Close
Breaking News
Home » இந்திய செய்திகள் » அரசு ஊழியர்கள் இனி 3-வது குழந்தை பெறலாம் : சட்டத்தை தளர்த்தியது ராஜஸ்தான் அரசு

அரசு ஊழியர்கள் இனி 3-வது குழந்தை பெறலாம் : சட்டத்தை தளர்த்தியது ராஜஸ்தான் அரசு

rajasthan cmராஜஸ்தான் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் 2 குழந்தைகள் மட்டும் பெற முடியும் என்ற கட்டுப்பாடு இருந்த நிலையில் தற்போது அரசு ஊழியர்கள் 3-வது குழந்தை பெற்றுக் கொள்ள ராஜஸ்தான் அரசு அனுமதி வழங்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் இது மறுமணம் செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே பொறுந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்-மந்திரி வசுந்தர ராஜே தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

முன்னதாக அரசு ஊழியர்கள் 2 குழந்தைகள் பெறுவது தொடர்பான அரசாணையை கடந்த 2000-ம் ஆண்டு ராஜஸ்தான் அரசு வெளியிட்டது. அதன்படி 2 குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு அரசு வேலை கிடையாது. அதேபோல் அரசு வேலை கிடைத்த பிறகு மூன்றாவது குழந்தை பிறந்தால், பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளில் கட்டுப்பாடுகள் உண்டு.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg