Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
உலக செய்திகள் | OnlineCeylon | Page 3
Close
Breaking News
Home » உலக செய்திகள் (page 3)

உலக செய்திகள்

Update: நில நடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு

kashmir_baramulla_earthquake

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் இன்று நிலவிய பயங்கர நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்தது. இன்று மதியம் பாகிஸ்தான் அருகே மையமாகக் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது . ஜம்மு காஷ்மீரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சேதம் பெரும் அளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலும் நில அதிர்வு ஏற்பட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கனில் பலியானவர்களின் எண்ணிக்கை 180 ஆனது. பாகிஸ்தான், ஆப்கன் எல்லை பகுதியான இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு இந்த நில நடுக்கம் மதியம் 2.42 மணியளவில் உணரப்பட்டது ... Read More »

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் – 55 பேர் பலி பலர் காயம்

afghanistan_pakistan_quake

இன்று மதியம் பாகிஸ்தான் அருகே மையமாகக் கொண்டு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது . ஜம்மு காஷ்மீரில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சேதம் பெரும் அளவில் இருக்கும் என அஞ்சப்படுகிறது. ஆப்கானிஸ்தானிலும் நில அதிர்வு ஏற்பட்டது. முதல் கட்டமாக 55 பேர் இறந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கிறது . பாகிஸ்தானில் 150 க்கும் மேற்பட்டோர் காயமுற்றதாக கூறப்படுகிறது . பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது . பாகிஸ்தான், ஆப்கன் எல்லை பகுதியான இந்துகுஷ் பகுதியை மையமாக கொண்டு இந்த நில நடுக்கம் ... Read More »

விமானத்தில் குழந்தை பெற்ற தைவான் பெண்ணுக்கு 21 லட்ச ரூபாய் அபராதம்?

delevery in flight

அமெரிக்க விமானத்தில் குழந்தை பெற்ற தைவான் பெண்ணுக்கு சீன ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அபராதம் விதிக்கவுள்ளது. கடந்த 8-ம் தேதி சீனாவைச் சேர்ந்த விமானம் ஒன்று தைவான் நாட்டின் தலைநகர் தைபேவிலிருந்து அலாஸ்கா வழியாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு பயணித்தது. அந்த விமானத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர் பயணித்தார். விமானத்தில் பயணம் செய்தபோது, திடீரென்று அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அலாஸ்கா நகரின் மீது பறந்தபோது, அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. இதுகுறித்து விமானத்துறை அதிகாரிகள் அந்த ... Read More »

இனப்படுகொலைக்கு எதிரான தீர்மானம் : ஆதரிக்க 102 நாடுகள் தயார்

epa03263443 Rohingya Muslim women and children sit in a boat after they were intercepted by the Bangladesh Border Guard (BGB) members in Teknaf, Bangladesh, 13 June 2012. BGB members has sent back more than a thousand refugees from western Myanmar following sectarian violence there. Rohingya Muslims are a stateless group of some 800,000 people living in Myanmar's western Rakhine state.  EPA/STRINGER

‘உலக நாடுகளில் நடைபெறும் இனப்படுகொலை, மனித உரிமை மீறல்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக, ஐ.நா., பொதுச் சபை கொண்டு வரும் தீர்மானத்தை எதிர்க்கப் போவதில்லை’ என, 102 நாடுகள் உறுதிமொழி எடுத்துள்ளன. ஐ.நா., சபையின், 70வது ஆண்டு விழாவையொட்டி, இந்த உறுதியேற்பு திட்டத்தை, லிச்டென்ஸ்டீன் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஆரிலியா பிரிக், துவக்கி வைத்தார். அப்போது, ”இத்தகைய கட்டுப்பாடு, ஐ.நா., சபையின் உறுப்பு நாடுகளுக்கு உள்ள, பொறுப்புணர்வையும், கடமை யையும் வெளிப்படுத்தும்,” என, அவர் கூறினார். ஐ.நா., சபையில், 193 உறுப்பு நாடுகள் உள்ளன. அதில், ... Read More »

மாலத்தீவு ஜனாதிபதியை கொல்ல சதி?: துணை ஜனாதிபதி திடீர் கைது

ahamed atheeb

மாலத்தீவு ஜனாதிபதி யாமீன் அப்துல் கய்யூம் சென்ற படகை வெடிகுண்டு வைத்து தகர்த்து அவரை கொல்ல உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் துணை ஜனாதிபதி அஹமத் அடிப் இன்று கைது செய்ப்பட்டார். இந்த வருடம் ஹஜ் கடமைகளை நிறைவேற்றிவிட்டு மாலத்தீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் தனது மனைவியுடன் விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தார். டெல்லியில் இருந்து கடந்த மாதம் 28-ம் தேதி காலை அதிவேக படகின் மூலம் மாலத்தீவு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவரது படகு திடீரென்று கடலில் வெடித்து சிதறியது. இதில் ஜனாதிபதி அப்துல்லா ... Read More »

ஸ்வீடன் பள்ளியில் முகமூடி அணிந்து தாக்குதல் : மாணவர் மற்றும் ஆசிரியர் பலி

swidan

ஸ்வீடன் பள்ளியில் முகமூடி அணிந்த 21 வயது மர்ம நபர் நேற்று நடத்திய தாக்குதலில் ஒரு மாணவர் மற்றும் ஆசிரியர் பலியானர்கள். டிரான்ல்ஹாட்டன் நகரில் உள்ள பள்ளிக்கு முகமூடி அணிந்து வந்த மர்ம நபர், சில மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். கையில் வாள் மற்றும் கத்தி வைத்திருந்ததால் அவரை அங்கிருந்து சென்றுவிடும்படி ஆசிரியர் ஒருவர் கூறியுள்ளார். உடனே அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனை பார்த்த மாணவர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர். ஆனால் அவர்களை துரத்தி சென்ற அந்த நபர் மாணவர்களையும் நீளமான கத்தியைக் கொண்டு தாக்கினார். ... Read More »

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் : 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலி

pak

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஷியா பிரிவினரின் மசூதியில் இன்று மாலை நடந்த தற்கொலைப்படைத் தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் போலன் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். தாக்குதல் குறித்த மேலதிக விவரங்கள் வெளியாகவில்லை. Read More »

பிலிப்பைன்ஸ் நாட்டில் சீன துணை தூதர்–அதிகாரியை சுட்டுக்கொன்ற பெண் ஊழியர்

hqdefault

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சீபு என்ற இடத்தில் சீன தூதர், துணை தூதர் மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் ஒரு ஓட்டலில் தங்கி இருந்தனர். அவர்கள் ஒரே அறையில் அமர்ந்து விருந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு மத்தியில் திடீர் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆதத்திரம் அடைந்த பெண் ஊழியர் ஒருவர் துப்பாக்கியை எடுத்து தூதர் மற்றும் அதிகாரிகள் மீது சரமாரியாக சுட்டார். இதில் துணை தூதர் மற்றும் நிதி அதிகாரி ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். தூதர் படுகாயம் அடைந்தார். அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் ... Read More »

பாகிஸ்தானுக்கு புதிய போர் விமானங்கள் வழங்கும் அமெரிக்கா

Eurofighter_Typhoon-1

நான்கு நாள் சுற்றுப்பயணமாக நேற்று அமெரிக்கா சென்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், இன்று இரவு அதிபர் ஒபாமாவை சந்தித்து இரு நாட்டு உறவுகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாட உள்ளார். இந்நிலையில் வாஷிங்டன்-இஸ்லாமாபாத் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையிலும், அந்நாட்டில் தலிபான்களின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையிலும் 8 புதிய எப்.-16 ரக போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு விற்க ஒபாமா முடிவு செய்திருப்பதாக அமெரிக்க உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளாகவே அணு ஆயுதங்கள் உட்பட பாகிஸ்தானின் ராணுவ பலம் அதிகரித்து வருவது ... Read More »

பிரார்த்தனைக் கூட்டத்தின் போது சக வீரர்களை சுட்டுகொன்ற ராணுவ வீரர்

shoot

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ராணுவ தளத்தில் இன்று காலை நடந்த பிரார்த்தனைக் கூட்டத்தின் போது, ராணுவ வீரர் ஒருவர் தன் சக வீரர்கள் 5 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார். இதானால் அங்கிருந்த வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். பிலிப்பைன்சின் தெற்குத்தீவான பசிலனில் உள்ள ராணுவ முகாமில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதில் 5 ராணுவ வீரர்கள் துடிதுடித்து பலியாகியுள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய அந்த ராணுவ வீரர் சக ராணுவ வீரர்கள் தன்னை நெருங்குவதற்குள் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg