Close
Breaking News
Home » விளையாட்டு

விளையாட்டு

உங்களுக்கு என்ன தான் பிரச்சனை? இந்தியாவிடம் பாகிஸ்தான் கேள்வி

pakistan-india

இந்தியா வந்து விளையாடுவோம் என்ற பேச்சிற்கு இடமில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷகாரியார் கான் தெரிவித்துள்ளார். சர்வதேச போட்டித் தொடர் அட்டவணைப்படி, வருகிற டிசம்பர் மாதம் யு.ஏ.இ மண்ணில் இந்தியா- பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும். ஆனால் பயங்கரவாதத்தை காரணம் காட்டி இந்தியா மறுத்து வந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரான சஷாங்க் மனோகர், பாகிஸ்தானை இந்தியா வந்து விளையாடுமாறு அழைப்பு விடுத்தார். இதனை மறுத்துள்ள பாகிஸ்தான், யு.ஏ.இ-யில் வந்து ஏன் ஆட முடியாது என்ற காரணத்தை தெரிவிக்குமாறு கேட்டுள்ளது. ... Read More »

விரைவில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

pakistan-india

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவில் விளையாட வருமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அழைப்பு விடுத்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகார்யார் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகள் என்றும் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவைகள். இரு அணிகளும் மோதும் போட்டியை காண ரசிகர்கள் எப்போதும் ஆவலுடன் இருப்பார்கள். எனினும் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கும் பங்கு உள்ளதாக குற்றம்சாட்டிய இந்திய அரசு, அந்த நாட்டுடனான கிரிக்கெட் உறவை துண்டித்தது. உலக கோப்பை போன்ற பொது போட்டிகளில் ... Read More »

இந்தி நடிகையுடன் யுவராஜ்சிங் திருமண நிச்சயதார்த்தம்

1ff6f29f-6ac7-4f94-8793-9a304ab20d08_S_secvpf

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருக்கும் 33 வயதான அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங், இங்கிலாந்து மாடல் அழகியும், இந்தி நடிகையுமான 28 வயது ஹாசல் கீச்சை காதலித்து வருகிறார். இருவரும் அடிக்கடி ஒன்றாக சுற்றி திரிந்தாலும், தங்களது காதலை ஊடகங்களிடம் இருந்து மறைப்பதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார்கள். யுவராஜ்சிங், இந்தி நடிகை ஹாசல் கீச் திருமண நிச்சயதார்த்தம் நடக்க போவதாகவும், விரைவில் இருவரும் திருமண பந்தத்தில் இணைய இருப்பதாகவும் சமீபத்தில் செய்தி வெளியானது. இதனை மறுக்காமல் சமாளித்த யுவராஜ்சிங், தனது திருமண தேதியையும் ... Read More »

ஜனவரி 3 ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல்

srilankacricket

இலங்கை கிரிக்கெட் சபைக்கான தேர்தல் ஜனவரி மூன்றாம் திகதி இடம்பெறவுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், விளையாட்டு துறை நிர்வாகம் சார்ந்து இடம்பெறவிருக்கும் சகல தேர்தல்களும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நடாத்தப்படும் எனவும் இதன் மூலம் அனைத்து இடைக்கால நிர்வாக சபைகளும் மாற்றப்படும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இலங்கை கிரிகெட் சபைத் தேர்தலை அடுத்து இலங்கை அணிக்கு ஒரு நிரந்தர பயிற்சியாளர் நியமிக்கபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நிரந்தர பயிற்ருனர் நியமிக்கப்படும் வரை ஜெரோம் ... Read More »

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எனது கனவு : சானியா

saniya mirsa

இந்திய நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடம் அடுத்த இலக்கு என்ன என்று கேட்ட போது அவர் அளித்த பதிலில், ‘2016-ம் ஆண்டு ரியோடி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம். நானும், லியாண்டர் பெயசும் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக நம்புகிறேன். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றால், அதன் மூலம் எனது கனவு நனவாகி விடும். பதக்கம் வெல்ல முடியாமல் போனால் கூட, கவலையில்லை. அதனால் வாழ்க்கை முடிந்து போய் விடாது’ என்றார். Read More »

இலங்கையிடம் வீழ்ந்தது மே.தீவுகள்

sl-vs-wi-odi

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டால் வெற்றியீட்டியுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி மேற்கிந்திய தீவுகள் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த வேளை, மழை இடையில் குறுக்கிட்டதால் இந்தப் போட்டி 26 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இதனையடுத்து அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் (26 ஓவர்கள்) எட்டு விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. இதனால் டக்வெல்த் லூயிஸ் முறைப்படி 160 ஓட்டங்கள் ... Read More »

பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் பிலால் ஆசிப் பந்து வீச ஐ.சி.சி. அனுமதி

bilal-asif

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இந்த தொடரின் 2-வது போட்டியில் பாகிஸ்தான் அணியில் சுழற்பந்து வீச்சாளர் பிலால் ஆசிப் அறிமுகமானார். கடைசி போட்டியில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி பாகிஸ்தான் 2-1 என தொடரை கைப்பற்ற பிலால் ஆசிப் முக்கிய காரணமாக இருந்தார். அவர் 25 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றினார். இந்த போட்டியின்போது அவர் ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக பந்து வீசியதாக புகார் அளிக்கப்பட்டது. இதனால் அவர் சென்னையில் உள்ள ... Read More »

42 நாட்களில் 1,150 கோடிகள் – ஐபிஎல் தொடரின் சூப்பர் வருமானம்

ipl

உலக கிரிக்கெட் வாரியங்களில் மிகவும் பணக்கார அமைப்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் இருந்து வருகிறது. இந்த பணக்கார கிரிக்கெட் அமைப்பிற்கு வலுசேர்க்கும் மற்றொரு விடயம் தான் ஐபிஎல் தொடர். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு பணம் கொட்டுகிறது. இதன் மூலம் இந்திய அரசுக்கு நேரடியாக மற்றும் மறைமுகமாக பல கோடி ரூபாய் வருமானமாக கிடைக்கிறது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பாக ரூ.1150 கோடி கிடைத்துள்ளது. இது 40 நாட்களில் நடந்த 60 போட்டிகள் மூலம் ... Read More »

போட்டிகளில் பங்கேற்க இயந்தியா பின்வாங்கல் – மிரட்டும் பாக்கிஸ்தான்

pakistan-india

இந்திய அணி எங்களுடன் விளையாடா விட்டால் இந்தியாவில் நடக்கும் டி20 உலகக்கிண்ணத்தை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மிரட்டல் விடுத்துள்ளது. இந்தியா- பாகிஸ்தான் அணிகள் டிசம்பர்- ஜனவரி மாதங்களில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க ஒப்பந்தம் செய்தது. இந்நிலையில் இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் போட்டிகளில் பங்கேற்க முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக அறிவித்தது. இது தொடர்பான பேச்சு வார்த்தை நடந்து வரும் நிலையில், ஒப்பந்தப்படி இந்திய கிரிக்கெட் அணி எங்களுடன் விளையாட மறுத்தால் ... Read More »

ஒரே நாளில் அடுக்கடுக்கான சாதனைகளை படைத்த தென்ஆப்பிரிக்கா

south-africa

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி ஏராளமான சாதனைகளை படைத்தது. அதன் விவரம் வருமாறு:- * 45 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரே இன்னிங்சில் மூன்று வீரர்கள் சதம் அடிப்பது இது 2-வது முறையாகும். அரிய நிகழ்வுகளில் ஒன்றான இத்தகைய அளப்பரிய சாதனையை இதற்கு முன்பும் தென்ஆப்பிரிக்கா தான் செய்திருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர்களில் அம்லா (153 ரன்), ரோசவ் (128 ... Read More »

 photo NewFace1_zpsofrogqp4.jpg