதேவேளை.கைது செய்யப்பட்ட 47 வயதுடைய சந்தேக நபர் கஞ்சா வியாபாரி என்றும் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும், அவருக்கெதிராக வழக்கென்று நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாகவும்,சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகள் ... Read More »

மூதூரில் சிறுவர் துஸ்பிரயோகத்துக்கு எதிரான பேரணி

20150930_113021

(எப்.முபாரக்) சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகத்தை இல்லாமல் செய்வோம் எனும் தொணிப் பொருளில் மூதூர்,கிளிவெட்டி பாரதிபுரம் வித்தியாலய மாணவர்களால் விழிப்புணர்வு ஊர்வலம் இன்று வெள்ளிக்கிழமை (6) நடத்தப்பட்டது. சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் மாணவர்களால் வீதி நாடகங்களும் இதன்போது அரங்கேற்றப்பட்டதோடு பாடல்களும் இடம்பெற்றன. ஊர்வலத்தில் கலந்துகொண்ட சிறுவர்கள், ‘இன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்’,’துஸ்பிரயோகம் வேண்டாம் அன்புதான் எங்களுக்கு வேண்டும்’,’சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே’,’அன்பான சமூகமே எங்களை படிக்க விடுங்கள்’, ‘சிறுவர் துஸ்பிரயோகத்தை ஒழிப்போம்’ போன்ற வாசங்கள் எழுதப்பட்ட கோஷங்களை ளை ஏந்தியவாறு கோசங்களை எழுப்பி ... Read More »

பொகவந்தலாவை மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகள் சீரற்ற வானிலையினால் பாதிப்பு

bogowanthalawa3

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவை – செப்பல்ட்டன் தோட்டத்தி்ல் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகள் சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடன் கூடிய வானிலையினால், செப்பல்ட்டன் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகளிலிருந்து சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் பணிப்பாளர் ஜீ.டபிள்யூ.அமரசிறி தெரிவித்தார். குறித்த பகுதிகளிலுள்ள சுமார் 72 மாணிக்கக்கல் அகழ்வு குழிகளுக்குள் முழுமையாக வெள்ள நீர் புகுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், நீரை ... Read More »

மட்டக்களப்பு – கல்லடி பிரதான வீதியில் கட்டாக் காலி மாடுகளின் தொல்லை அதிகரிப்பு

kattali

(பழுலுல்லாஹ் பர்ஹான்)   மட்டக்களப்பு மாநகர சபை பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு –கல்முனை கல்லடி பிரதான வீதியில் கட்டாக் காலி மாடுகளின் தொல்லை தற்போது அதிகரித்து காணப்படுவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.   மேற்படி பிரதான வீதியில் கட்டாக் காலி மாடுகள் தற்போது கூட்டாக அழைந்து திரிவதாகவும் இதனால் வீதிப் போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்து வருவதுடன் வீதி விபத்து இடம்பெறுவதற்கு காரணமாக அமைவதாகவும் இவ் விடயம் தொடர்பில் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குறித்த வீதியில் பயணம் செய்யும் பொது மக்கள் ... Read More »

அல் – தாஜூன் பாடசாலை வீதியை புனர்நிர்மாணம் செய்ய பிரதேச மக்கள் கோரிக்கை

al thajun1

(எம்.எம்.ஜபீர்) நாவிதன்வெளி பிரதேச சபையின் கீழுள்ள  6ஆம் கொளனி    அல் – தாஜூன் பாடசாலை வீதி நீண்டகாலமாக ஆழமான குன்றும் குழியுமாக காணப்படுவதினால் பாடசாலை மாணவர்களும் பிரதேச மக்களும் நாளந்தம் பயணிப்பதில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக குற்றம் சாட்டுகின்றனர். இவ்வீதியானது சொறிக்கல்முனை -03 கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவில் முஸ்லிம் மற்றும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழும் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இவ் வீதியானது அல்- தாஜூன் பாடசாலை, மிலேனியம் பாலர் பாடசாலை, விளையாட்டு மைதானம் போன்ற இடங்களுக்கு செல்வதற்காக பிரதேச மக்கள், மாணவர்கள், ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg