Close
Breaking News
Home » இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

கர்நாடாக பா.ஜ.க. முன்னாள் மந்திரி ஜனார்தன ரெட்டி கைது

jaradana reddy

பாஜக முன்னாள் மந்திரி ஜனார்தன ரெட்டியை சிறப்பு புலனாய்வுப் படையினர் கைது செய்தனர். கர்நாடகா மாநிலத்தில், சட்ட விரோத சுரங்கத் தொழில் மற்றும் நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்த குற்றம் போன்ற பல்வேறு வழக்குகளில் பாஜக முன்னாள் மந்திரி ஜனார்தன ரெட்டியை கடந்த 2011 செப்டம்பர் 5 ஆம் தேதி சி.பி.ஐ. கைது செய்தது. இதனையடுத்து, தன் மீது போடப்பட்ட சுமார் 13 வழக்குகளில் ஜாமீன் பெற்ற ஜனார்தன ரெட்டி மீது, லோக் ஆயுக்தா சிறப்பு புலனாய்வுப் படை போலீசார் புதிய வழக்கு பதிவு செய்தனர். ... Read More »

வெள்ள நிவாரணத்துக்கு 500 கோடி நிதி ஒதுக்கீடு போதாது : விஜயகாந்த் அறிக்கை

vijayakanth

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா 16-11-2015 அன்று (நேற்று முன்தினம்) அவருடைய ஆர்.கே.நகர் தொகுதியில் ஒன்றிரண்டு இடங்களை பார்வையிட்டு சென்ற பிறகு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ள முகாம்கள் குறித்தும், அவர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியதும், மழைநீர் வெளியேற்றப்பட்டது குறித்துமான பூசி, மெழுகும் புள்ளிவிவரங்கள்தான் உள்ளன. ஒரே நாளில் 27 செ.மீ. முதல் 33 செ.மீ. வரை மழை பெய்துள்ளது. அதனால் பாதிப்பையும், சேதத்தையும் தவிர்க்க இயலவில்லை என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். ... Read More »

சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் போலீஸ் சோதனையில் 2 கோடி பணம் – நகை சிக்கியது

panam-nahai

ஐதராபாத் கூகட் பள்ளி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டராக இருப்பவர் சஞ்சீவ் ராவ். இவர் முறைகேடாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார் வந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி.ஓ. சுனிதா தலைமையில் நேற்று ஐதராபாத்தில் உள்ள சஞ்சீவி ராவ் வீடு, உறவினர்கள் வீடுகளில் ஒரே சமயத்தில் சோதனை செய்தனர். மொத்தம் 6 இடங்களில் சோதனை நடந்தது. அப்போது கணக்கில் வராத 75 பவுன் நகை, ரூ.20 லட்சம் ரொக்கம் மற்றும் 60 ஏக்கர் விவசாய நில பத்திரங்களை பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 ... Read More »

தெலுங்கு பட நடிகர் பிரசாந்த் 6 மாடி கட்டிடத்திலிருந்து விழுந்து மரணம்

prasanth

கள்ளக்காதலி வீட்டிலிருந்து தப்பிக்க முயன்றபோது, 6வது மாடியிலிருந்து தவறி விழுந்து நடிகர் பால பிரசாந்த் மரணமடைந்தார். ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் குண்டக்கல்லைச் சேர்ந்தவர் பால பிரசாந்த் (வயது25). இவர் ஐதராபாத்தில் தங்கி இருந்து குறும் படங்களில் நடித்து வந்தார். இவர், ‘இப்பட்லோ ராமுடிலா சீத்தலா எவர் உண்டா பாபு’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயனாக அறிமுகமாகி நடித்து வந்தார். படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது. அடுத்த மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளது. பால பிரசாந்துக்கும் ஹுக்கட் பள்ளி பவர் நகரில் ... Read More »

8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பிரபல ஹீரோவின் பாதுகாவலர்

Abuse1

ஐதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் பிரபல தெலுங்கு சினிமாவின் இளம் ஹீரோ ஒருவருக்கு பாதுகாவலராக இருப்பவர் மேடக்கை சேர்ந்த நாகேந்தர் (வயது 23). தனியார் செக்யூரிட்டி நிறுவனம் ஒன்றின் மூலம் கடந்த 10 நாட்களுக்கு முன்தான் இந்த வேலையில் இவர் நியமிக்கப்பட்டார். பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் வசித்துவரும் நாகேந்தர், கடந்த வியாழக்கிழமை தனது அறையின் முன் விளையாடி கொண்டிருந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியை சாக்லெட் தருவதாக ஆசைவார்த்தை கூறி அறைக்கு அழைத்து சென்று கற்பழித்துள்ளார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட ... Read More »

அரசு ஊழியர்கள் இனி 3-வது குழந்தை பெறலாம் : சட்டத்தை தளர்த்தியது ராஜஸ்தான் அரசு

rajasthan cm

ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் 2 குழந்தைகள் மட்டும் பெற முடியும் என்ற கட்டுப்பாடு இருந்த நிலையில் தற்போது அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றுக் கொள்ள ராஜஸ்தான் அரசு அனுமதி வழங்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இது மறுமணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே பொறுந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தர ராஜே தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னதாக அரசு ஊழியர்கள் 2 குழந்தைகள் பெறுவது தொடர்பான அரசாணையை கடந்த 2000-ம் ஆண்டு ... Read More »

தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் : பிரதமருக்கு, ஜெயலலிதா கடிதம்

jaya

அ.தி.மு.க. பொதுசெயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- கடந்த செப்டம்பர் மாதம் 22, 25, 30 ஆகிய தேதிகளிலும் மற்றும் கடந்த மாதம் 2, 11, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளிலும் நான் எழுதியுள்ள கடிதங்களில், இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 86 மீனவர்களின் பரிதாபமான நிலைமை குறித்தும், அவர்களது படகுகள் இலங்கை அதிகாரிகள் வசம் இருப்பது குறித்தும் தெரிவித்துள்ளேன். மேலும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை அவர்களது படகுகளுடன் உடனடியாக விடுதலை செய்வதற்கான ... Read More »

ஜீன்ஸ் டி-சர்ட் அணிந்ததால் இளம் மனைவியை கொலை செய்த கணவன்

murder

இந்தியா – மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் ஜீன்ஸ் டி-சர்ட் அணிந்ததற்காக 21 வயது இளம்பெண்ணை அவளது கணவன் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புனே நகர், சுவர்கேட் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் நிஷாத். இவருடைய மனைவி பூஜா. தன்னுடைய மனைவி பூஜா ஜீன்ஸ் டி-சர்ட் அணிவதை ரஞ்சித் விரும்பவில்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றவே, ரஞ்சித் தன்னுடைய மனைவியை கடுமையாக தாக்கி கொலை செய்துள்ளார். இந்நிலையில், ரஞ்சித்துடைய வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளதை ... Read More »

கீதாவுக்கு உரிமை கொண்டாடும் 5 குடும்பத்தினர் : யார் மகள்? என்பதை அறிய டி.என்.ஏ. பரிசோதனை

geeta

இந்தியாவை சேர்ந்த கீதா 8 வயது இருக்கும் போது வழிதவறி பாகிஸ்தான் சென்றுவிட்டார். வாய் பேச முடியாத, காது கேளாத அவர் 15 ஆண்டுகளாக பாகிஸ்தானில் இருந்தார். இந்த நிலையில் பீகாரில் வசிக்கும் தனது பெற்றோரை அடையாளம் கண்ட பிறகு கடந்த திங்கட்கிழமை கீதா நாடு திரும்பினார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க காத்து இருந்த அவரின் குடும்பத்தாரை அவரால் அடையாளம் காண முடியவில்லை. இதனால் அவர்களை சந்திக்காமலேயே சென்று விட்டார். பீகாரை தொடர்ந்து உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் தெலுங்கானா மாநிலங்களை சேர்ந்த தம்பதியினர் ... Read More »

நில நடுக்கத்தின் போது வங்கியில் ரூ. 20 லட்சம் கொள்ளை

bank-robber

டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது, அங்குள்ள சிண்டிகேட் வங்கியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் கட்டிடத்தை விட்டு பீதியில் வெளியேறினார்கள். வங்கிக்குள் கேஷியர் மட்டும் தனியாக இருந்தார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, 2 பேர் உள்ளே நுழைந்து துப்பாக்கியை காட்டி கேஷியரை மிரட்டி ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர். வங்கியில் கொள்ளை நடந்த தகவல் வெளியே நின்று கொண்டிருந்த ஊழியர்களின் கவனத்துக்கு வருவதற்குள், கொள்ளையர்கள் இருவரும் தப்பி ஓடி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள். Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg