Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
நேபாள எல்லையில் வன்முறை : வாகனங்களுக்கு தீ வைத்து மாதேசி மக்கள் போராட்டம் | OnlineCeylon
Close
Breaking News
Home » உலக செய்திகள் » நேபாள எல்லையில் வன்முறை : வாகனங்களுக்கு தீ வைத்து மாதேசி மக்கள் போராட்டம்

நேபாள எல்லையில் வன்முறை : வாகனங்களுக்கு தீ வைத்து மாதேசி மக்கள் போராட்டம்

india-nepal borderஇந்திய-நேபாள எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மாதேசி இன மக்கள், சரக்கு வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தியதோடு, லாரியை தீவைத்து கொளுத்தியதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.

நேபாளத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 20-ம் தேதி புதிய அரசியலமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த புதிய அரசியலமைப்பின்படி, நேபாளம் 7 மாகாணங்களாக பிரிக்கப்படுகிறது. இதற்கு மாதேசி, தாரு உள்ளிட்ட பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இந்திய நேபாள எல்லை பகுதியில் 45 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தில் சுமார் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் சரக்குகளை ஏற்றிவரும் லாரிகளை உள்ளே நுழையவிடாதபடி இந்தியா-நேபாளத்துக்கிடையிலான முக்கிய எல்லைப் பகுதியான பிர்குஞ்ச்-ரக்ஸவ்ல் சாலை அருகே முற்றுகையிட்டு போராடி வருகின்றனர்.

இதனிடையே, கடந்த வாரம் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் பீகாரை சேர்ந்த ஆஷிஸ் குமார் ராம் என்ற 24 வயது இளைஞர் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், எல்லைப்பகுதியான பிர்குஞ்சில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மாதேசி சமுதாயத்தினர், திடீரென வாகனங்கள் மீது நேற்று இரவு கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 3 வாகனங்கள் சேதமடைந்தன. மேலும் சரக்கு லாரி ஒன்றினையும் அவர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

முன்னதாக, இந்தியாவில் இருந்து சரக்கு பொருட்கள் செல்ல முடியாமல் தடைபடுவதால் நேபாள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்றும் அதனால், எல்லைப்பகுதியில் நிலவும் சிக்கல்களை உடனடியாக களைய வேண்டும் என்றும் ஐக்கிய நாடுகள் பொதுச்செயலாளர் பான்-கி மூன் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg