Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code:1) in /home/onlinece/public_html/wp-includes/feed-rss2.php on line 8
OnlineCeylon http://onlineceylon.com Best Tamil News Website From SriLanka Mon, 23 Nov 2015 03:36:11 +0000 en-US hourly 1 http://wordpress.org/?v=4.3.11 நல்லாட்சி அரசின் செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்புக்கு பலத்த அச்சுறுத்தல் : மஹிந்த http://onlineceylon.com/?p=1737 http://onlineceylon.com/?p=1737#comments Mon, 23 Nov 2015 03:36:11 +0000 http://onlineceylon.com/?p=1737 Mahinda_singhefm_newsநல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளால் தேசிய பாதுகாப்புக்கு பலத்த அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவு வழங்கிய அமைப்புகள் மற்றும் தனி நபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த தடைகளை வர்த்தமானி மூலம் நீக்கியமை இதற்கு சிறந்த உதாரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் காணப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள் தற்பொழுது மக்களுக்கு மறந்துபோயுள்ளமை கவலையளிப்பதாகவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.

ஹக்மனை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

]]>
http://onlineceylon.com/?feed=rss2&p=1737 0
வரவு செலவுத் திட்ட தெரிவுக்குழுவின் தலைவராக மஹிந்த சமரசிங்க நியமனம் http://onlineceylon.com/?p=1734 http://onlineceylon.com/?p=1734#comments Mon, 23 Nov 2015 03:33:35 +0000 http://onlineceylon.com/?p=1734 Mahinda-Samarasingheவரவு செலவுத் திட்டம் குறித்த நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவராக அமைச்சர் மஹிந்த சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த தெரிவுக்குழுவில் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

சபாநாயகர் கரு ஜயசூரியவினால் இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்ட தெரிவுக்குழுவின் அறிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ம் திகதி அதன் தலைவர் மஹிந்த சமரசிங்கவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த அறிக்கை மற்றும் 17 அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடு குறித்த விவாதங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ம் 18ம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது.

]]>
http://onlineceylon.com/?feed=rss2&p=1734 0
பாவனையாளர்களை மட்டுப்படுத்தவே வாகன வரி – நிதி அமைச்சர் http://onlineceylon.com/?p=1732 http://onlineceylon.com/?p=1732#comments Mon, 23 Nov 2015 03:30:47 +0000 http://onlineceylon.com/?p=1732 raviநாட்டில் வாகனப் பாவனையாளர்களை மட்டுப்படுத்துவதற்கே தீர்வை வரியை அதிகரிக்கச் செய்தோம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் பாதைகளுக்குப் பொருத்தமான வாகன எண்ணிக்கை காணப்படல் வேண்டும். இலங்கைக்குள் மாத்திரம் தற்பொழுது 69 லட்சம் வாகனங்கள் காணப்படுகின்றன. இதில் அரசாங்கத்துக்கு சொந்தமான வாகனங்கள் 68 ஆயிரம் ஆகும்.

இந்த நாட்டின் தற்போதைய தேவை வாகனங்களை விலைகொடுத்து வாங்குவதல்ல. நாட்டின் பொது மக்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்குவதாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட முன்மொழிவில் வாகன இறக்குமதிக்கான தீர்வை வரி அதிகரித்துள்ளது. இதனால், வாகனங்களின் விலையை இன்று முதல் அதிகரிக்க  வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

]]>
http://onlineceylon.com/?feed=rss2&p=1732 0
எந்த அடிப்படையில் புலி அமைப்புக்களின் தடை நீக்கம்? படை முகாம்களில் ஐநா குழு விசாரணை?- வீரவன்ச கேள்வி http://onlineceylon.com/?p=1730 http://onlineceylon.com/?p=1730#comments Mon, 23 Nov 2015 03:28:16 +0000 http://onlineceylon.com/?p=1730 wimal interview 2.jpgஎந்த அடிப்படையில் புலி அமைப்புகளின் தடைகள் நீக்கப்பட்டன என அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

தேசிய சுதந்திர முன்னணியினால் நேற்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

சில தினங்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் காணாமல்போனோர் தொடர்பில் ஆராயும் குழுவினர் குற்றப் புலனாய்வு பிரிவினருடன் திருகோணமலை கடற்படை முகாம் வளாகத்தினுள் சென்றுள்ளனர். அங்கு சென்று முகாம் பிரதேசத்தினுள் உள்ள பழைய கட்டிடங்களை பரிசோதித்துள்ளனர். அதேபோல் பொதுமக்கள் மீது வன்கொடுமைகள் மற்றும் தாக்குதல் நடந்துள்ளதாக சந்தேகப்படுவதாகவும் அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். அதேபோல் அப்போதைய காலகட்டத்தில் கடற்படை முகாமில் செயற்பட்ட ஒரு இரண்டு கடற்படை அதிகாரிகளையும் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்துள்ளனர். இவை அனைத்தும் கடந்த ஒருவார காலத்தினுள் நடந்துள்ளது.

இதில் பிரச்சினை என்னவென்றால் எமது நாட்டின் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய பாதுகாப்பு முகாம்களை பரிசோதிக்க சர்வதேச தரப்பினருக்கு எப்போது அனுமதி கிடைத்தது. இதுவரை காலமும் எமது பாதுகாப்பு முமாம்களில் விசாரணைகளை மேற்கொள்ள சரவதேச தரப்பினருக்கு அனுமதி வழங்கப்பட்டதில்லை. அதேபோல் எந்தவொரு நாட்டிலும் அவர்களது பாதுகாப்பு முகாம்களில் ஏனைய நாட்டவரை விசாரணைக்காக அனுமதிக்க மாட்டார்கள். எனினும் இந்த அரசாங்கம் ஜெனிவா மாநாட்டில் ஏற்றுக் கொண்டுள்ள உடன்படிக்கைக்கு அமைய, அதேபோல் கலப்பு நீதிமன்ற முறைமையை உருவாக்க முன்னரே சர்வதேச தரப்பின் விசாரணைகளை ஆரம்பித்து விட்டனர். அதுமட்டுமின்றி விசாரணைக் குழுவின் உட்பிரவேசத்தின் பின்னர் கடற்படையின் சிலரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது மிகவும் பயங்கரமான ஒரு செயற்பாடாகும்.

இலங்கையில் எவ்வாறு அத்துமீறிய விசாரணைகளை மேற்கொள்ள ஐ.நா உறுப்பனர்களுக்கு யார் இவ்வாறு அதிகாரத்தை கொடுத்தது. இந்த விவகாரத்தில் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதா, குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு யார் அந்த அதிகாரத்தை கொடுத்தது என பல கேள்விகளும் எழுகின்றனர். உள்நாட்டு விசாரணைக் குழுவினருக்கு இலங்கையில் ஏதேனும் விசாரணைகளை மேற்கொள்ள அனுமதிக்க முடியும் ஆனால் சர்வதேச குழுக்களுக்கு யார் இவ்வாறு அனுமதி வழங்கியது. எமது நீதிமன்ற அனுமதி இல்லாது எமது இராணுவ முகாமுக்குள் புகுந்து விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் குழுவுக்கு உள்ள அதிகாரம் என்ன.

புலிகள் செய்த குற்றத்தை கண்டறியாது எமது இராணுவம் என்ன செய்துள்ளது என்பதை ஆராயும் நடவடிக்கைகளே இன்று ஆரம்பமாகியுள்ளது. இன்றுவரையில் மனித உரிமை மீறல் குற்றத்தின் கீழ் இராணுவத்தின் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். விடுதலை புலிகளின் ஆதரவில் செயற்பட்ட, அவர்களின் கைக் கூலிகளாக செயற்பட்ட நபர்களின் கொலை தொடர்பில் எமது இராணுவத்தை தண்டிக்கும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது. இந்த நாட்டை காப்பாற்றிய எமது இராணுவ வீரர்களை இந்த அரசாங்கம் கவனிக்கும் விதம் எவ்வாறு என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவோம், எமது இராணுவத்தின் நலனில் கவனம் செலுத்துவோம் என ஜனாதிபதியும் பிரதமரும் தெரிவித்து வருகின்றார். ஆனால் இரகசியமாக எமது இராணுவவீரர்களை தண்டிக்கும் வேலையினை முன்னெடுத்து வருகின்றனர். தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக கூறிக்கொண்டு இலங்கையில் தடைவிதிக்கப்பட்டுள்ள புலம்பெயர் புலி அமைப்புகள் மற்றும் நபர்கள் மீதான தடையை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை பாதுகாப்பு செயலாளர் விடுத்துள்ளார்.

தமிழீழத்தை உருவாக்க கடுமையாக போராடும் இந்த அமைப்புகளின் தடையை நீக்கியுள்ளனர். இலங்கையில் யுத்தம் முடிவிற்கு வந்தபின்னர் இலங்கையின் பாதுகாப்பு பலமடைந்த பின்னர் சர்வதேச மட்டத்தில் இருந்து ஈழத்தை உருவாக்கும் பிரபாகரனின் கொள்கையை முன்னெடுத்து சென்ற அமைப்புகள் இவைகள்தான். ஆகவே இந்த தமிழ் அமைப்புகளின் அச்சுறுத்தலை அறிந்தும் அரசாங்கம் இந்த தடையை நீக்கியுள்ளது. ஏன் அவ்வாறான தடை நீக்கத்தை அரசாங்கம் மேற்கொண்டது என்பதை இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இவர்கள் தமிழீழ கொள்கையை கைவிட்டுள்ளனர் என்று புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளதா? இவர்கள் மீண்டும் இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்க மாட்டார்கள் என்று புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதா? அல்லது நாட்டை பிரிக்கும் செயற்பாடுகளை கைவிட்டுள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளதா. அவ்வாறு எந்தவித தகவல்களும் இல்லாது எவ்வாறு இந்த அமைப்புகளின் தடையை நீக்க முடியும். ஆகவே இந்த விடயம் தொடர்பில் அரசாங்கம் பூரண விளக்கத்தை முன்வைக்க வேண்டும்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சர்வதேச தரப்பினருக்கும் புலம்பெயர் அமைப்புகளுக்கும் கொடுத்த வாக்குறுதிகளை இப்போது நடைமுறைப்படுத்துகின்றனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது. புலம்பெயர் அமைப்புகளின் தடைகளை நீக்கும் அரசாங்கம் எமது இராணுவ வீரர்களை கைதுசெய்து விசாரணை செய்கின்றனர். இது தான் எமது நாட்டின் இன்றைய நிலைமை.

நாட்டை துண்டாடிய புலிகளுக்கு சுதந்திரம் கொடுத்து நாட்டை பாதகாத்த எமது இராணுவ வீரர்களை சிறைவாசம் அனுப்புகின்றனர். பயங்கரவாதிகளை விடுதலை செய்கின்றனர் ஆனால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் எமது இராணுவ வீரர்கள் கைதுசெய்யப்படுகின்றனர். இன்று எமது நாட்டின் நல்லாட்சியின் நிலைமை இவ்வாறு மாறியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

]]>
http://onlineceylon.com/?feed=rss2&p=1730 0
மஹிந்த தரப்பின் நால்வர் வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் தீர்மானம் http://onlineceylon.com/?p=1728 http://onlineceylon.com/?p=1728#comments Mon, 23 Nov 2015 03:17:17 +0000 http://onlineceylon.com/?p=1728 Maithri_mahindaahiமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு விசுவாசமாக செயற்பட்டு வந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்வரும் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பின் போது ஆளும் கட்சிக்கு சார்பாக வாக்களிக்க உள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கத் திர்மானித்துள்ளனர்.

இதில் ஒருவர் மஹிந்தவுடன் எழுவோம் அமைப்பின் முன்னணி செயற்பாட்டாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆளும் கட்சியில் இணைந்து கொள்வது குறித்து இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த சில நாட்களாக, அபிவிருத்தித் தந்திரோபாய அமைச்சர் மலிக் சமரவிக்ரமவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து அமைச்சர் சமரவிக்ரம ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்துள்ளார்.

குறித்த நான்கு பேரும் ஆளும் கட்சியில் இணைந்து கொள்வதில் தமக்கு ஆட்சேபனை கிடையாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதில் ஒருவருக்கு அமைச்சரவை அந்தஸ்துடைய அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய கட்சிகளுக்கு இடையிலான அமைச்சுப் பகிர்வு கோட்டாவின் அடிப்படையில் அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளது.

ஏனைய ஒருவருக்கு பிரதி அமைச்சர் பதவியும் மற்றுமொருவருக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைமைப் பதவியும் வழங்கப்பட உள்ளது.

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ள முன்னர் இவர்கள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்திக்க உள்ளனர்.

]]>
http://onlineceylon.com/?feed=rss2&p=1728 0
“டீல் வேண்டாம்” – ஊழலுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இன்று http://onlineceylon.com/?p=1725 http://onlineceylon.com/?p=1725#comments Mon, 23 Nov 2015 03:13:24 +0000 http://onlineceylon.com/?p=1725 protest jm“டீல் வேண்டாம், ஊழலில் ஈடுபட்டோருக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்து” எனும் கருப்பொருளில் பாரிய ஆர்ப்பாட்டமொன்றை இன்று மாலை முன்னெடுக்கவுள்ளதாக ஊழல்களுக்கு எதிரான குரல் எனும் அமைப்பு அறிவித்துள்ளது.

கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னால் மாலை 3.00 மணிக்கு ஊர்வலமாக சென்று கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக இவ்வமைப்பின் ஏற்பாட்டாளரும் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.

இவ்வார்ப்பாட்டத்தில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கலைஞர்கள், புத்திஜீவிகள் மற்றும் சமயத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

]]>
http://onlineceylon.com/?feed=rss2&p=1725 0
கந்தளாயில் வெளிநாட்டு சாரய போத்தல்களுடன் இருவர் கைது http://onlineceylon.com/?p=1723 http://onlineceylon.com/?p=1723#comments Mon, 23 Nov 2015 03:08:50 +0000 http://onlineceylon.com/?p=1723 arrested--எப்.முபாரக்     

சட்டவிரோதமான முறையில் முச்சக்கரவண்டியொன்றில் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டு சாராய போத்தல்கள் கொண்டு சென்ற இருவரை ஜயந்திபுர பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (22) மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.             

கந்தளாயில் இருந்து சேருநுவரவிற்கு முச்சக்கரவண்டியில் அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற போதே போக்குவரத்து கடமைகளில் நின்ற பொலிஸாரினால் குறித்த முச்சக்கர வண்டியை நிறுத்தி மேற்கொண்ட போதே வெளிநாட்டு சாரயப் போத்தல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.               சந்தேக நபர்களினால் பயன்படுத்தப் பட்ட முச்சக்கரவண்டியும், சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டுவருவதாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

]]>
http://onlineceylon.com/?feed=rss2&p=1723 0
ஜனவரி மாதம் முக்கிய அமைச்சர்கள் சிலரை நீக்குவதாக தகவல் http://onlineceylon.com/?p=1721 http://onlineceylon.com/?p=1721#comments Sun, 22 Nov 2015 12:14:11 +0000 http://onlineceylon.com/?p=1721 cabinetதற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவி பெற்றுகொண்டுள்ள சிலருக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் அவர்களின் பதவி இழக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள அமைச்சரவை மறுசீரமைப்பில், திறனற்ற நபர்கள் தொடர்பில் இதுவரையில் அறிந்துகொள்ளப்பட்டுள்ள, அமைச்சர்களிடமிருந்து அமைச்சு பதவிகளை மீளவும் பெற்றுகொள்வதற்கு அரசாங்கத்தின் பிரதானிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய பெரிய அளவிலான குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதி அமைச்சர் ஒருவர் மற்றும் மேலும் பல முக்கியஸ்தர்களின் அமைச்சு பதவிகளும் இழக்கும் நிலைமை இதுவரையில் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பொருளாதாரத்திற்கு தொடர்புடைய பல அமைச்சுகளின் அமைச்சர் பதவிகள் இதன் கீழ் மறுசீரமைக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தின் பிரதான நிறுவனத்தின் முக்கியஸ்தர் ஒருவர் மறுசீரமைப்புடன் பதவியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

]]>
http://onlineceylon.com/?feed=rss2&p=1721 0
2016 வரவு செலவு திட்டத்தில் அதிகபடியான நிதி மலையக அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது : திகாம்பரம் http://onlineceylon.com/?p=1718 http://onlineceylon.com/?p=1718#comments Sun, 22 Nov 2015 12:09:36 +0000 http://onlineceylon.com/?p=1718 digambaram-க.கிஷாந்தன்

2016 வரவு செலவு திட்டத்தில் அதிகப்படியான நிதி மலையக அபிவிருத்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை கவரவில் தமிழ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்ந விழாவில் பாடசாலையின் அதிபர் மூ.மூவேந்தர், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன், ஆர்.இராஜாராம் மற்றும் அட்டன் வலய கல்வி பணிப்பாளர் எஸ்.பி.இராஜாசேகரன் ஆகியோருடன் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்….

பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட வரவு செலவு திட்டத்தில் மலையக மக்களுடைய வீட்டு பிரச்சினையை தீர்க்கும் வகையில் அதிகளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியின் மூலம் மலையகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடுகள் நிர்மாணிப்பதற்கு ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்படவுள்ளதோடு தோட்டங்களை கிராமமாக்கும் செயல்திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளது. மேலும் வரவு செலவு திட்டத்தில் கல்விக்கும் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 5 வருட காலப்பகுதியில் விளையாட்டு துறையை மேம்படுத்தும் வகையில் பொது விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்படும். அத்தோடு பல்வேறுப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளும் அமைக்கப்படும்.

கடந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் 400 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. அதேபோல் மக்களின் பிரச்சினைகளை இணங்கண்டு தீர்த்து வைக்கும் வகையில் செயற்படுவேன்.

அத்தோடு இம்முறை வரவு செலவு திட்டத்தில் தனது அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை முழுமையாக மலையக மக்களின் அபிவிருத்தியை முன்னேடுப்பதற்காக பயன்படுத்தவுள்ளதாகவும் இதற்கு யாராவது இடையூறுகள் செய்ய முற்பட்டால் அதற்கு தகுந்த பாடம் புகட்டுவேனும் என்று கூறினார்.

]]>
http://onlineceylon.com/?feed=rss2&p=1718 0
கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமனம் http://onlineceylon.com/?p=1715 http://onlineceylon.com/?p=1715#comments Sun, 22 Nov 2015 12:06:42 +0000 http://onlineceylon.com/?p=1715 mujeebur rahmanகொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைந்த தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
பாராளுமன்ற தவிசாளர் குழு உறுப்பினரும் மத்திய கொழும்பு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் பரிந்துரையின்பேரில் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1994 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் மூலம் நேரடி அரசியலில் ஈடுபட்டு வந்த முஜிபுர் ரஹ்மான் 2007 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார். 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற மேல் மாகாண சபை தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட அவர் 24 ஆயிரம் வாக்குகளை பெற்று மாகாண சபை உறுப்பினராக தெரிவானார். எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு முஸ்லிம் சமூகத்திற்காக தொடர்ச்சியாக குரலெழுப்பி வந்தார். இந்நிலையில், 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று மீண்டும் மாகாண சபைக்கு தெரிவாகினார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் 83 804 வாக்குகளை பெற்று கொழும்பு மாவட்டம் சார்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
]]>
http://onlineceylon.com/?feed=rss2&p=1715 0