Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
கல்முனை நூரானியா மையவாடியின் மின் விளக்குகள் பழுதடைந்த நிலையில்…. திருத்த ஆளில்லை | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதேச செய்திகள் » கல்முனை நூரானியா மையவாடியின் மின் விளக்குகள் பழுதடைந்த நிலையில்…. திருத்த ஆளில்லை

கல்முனை நூரானியா மையவாடியின் மின் விளக்குகள் பழுதடைந்த நிலையில்…. திருத்த ஆளில்லை

burial(எஸ்.அஷ்ரப்கான்)

கல்முனை நூரானியா மையவாடியின் மின் விளக்குகள் மிக நீண்ட காலமாக இரவு வேளையில் ஒளிராமல் காணப்படுவதால் பிரசேவாசிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
நூளாந்தம் பல்லாயிரக்கணக்கான பாதசாரிகள், கடற்றொழிலில் ஈடுபடுவோர், மற்றும் தூர இடங்களிலிருந்து வியாபார நோக்கத்திற்காக இப்பிரதேசத்தை ஊடறுத்து செல்லும் காரைதீவு, பாண்டிருப்பு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, நிந்தவூர் மற்றும் கல்முனை பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களும் பாரிய சவால்களை எதிர் கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். அதுபோல் இந்த பிரதேசத்தை அண்டியே நூரானியா பள்ளிவாயல் அமைந்திருக்கின்றது. இங்கு ஐந்து நேரத் தொழுகைக்காக வரும் மக்களும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
இப்பிரச்சினை பற்றி அப்பிரதேசவாசியான எம்.சீ உதுமாலெப்பை என்பவர் குறிப்பிடும்போது,
நீண்ட நாட்களாக இந்த மையவாடியில் உள்ள ஒளி விளக்குகள் பழுதடைந்து காணப்படுகின்றன. அதனை திருத்துவதற்கு யாரும் முன்வரவில்லை. இதனால் நாங்கள் பல இன்னல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. உதாரணமாக இரவு நேரங்களில் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய வேண்டிய கட்டம் வந்தால் மையவாடியில் ஒளி விளக்குகள் பழுதடைந்த காரணத்தால் விளக்குகள் மற்றும் லைட் போன்றவற்றை பயன்படுத்தியே மையித்துக்களை அடக்கம் செய்ய வேண்டிய கட்டம் ஏற்படுகின்றது.
அது மாத்திரம் அல்ல மையவாடிக்கு அருகில் பள்ளிவாசல் ஒன்றும் உள்ளது இரவு தொழுகைக்கு நாங்கள் செல்லும் போது இந்த மையவாடி இருளாக இருப்பதோடு அதன் பாதையும் மிக இருளாக இருக்கிறது. இதனால் எங்களுக்கு மிக கஷ்டமாக உள்ளது தயவு செய்து உரியவர்கள் இந்த பிரச்சினையை உடனடியாக கருத்தில் கொண்டு மையவாடி ஒளிவிளக்குகளை திருத்தி தருமாறு வேண்டிக் கொள்கின்றேன் என்றார்.
இப்படியான பிரச்சினைகள் உடன் தீர்த்து வைக்கப்பட வேண்டியவைகள் என்பதனை உரியவர்கள் உணர்ந்து உடனடியாக இப்பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும். அத்தோடு தொடர்ந்தும்; இப்பிரச்சினை ஏற்படாதவண்ணம் மையவாடி ஒளிவிளக்கை பாதுகாப்பதற்காகவேண்டி பாதுகாப்பு கம்பி பெட்டிகளை அமைத்துத் தருவதும் கல்முனை மாநகர சபையினதும் பிரதேச அரசியல்வாதிகளினதும் கட்டாயக் கடமையாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg