Close
Breaking News
Home » இந்திய செய்திகள் (page 2)

இந்திய செய்திகள்

குஜராத்தில் 500 படேல் குடும்பத்தினர் “மதம் மாறிவிடுவோம்” என்று அரசை மிரட்டல்

patel

குஜராத்தில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த படேல்கள், எங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (OBC) சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இல்லையென்றால் இடஒதுக்கீட்டு முறையையே ஒழிக்க வேண்டும் என்று போராடி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு 22 வயது இளைஞரான ஹர்திக் படேல் தலைமை வகித்து வருகிறார். மாநிலம் முழுவதற்குமான போராட்டத்தை ஹர்திக் படேல் ஒருங்கிணைக்க, பல்வேறு படேல் சாதி அமைப்புகளும் ஹர்திக்கின் கோரிக்கைக்கு ஆதரவாக களம் கண்டு வருகின்றனர். இவர்களின் கோரிக்கையை அடுத்து, கடந்த மாதம் குஜராத் முதல்வர் ஆனந்திபென் படேல் கல்வி, வேலைவாய்ப்பில் சலுகைகள் ... Read More »

தமிழகத்திற்கு தண்ணீர் தர மாட்டோம் : கர்நாடக முதல்வர்

karnadaka cm

“தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் திறந்து விட முடியாது. இந்த விஷயத்தில், சட்டப் போராட்டம் நடத்த தயாராக உள்ளோம்,” என, கர்நாடகா முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையா கூறினார். காவிரி தண்ணீரை திறந்து விட வேண்டுமென்று தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதுதொடர்பாக, மைசூருவில், முதல்வர் சித்தராமையா நேற்று கூறியதாவது: தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது. கர்நாடகா அணைகளில் போதுமான தண்ணீர் இல்லை. வறட்சி நிலவுகிறது. ஒப்பந்தப்படி, தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்க வேண்டுமோ, அவ்வளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ... Read More »

ஐ.நா.வின் 70 ஆண்டு தினம் – இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

The Official Photograph of the Prime Minister, Shri Narendra Modi (High Resolution).

‘ஐக்கிய நாடுகள் தினம்’ ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 24ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் 1945ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி ஐக்கிய நாடுகள் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. பின்னர், 1948ம் ஆண்டு முதல் ஐ.நா. தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் தற்போது 193 நாடுகள் உறுப்பு நாடுகளாகவும், 2 நாடுகள் பார்வையாளராகவும் உள்ளது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய நாடுகள் தினத்திற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டு வாழ்த்து செய்தியில், ”மனிதாபிமான செயல்கள் ... Read More »

ஆசாரம் பாபு மீதான பாலியல் வழக்கு : சாட்சி கொலையான விவகாரத்தில் விசாரணையை தொடங்கியது சிபிஐ

asaram-bapu

சாமியார் ஆசாராம் பாபு(74) மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் முக்கிய சாட்சி கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து சிபிஐ தனது விசாரணையை இன்று துவங்கியுள்ளது. ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆசிரமம் நடத்தி வந்தவர் ஆசாராம் பாபு. சூரத் நகரை சேர்ந்த 2 சிறுமிகளை கற்பழித்த குற்றச்சாட்டில் ஆசாராம் பாபு மற்றும் அவரது மகன் நாராயணன் சாய் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆசாராம் பாபு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ... Read More »

தாத்ரி சம்பவம் நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்திவிட்டது : உத்தவ் தாக்கரே

uddhav-thackarey

சிவசேனா ஒவ்வொரு ஆண்டும் தாதர் சிவாஜி பார்க்கில் தசரா தினத்தன்று பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு தசரா பொதுக்கூட்டம் நடத்த சிவசேனாவிற்கு கோர்ட் அனுமதி வழங்கியது. நேற்று நடைபெற்ற இக்கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே “ கூட்டணியில் இருந்து விலகமாட்டோம். ஆனால் பொது பிரச்சனைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டுதான் இருப்போம். உத்தரப்பிரதேச மாநிலம், தாத்ரியில் மாட்டிறைச்சி வதந்தியால் நடந்த படுகொலை சம்பவம் நாட்டிற்கு களங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் முகத்தில் மை பூசியதால் நாட்டிற்கு களங்கம் ஏற்படவில்லை. மாடுகளை ... Read More »

அதிகாரி திட்டியதால் போலீஸ்காரர் தற்கொலை முயற்சி

blad

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தக்கரை சிங்காரத்தோட்டத்தை சேர்ந்தவர் அப்துல்சலாம் (வயது 20). இவர் கோவைப்புதூரில் உள்ள சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக வேலை செய்து வருகிறார். நேற்று அப்துல் சலாம் பட்டாலியனில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர் செல்போனில் பேசிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. இதைப்பார்த்த உயர் அதிகாரி ஒருவர் அப்துல் சலாமை திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அப்துல்சலாம் தனது அறைக்கு சென்று கையை பிளேடால் அறுத்தார். வலியால் அலறித்துடித்த அவரது சத்தம் கேட்டு சகபோலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் ரத்தவெள்ளத்தில் கிடந்த அப்துல்சலாமை மீட்டு கோவை ... Read More »

மோடி ஆட்சியில் இந்தியா மீதான மதிப்பு உயர்ந்துளது : மோகன் பகவத் பேச்சு

mohan-bhagwat

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இன்று ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தசரா விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, மோடி தலைமையிலான மத்திய அரசை பாராட்டிய அவர், அண்டை நாடுகளுடன் இந்தியா நல்லுறவை வைத்துக் கொண்டுள்ளதன் காரணமாக உலக அளவில் இந்தியா மீதான மதிப்பு உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், “மோடி அரசு பொறுப்பேற்றதில் இருந்து எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது. இதனால், முன்னணி நாடாக இந்தியாவை மாற்றுவதுதான் நமது முதன்மை திட்டம். ராவணன் சிறந்த அரசன். ராமன் தனது ... Read More »

பிளாட்பாரத்தில் இருந்து ஏறிய போது ரெயிலுக்குள் தவறி விழுந்த பெண்ணின் கால் நசுங்கியது

plat

சோழிங்கநல்லூர், லால்பகதூர் சாஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் சுகன்யா (வயது 22). நேற்று முன்தினம் இரவு சுகன்யா திருச்சியில் உள்ள உறவினர் வீட்டுக்கு செல்ல தாம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர் ஏற முயன்ற போது கூட்ட நெரிசலில் பிளாட்பாரத்தில் இருந்து ரெயில் பெட்டிக்கு இடையில் தண்டவாளத்தில் விழுந்தார். இதற்குள் ரெயில் மெதுவாக புறப்பட்டது. இதில் சக்கரத்தில் சிக்கிய சுகன்யாவின் 2 கால்களும் நசுங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிளாட் பாரத்தில் நின்ற பயணிகள் கூச்சலிட்டனர். ... Read More »

தலித் குழந்தைகள் கொலை தொடர்பான வி.கே. சிங்கின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு

v_k_singh_1

ஹரியானாவில் 2 தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், நாய் மீது கல் எறிந்தால்கூட அரசை குற்றம் கூறக்கூடாது என்று கூறியதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பா.ஜ.க ஆளும் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற இச்சம்பவத்திற்கு, மோடி தலைமையிலான மத்திய அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என நாட்டின் முக்கிய எதிர்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக காசியாபாத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியின்போது இன்று பதிலளித்த மத்திய இணையமைச்சர் வி.கே.சிங், ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg