Close
Breaking News
Home » சிறப்பு கட்டுரைகள்

சிறப்பு கட்டுரைகள்

தமிழ் பேசும் சமூகங்களாலே நல்லாட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்….

BUP_DFT_DFT-1-22

-எஸ்.அஷ்ரப்கான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குதல் மற்றும் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துதல் தொடர்பில் விசேடமாக ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்படும் ஏற்பாடும் நடந்தேறி வருகிறது. மிகவும் குறுகிய காலத்தில் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் புதியதொரு தேர்தல் முறையினை அறிமுகப்படுத்துவதற்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கி ஜனாதிபதியிடம் உள்ள அதிகாரங்களை பாராளுமன்றத்திடமும், சுயாதீன ஆணைக்குழுக்களிடமும் ஒப்படைப்பதே தனது எதிர்பார்ப்பாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டு வருகின்றார். தேர்தல் பிரகடனத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி, புதியதொரு அரசியல் யாப்பினை உருவாக்குவது தொடர்பாகவும் ... Read More »

மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் 53 வது வருட நிறைவு ஒரு வரலாற்றுச் சாதனை

makola openage

-எஸ்.அஷ்ரப்கான் மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் 53 வது வருட நிறைவை முன்னிட்டு பழைய மாணவர்களின் ஒன்று கூடலும் கௌரவிப்பு விழாவும் 15.11.2015 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மணிக்கு கொழும்பு-10 மருதானை தெமடகொட வீதியில் அமைந்துள்ள வை.எம்.எம்.ஏ. கேட்போர் கூடத்தில் பழைய மாணவர் சங்கத் தலைவர் ஏ.எஸ்.எம். இல்யாஸ் பாபு தலைமையில் நடைபெற்றது. குறித்த இந்நிகழ்விற்கு ஜாமிஆ நளீமிய்யா கலாபீட பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், விசேட பேச்சாளராக சிரேஷ்ட அறிவிப்பாளர் அஸ்ரப் சிஹாப்தீன் கலந்து சிறப்பித்தார். இவ்விழாவின் போது ... Read More »

கவலையில்லாத மனிதராக வாழ ஆசையா? : பேஸ்புக்கில் இருந்து விடுபடுங்கள்

facebook

டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் மக்களின் மகிழ்ச்சியில் சமூக வலைதளங்களின் பங்கு என்ன? என்பது தொடர்பாக பேஸ்புக் விரும்பிகள் ஆயிரத்து தொன்னுற்றைந்து பேரிடம் ஆய்வு மேற்கொண்டது. ஒவ்வொரு நாளும் தமது பேஸ்புக் பக்கத்தை தவறாது கவனித்து வரும், இந்த பயன்பாட்டாளர்களை இரு குழுவாக ஆராய்ச்சியாளர்கள் பிரித்தனர். இதில், ஒரு குழுவினருக்கு வழக்கம்போல தமது பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், மற்றொரு குழு இந்த ஆராய்ச்சியாளர்களின் உத்தரவுப்படி பேஸ்புக் பக்கத்திலிருந்து விடுபட்டனர். இந்த ஆய்வு தொடங்கிய ஒரே வாரத்தில் பேஸ்புக் பக்கத்தை ... Read More »

நஸீரின் நாட்டம் நிறைவேறாததோடு தவத்தின் தவமும் கலைக்கப்பட்டது

naseer-thavam

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சராக இருந்த மன்சூர் பாராளுமன்றம் தெரிவாகியதைத் தொடர்ந்து அப் பதவி வெற்றிடமாக்கப்பட்டது.மு.காவிற்கு பதவி ஒன்று கிடைத்துவிட்டால் அதனை பறித்துண்ண பட்சிகள் பல நான்,நீ என போட்டி போட்டுக் கொண்டு கட்சித் தலைமையினை நோக்கி படை எடுப்பது வழமை.அது போன்றே அப் பதவியினை யாருக்கு வழங்குவது? எனத் தீர்மானிப்பதில் தடுமாறுவதும் எந்தளவு காலம் தாழ்த்தி அதனை வழங்க முடியுமோ அவ்வளவு காலம் தாழ்த்தி அதனை வழங்குவதும் மு.கா தலைமையின் வழமையான விடயங்களாகும்.அப் பதவியினை உரியவருக்கு பகிர்ந்தளிக்கும் வரை மு.கா உறுப்பினர்களிடையே பாரிய ... Read More »

புரோகிராமிங் செய்யப்பட்ட எங்கள் ரோபோ வாழ்வு எப்போது முடியுமோ..??

111

மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார். வேலை நாட்களில் அதிகாலையில் அவசர அவசரமாக எழுந்து குளித்து உடையணிந்து உணவுண்டு எட்டு மணிக்கெல்லாம் அலுவலகம் சென்றாக வேண்டும்….எனக்கு எட்டு மணிக்குத்தான் வேலை என்னைப் போன்ற புரோகிராமிங் செய்யப்பட்ட வேறு சில ரோபோக்கள் அதிகாலையில் ஐந்து மணிக்கே செல்ல வேண்டும். காலை எட்டு மணியிருந்து மாலை ஆறு மணி வரை அலுவலகத்தில் பல அலுவல்களைப் பார்த்து விட்டு இருப்பிடம் சென்று இரவு உணவுக்கான சமையல் வேலைகளை ஆரம்பித்து சாப்பிட்டு விட்டு இணையத்தில் கொஞ்சம் உலா வந்த பின்னர் ... Read More »

பி.ஜெ வராமையினால் வளரும் பிணக்குகள்

P_Jainulabdeen

  தென் இந்திய மார்க்க அறிஞர் பி.ஜெயினுலாப்தீன் இலங்கை வரவுள்ளார் என்ற செய்தியினை அறிந்த இலங்கை மக்கள் அதனை பல கோணங்களில் அணுகி இருந்ததனை அவதானிக்க முடிந்தது.இந்த பி.ஜே தமிழ் நாடு தௌஹீத் ஜமாத்தின் ஸ்தாபகத் தலைவர் ஆவார்.இலங்கையில் இயங்கும் ஸ்ரீ லங்கா தௌஹீத் ஜமாத்தும் இவரின் கொள்கையினை ஏற்கும் ஒரு அமைப்பாகும்.இஸ்லாம் என்ற சாயலில் ஏதோ செய்து கொண்டிருந்த மக்கள் மத்தியில் இவர் முன் வைத்த இஸ்லாமிய கருத்துக்கள் பல ஆணித்தரமான நிறுவல்களுடன் இருந்தும் அதனை  ஏற்கும் மனோ நிலையில் அன்றைய முஸ்லிம்கள் ... Read More »

காய் வெட்டிய ஹக்கீம், செல்லாக் காசாகும் செயலாளர் நாயகம் – பாரதூரத்தை அறியாத பேராளர்கள்

SLMC-Logo

(பாதுஷா) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் “கட்சியின் உயர்பீட செயலாளர்” எனும் பெயரில் ஒரு புதிய பதவி உருவாக்கப்பட்டு, அப்பதவிக்கு சம்மாந்துறையை சேர்ந்த மன்சூர் ஏ.காதர், கட்சியின் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அங்கீகாரம் இன்று (07) கண்டியில் இடம்பெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில் வழங்கப்பட்டுள்ளது. உயர் பீடக் கூட்டங்களின் கூட்டக் குறிப்புகளை தயாரிப்பது, தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகத்துடனான தொடர்புகளைக் கையாள்வது என்பன “கட்சியின் உயர்பீட செயலாளர்” என்பவரின் கடமை, பொறுப்புகள் என வரைவிலக்கனப்படுத்தப்பட்டுள்ளது என அறிய முடிகிறது. ... Read More »

ஆண்டுகள் 25 ஆகியும் துடைக்கப்படாத துயரம் 25 ஆண்டுகளுக்கு முன்பு….

north muslim

சரியாகச் சொல்வதானால் 1990ம் ஆண்டு இதே அக்டோபர் மாதம் 25 முதல் 31ம் திகதி வரை….ஏழே நாட்களில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சொத்து, சுகம், தொழில், வேலை, வீடு, வாசல் என அனைத்தையும் இழந்து உடுத்த உடையோடு சொந்த இருப்பிடங்களை, ஊர்களை விட்டு விரட்டியடிக்கப்பட்டு இன்றுவரையிலும் இருப்பிடங்களுக்கு திரும்ப முடியாத அவலம் 25 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் நீடிக்கிறது. 1990 அக்டோபர் 25ம் திகதி மன்னாரில் தொடங்கி வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து 31ம் திகதி யாழ்ப்பாணத்தில் முடிவடைந்த இந்த விரட்டியடிப்பு ... Read More »

அசின் விராதுவின் வருகையை எதிர்க்காத சபை பி ஜே வருகையை எதிர்ப்பதன் மர்மம்  என்ன?

Myanmar's hard-line Buddhist monk Ashin Wirathu greets the gathering at a convention organized by Sri Lanka's Bodu Bala Sena or Forces of Buddhist Power in Colombo, Sri Lanka, Sunday, Sept. 28, 2014.Wirathu, known for his anti-Muslim stance, says his movement will join hands with a like-minded Sri Lankan group to protect Buddhists, whom he calls a "threatened" world minority.(AP Photo/Eranga Jayawardena)

மியன்மாரில் முஸ்லிம்களை நெருப்பாலும் துப்பாக்கியாலும் சுட்டுக்கொலை செய்து இன அழிப்பு செய்த அசின் விராதுவின் இலங்கை வருகையையும் அவனோடு கூட்டணி  சேர்ந்து பொதுபல சேனா செய்த மாநாடுகளையும் அதனால் ஏற்பட்ட இனப்படுகொலைகளையும் பற்றியும் எச்சரிக்காத மௌலவிமார்களின் சில சபைகள் இலங்கையில் மாற்றுமத சகோதரர்களுக்கிடையில் இஸ்லாம் பற்றிய பிழையான சந்தேகங்களை தெளிவுபடுத்தும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிங்கள மொழியிலான நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கும் இந்திய அறிஞர் பி ஜே அவர்களின் வருகையை பற்றி எச்சரித்திருப்பது பொடுபோக்கான அறிக்கை என்பதோடு முக்கியத்துவம் இல்லாத விடையங்களுக்கு மட்டும் அறிக்கைவிடும் ... Read More »

உடைந்தது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் : உடைத்தது றிஸாடா? YLS ஆ?

Rishad-hameed

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்  கட்சி இரண்டாக பிளவு பட்டு அமைச்சர் றிஸாட் பதியுதீன் தலைமையிலான ஒரு அணியாகவும்  அக்கட்சியின் செயளாலரான YLS ஹமீட்  தலைமையிலான இன்னுமொரு அணியாகவும்   பிளவு பட்டுள்ளது. இரு அணியினரும் இன்று காலை  தேர்தல் ஆணையாளரிடம் கட்சி யாருடையது  யாருக்கு இக்கட்சி சொந்தம் என்ற தீர்ப்புக்காக பல்வேறு வாதப்பிரதி வாதங்களை முன்வைத்தனர். றிஸாட் பதியுதீன் தலைமையிலான அணியில் றிஸாட் பதியுதீன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலியும் இங்கு வருகை தந்திருந்தார். சட்டத்தரணி YLS ஹமீட் தலைமையிலான அணியில் ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg