Close
Breaking News
Home » பிரதேச செய்திகள் (page 5)

பிரதேச செய்திகள்

மட்டக்களப்பில் அடை மழை – தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின (Photos)

batti flood1

(பழுலுல்லாஹ் பர்ஹான்) மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடை மழை காரணமாக காத்தான்குடி மற்றும் ஆரையம்பதி கோயில்குளம் பிரதேசத்திலும் அதனை அண்டியுள்ள பிரதேசங்களிலும் பல வீதிகள் ,வீடுகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு,கல்லடி , காத்தான்குடி,  புதியகாத்தான்குடி, ஏத்துக்கால்,கர்பலா,பாலமுனை,கிரான், கல்லாறு,  பெரிய கல்லாறு,துறைநீலாவணை ,களுவாஞ்சிக்குடி ,பட்டிப்பளை,வவுனதீவு ஓள்ளிக்குளம் ,மண்முனை,சிகரம், புல்லுமலை, ஏறாவூர், ஒட்டமாவடி, வாழைச்சேனை,நாவலடி, வாகரை உள்ளிட்ட பல பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருவதால் தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் ... Read More »

60 வயது மூதாட்டி துஷ்பிரயோகம் – 35 வயது ஆசாமி கைது

Abuse1

வயதான மூதாட்டியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நவகத்தேகம – முல்லேகம பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் கைதானவர் முல்லேகம பகுதியைச் சேர்ந்த 35 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் அவரை பிரிந்து சென்றுள்ளார். பின்னர் தனது மகனுடன் விவசாயம் செய்து அவர் தனது வாழ்க்கையை நடத்தி வந்துள்ளார். கடந்த முதலாம் திகதி சந்தேகநபர் தன்னை பலந்தமாக வீட்டு அறைக்குள் தூக்கிச் சென்று பலாத்காரம் செய்ததாக அவர் பொலிஸில் ... Read More »

சவளக்கடை, கம்பிக்காலை கிராமத்திலுள்ள காடுகள் மற்றும் புதர்கள் சிரமதான மூலம் துப்புரவு

siramathanam

(எம்.எம்.ஜபீர்) சுற்றாடல் பாதுகாப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சவளக்கடை கம்பிக்காலை கிராமத்திலுள்ள காடுகள் மற்றும் புதர்கள் சிரமதான மூலம் இன்று (03) துப்புரவு செய்யப்பட்டது. நாவிதன்வெளி பிரதேச செயலகம், நாவிதன்வெளி பிரதேச சபை, சவளக்கடை பொலிஸ் நிலையம், நாவிதன்வெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகிய இணைந்து வேலைத்திட்டத்தினை முன்னடுத்தது. நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், நாவிதன்வெளி பிரதேச சபை செயலாளர் எம்.இராமக்குட்டி, பிரதேச செயலக, பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது ... Read More »

மலையகத்தில் பல பகுதிகளில் பலத்த மழை – நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன

van kathavu

(க.கிஷாந்தன்) மத்திய மழை நாட்டில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மலையகத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. லக்ஸபான பிரதேசத்தில் 02.11.2015 அன்று முதல் பெய்து கடும் மழை காரணமாக லக்ஸபான நீர்தேக்கத்தில் ஒரு வான் கதவு ஒன்பது அங்குலத்துக்கு திறக்கப்பட்டுள்ளதாகவும், நோட்டன் பகுதியில் பெய்த கடும் மழையினால் விமல சுரேந்திர நீர்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு மேலாக வெள்ளம் பெருகெடுத்துள்ளதாகவும், அத்துடன் காசல்ரீ நீர்தேக்கத்தில் அணைக்கட்டுக்கு மேலாக நீர் பெருக்கெடுப்பதற்கு இன்னம் ஆறு அங்குலமும், மவுஸ்ஸாக்கலை ... Read More »

1000 ரூபா சம்பளம் வேண்டும் : அக்கரப்பத்தனை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

akkarapothana protest

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் அக்கரபத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரப்பத்தனை பெரியநாகவத்தை தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா சம்பளம் வழங்கப்படவேண்டும் எனவும் தீபாவளி முற்பணம் இதுவரை வழங்கபடவில்லையென தெரிவித்து 200 இற்கு மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் 03.11.2015 அன்று காலை 8 மணிமுதல் 9 மணிவரை  கொழுந்து மடுவத்திற்கு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தோட்ட அதிகாரியிடம் தீபாவளி முற்பணத்தினை 03 ம் திகதி வழங்குமாறு கோரிய போதிலும் தோட்ட நிர்வாகம் அதனை வழங்க முடியாது என தெரிவித்துள்ளதோடு இதனை எதிர்வரும் 05 ம் திகதி வழங்முடியும் ... Read More »

அம்பாரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை

ampara rain

(எம்.எம்.ஜபீர்) அம்பாரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் ஏற்படட காலநிலைமாற்றத்தினால்  பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சவளக்கடை மத்தியமுகாம்  வீதியின் 6ஆம் கொளனி பிரதேசத்தில் வீதியின் மேலாக வெள்ளம் பாய்ந்து வருவதால் போக்குவரத்து மேற்கொள்வதில் பிரயாணிகள் சிரமங்களை  எதிர்நோக்கி வருகின்றனர். இதேவேளை மழை தொடர்ந்து பெய்துவருவதால்   பிரதேசத்திலுள்ள வயல் வெளிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. இதன் காரணமாக தமது அன்றாட கடமைகளை மேற்கொள்ள முடியாது விவசாயிகள் மற்றும் பிரதேச மக்களின் இயல்பு வாழ்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ் பிரதேசத்தில் இன்று காலை ... Read More »

திருகோணமலையில் வாணி விழா

vani vila

(எப்.முபாரக்)   கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தின் ஏற்பாட்டில் கலை நிகழ்ச்சிகளின் சங்கமம் வாணி விழா திங்கட்கிழமை (2)திருகோணமலை உவர்மலை விவேகானந்தாக் கல்லூரியில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி உட்பட அதிதிகளை வாத்திய கீதங்களுடன் அழைத்து வருவதையும்,சிறுவர்களின் பக்திக்கீதம் மற்றும் நடனமாடுவதையும் படங்களில் காணலாம்.                    Read More »

நுவரெலியா பள்ளிவாசலுக்குள் வெள்ளம்

nuwara eliya mosque

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா ஹாவஎலிய பகுதியில் 02.11.2015 அன்று  மாலை  பெய்த கடும்மழை காரணமாக அப்பகுதியில் உள்ள சிறிய ஆறு ஒன்று பெருக்கெடுத்ததால் வெள்ளம் அப்பகுதியில் அமைந்துள்ள ஜும்மா பள்ளிக்குள் உட்புகுந்துள்ளது. இதனால் பள்ளிவாசல் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழுகை செய்வதற்கும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள சில வீடுகளுக்கும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது. இடைவிடாது பெய்துவரும் மழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். Read More »

முச்சக்கரவண்டி விபத்து – ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

auto accident

(க.கிஷாந்தன்) நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடக்களை தோட்டத்திலிருந்து நானு ஓயா நகரை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்று 02.11.2015 அன்று காலை 150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியது. சம்பவத்தின்போது முச்சக்கரவண்டியில் நான்கு பேர் பயணித்துள்ளனர். இதில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுடன் நுவரெலியா அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முச்சக்கரவண்டியின் இயந்திர கோளாறு காரணமாகவே இவ்விபத்து ஏற்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து தொடர்பாக நானுஓயா பொலிஸார் மேலதிகமான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Read More »

அக்கரப்பத்தனை பகுதியில் மண்சரிவு

man sarivu

(க.கிஷாந்தன்) நாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் அதிகமான பகுதிகளில் மண்சரிவு அபாயம் இருப்பதாக இயற்கை அணர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்திருந்தது  இதன் அடிப்படையில் மலையக பகுதிகளில் பல இடங்களில்  மண்சரிவு ஏற்பட்டதுடன் பலர் இதனால் பாதிக்கபட்டனர். அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்றாசி நகரத்தில் பாரிய அளவிலான மண்மேடு 30 திகதி அன்று இரவு சரிந்து விழுந்துள்ளது. இதன் போது மன்றாசி நகரிலுள்ள கடையின் ஒரு பகுதி சேதமாகியுள்ளது. இப்பகுதியில் மற்றுமொறு மண்மேடு சரிந்து விழ கூடிய நிலை காணப்படுவதால் நகர மக்கள் பல ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg