Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
சோபித தேரரின் மறைவு அமைதியையும் இன ஒற்றுமையைும் விரும்புவோருக்கு பேரிழப்பு : முஜிபுர் ரஹ்மான் | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » சோபித தேரரின் மறைவு அமைதியையும் இன ஒற்றுமையைும் விரும்புவோருக்கு பேரிழப்பு : முஜிபுர் ரஹ்மான்

சோபித தேரரின் மறைவு அமைதியையும் இன ஒற்றுமையைும் விரும்புவோருக்கு பேரிழப்பு : முஜிபுர் ரஹ்மான்

sobitha-theroசமூக நீதிக்கான தேசிய அமைப்பின் தலைவரும் கோட்டே நாகவிகாரையின் பிரதம குருவுமான மாதுலுவாவே சோபித தேரரின் மறைவானது ஜனநாயகத்தை மதிக்கும் ஒவ்வொருவரினதும் இழப்பாகும் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மத்திய கொழும்பு ஐ.தே.க யின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
சுகயீனமுற்று சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் உயிரிழந்த மாதுலுவாவே சோபித தேரரின் மறைவையடுத்து முஜிபுர் ரஹ்மாக் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மோசடிகளால் நிரம்பி வழிந்த இலங்கையில்,  ஜனவரி திகதி நாட்டில் ஏற்பட்ட நல்லாட்சியில் மறைந்த சோபித தேரரின் பங்கு மகத்தானது.
மற்றும் பல தசாப்தங்களாக இந் நாட்டில் சுபீட்ச்சமான ஆட்சி மற்றும் சிறந்த சமூகக்கட்டமைப்பு என்பவற்றிற்காக  தனது உயிரையும் பணயம் வைத்து போராடிய மாமனிதரே மறைந்த தேரர் ஆவார்.
அத்தோடு கடந்த காலங்களில் சிறுபான்மையினருக்கு எதிராக இனவாத சக்திகளால் மேற்கோள்ளப்பட்ட அட்டூளியங்களுக்கு எதிராகவும் ஜாதி, மத பேதம் மறந்து மறைந்த தேரர் குரல் கொடுத்தார். இக்காலப்பகுதியில் மஹிந்த அரசாங்கத்தால் பல அச்சுறுத்தலுக்கு உள்ளான போதிலும் அவற்றை பொருட்படுத்தாலும் அல்லும் பகலுமாக நாட்டுக்காக போராடினார்.
சிறுபான்மை மக்களுக்கு கடந்த ஆட்சியின்போது இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு அமரர் சோபித தேரரிடம் போய் முறையிட்டு நீதியை பெற்றுத் தருமாறு கோரும் அளவுக்கு அவர் தமிழ் முஸ்லிம் மக்களினது நம்பிக்கையை வென்றிருந்தார். இவ்வாறு அனைத்து மக்களுடனும் சகவாழ்வுடன் வாழ்ந்த பௌத்த இமயத்தின் இழப்பை ஈடு செய்ய முடியாது.
குறிப்பாக நாடு இக்கட்டான அரசியல் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட போது துணிவுடன் முன்னின்று செயற்பட்டு நாட்டில் நல்லாட்சி நிலவ வழிவகுத்தார். ஜனாதிபதியும் பிரதமரும் இவர் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் அளவுக்கு இவர் முக்கிய அச்சாணியாக செயற்பட்டார். எனவே இவரின் இழப்பை ஈடுசெய்ய முடியாது என தனது அனுதாபச் செய்தியில் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg