Close
Breaking News
Home » உலக செய்திகள் (page 2)

உலக செய்திகள்

எரிவாயு நிலையத்திற்குள் ஆயுதத்தோடு புகுந்து கொள்ளையிட்ட பெண்

Robbery

சுவிஸில் எரிவாயு நிலையத்திற்குள் ஆயுதத்தோடு புகுந்த பெண் ஒருவர் அங்கிருந்த அதிகாரிகளிடம் பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளார். சுவிஸின் Gwatt நகராட்சியில் அமைந்துள்ள எரிவாயு அலுவலகத்திற்குள் உள்ளூர் நேரப்படி 21.45 மணியளவில் ஆயுதத்தோடு முகமூடி அணிந்துகொண்டு உள்நுழைந்துள்ளார். அங்குள்ள அதிகாரிகளிடம் துப்பாக்கியை காட்டி, பணங்களை பறிமுதல் செய்துள்ளார், இதில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை, தற்போது அப்பெண்ணை தேடி வரும் பொலிசார், அவர் தொடர்பான அடையாளங்களை வெளியிட்டுள்ளனர். 165 CM உயரம், நீலம் மற்றும் வெள்ளை நிற ஆடை அணிந்துள்ள அப்பெண், ஜேர்மன், சுவிஸ் மொழிகளை ... Read More »

நேபாளத்தில் மனித உரிமை மீறல் நடப்பதாக அவதூறு பரப்புகிறது இந்தியா : பிரதமர் ஒளி

kpsharmaoli

நேபாளத்தில் நடைபெறும் வன்முறை சம்பவங்கள் குறித்து அவதூறு செய்திகளை இந்தியா கூறியதாக, அந்நாடு  பிரதமர் கேபி ஷர்மா ஒளி குற்றம்சாட்டியுள்ளது. ஐ.நா., மனித உரிமை கூட்டத்தில் பேசிய இந்திய தூதர், நேபாளத்தில் புதிய அரசியல் சாசனத்தின் படி நடைபெறும் மறுசீரமைப்பு பணிகளால் வன்முறை சம்பவங்கள் நடைபெறுகிறது என்றும் அதனை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து உறுதிபடுத்த வேண்டும் என்று கூறினார். மேலும், நேபாளத்தில் அதிகார பரவல் அமைதியான முறையில் நடக்க வேண்டும் என்றும் அனைவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும் என்றும் ... Read More »

அமிதாப்புக்கு தண்டனை வழங்க சீக்கிய அமைப்பு வலியுறுத்தல்

Amitabh-Bachchan

சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை துாண்டி விட்ட, நடிகர் அமிதாப் பச்சனுக்கு தண்டனை வழங்கும்படி, சீக்கிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது. கடந்த, 1984ல், அப்போதைய பிரதமரும், காங்., தலைவருமான இந்திரா, தன்னுடைய சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, டில்லியில், சீக்கியர்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்தது; ஏராளமான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களின் சொத்துகள் சூறையாடப்பட்டன. இந்திரா குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், இந்த கலவரத்தை துாண்டி விட்டதாக, அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும், சீக்கிய அமைப்பு, லாஸ் ஏஞ்சல்ஸ் கோர்ட்டில் வழக்கு ... Read More »

150-க்கும் மேற்பட்ட பயணிகள் செல்லும் விமானத்தை அறிமுகம் செய்த சீனா

china flight

உள்நாட்டில் தயாரிக்கவுள்ள முதல் பெரிய பயணிகள் விமானத்தை சீனா இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த சி-919 என்ற இந்த விமானம் பெரும்பாலும் சீனப் பொருட்களைக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில், சில வெளிநாட்டு நிறுவனங்கள் தயாரித்துள்ள சில பாகங்களும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. 150-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச்செல்லும் வசதி கொண்ட இந்த விமானத்தின் மூலம், விமான தயாரிப்பு நிறுவனங்களான, போயிங் மற்றும் ஏர்பஸ் ஆகிய நிறுவனங்களுடன், அதிக லாபம் தரும் விமான விற்பனை சந்தையில் போட்டியிடலாம் என்று சீனா எதிர்பார்க்கிறது. இந்த ... Read More »

எகிப்தில் விமானம் விழுந்து 224 பேர் பலி : 163 பேரின் உடல்கள் மீட்பு

18.1-720x480

எகிப்தில் விமானம் விழுந்து 224 பேர் பலியானதில், 163 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. 224 பேருடன் எகிப்து நாட்டின் சுற்றுலா நகரமான ஷரம் எல் ஷேக் நகரில் இருந்து ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு நேற்று முன்தினம் புறப்பட்டு சென்ற ரஷிய விமானம் (ஏ-321 ஏர் பஸ்), சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்பத்தில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள நெகேல் என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. அதன் சிதைவுகள் அல் ஹசானாவில் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த கோர சம்பவத்தில், 224 பேரும் கூண்டோடு உயிரிழந்தனர். அங்கு ... Read More »

சீனாவில் 2 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலி

china

சீனாவில் ஹெனான் மாகாணத்தில் வெய்வுடு என்ற இடத்தில் 2 மாடி கட்டிடம் ஒன்றின் அஸ்திரவாரத்தில் நேற்று முன்தினம் புனரமைப்பு பணிகள் நடந்தன. அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட்டிடம் சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி 17 கட்டுமான தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 23 பேர் படுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து வந்து, விடிய விடிய மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். பலியானவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு விட்டன. படுகாயம் அடைந்தவர்களும் மீட்கப்பட்டு, லுயோஹீ நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர்களில் ... Read More »

குவைத்தில் 3 நாட்களாக தொடரும் மழை

kuwait-rain-ap

வைத்தில் பெரும்பாலான நகரங்களில் கடந்த 3நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வீட்டுக்குளையே முடங்கிக்கிடக்கின்றனர். இந்த கனமழை காரணமாக வீதிகளிலுள்ள சூப்பர்கெட், மருத்துவமனை, வாகனங்கள் நிறுத்துமிடம் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பல பணியாளர்கள் வேலைக்கு செல்ல யோசிக்கின்றனர். Read More »

217 பயணிகளுடன் சென்ற விமானம் சற்றுமுன்னர் விபத்துக்குள்ளானது

breaking news

217 பயணிகளுடன் விண்ணில் பறந்து கொண்டிருந்த ரஷ்ய விமானம் ( Airbus A-321) . சென்ட்றல் சினாய் அருகே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த தகவலை எகிப்து உறுதிப்படுத்தியுள்ளது. எகிப்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஷாம் எல்-ஷேக் கூறும் போது விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே செங்கடல் அருகே தொடர்பை இழந்துள்ளது. அத்துடன் விமானம் தேடப்பட்டு வந்த நிலையில்  சென்ட்றல் சினாய் அருகே விபத்துக்குள்ளானதாக தெரிய வந்துள்ளது. இந்த விமானத்தில் ரஷ்ய சுற்றுலா பயணிகள் அதிகமாக இருந்ததாக தெரிகிறது குறிப்பிட்ட விமானம் ரஷ்யாவுக்கு சொந்தமான  airline Kogalymavia ... Read More »

Update : நில அதிர்வால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 427 ஆக அதிகரிப்பு

afgan

ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 427ஆக அதிகரித்துள்ளது.  பாக்கிஸ்தானில் 247 பேரும் அப்கனிஸ்தானில் 180 பேரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானின் ஜார்க் என்ற இடத்தை மையமாக கொண்டு நேற்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 -ஆக பதிவானது. இதனால் அந்நாட்டின் தலைநகர் காபூல் உட்பட பல்வேறு நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கியதுடன் பல இடங்களில் இடிந்து விழுந்தன. மின்சாரம் மற்றும் தொலைபேசி சேவைகளும் துண்டிக்கப்பட்டன. பல இடங்களில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் ... Read More »

Update: நில அதிர்வில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 230 ஆக அதிகரிப்பு

pak erthq1

ஆப்கானிஸ்தானை மையமாக கொண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், அந்நாட்டில் மட்டுமின்றி பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவிலும்  எதிரொலித்தது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானில் 200 பேர் பலியாயினர். ஆப்கனில் 12 பள்ளி மாணவிகள் உட்பட 33  பேர் பலியாயினர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நில அதிர்வுகளால் மக்கள் பீதியில் உறைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 250 கி.மீ. தொலைவில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதியை மையம் கொண்டு, நேற்று பிற்பகல் 2.40 மணி  அளவில் (இலங்கை ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg