Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
சோபித தேரரின் விருப்பத்திற்கு அமைய நாடு கட்டியெழுப்பப்படும் : ஜனாதிபதி | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » சோபித தேரரின் விருப்பத்திற்கு அமைய நாடு கட்டியெழுப்பப்படும் : ஜனாதிபதி

சோபித தேரரின் விருப்பத்திற்கு அமைய நாடு கட்டியெழுப்பப்படும் : ஜனாதிபதி

janapathiநல்லாட்சியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் சென்று மறைந்த மாதுளுவாவே சோபித தேரர் எதிர்பார்த்த நாட்டை கட்டியெழுப்பப் போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மைதானத்தில் நடைபெற்ற மறைந்த கோட்டே ஸ்ரீ நாக விகாரையின் விகாரதிபதி மாதுளுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியை சம்பந்தமான நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மாதுளுவாவே சோபித தேரரின் நோக்கு, சிந்தனை போன்றவற்றை தொடர்ந்தும் முன்னெடுத்து சென்று நாட்டு மக்களுக்கு செய்ய வேண்டிய சகலவற்றையும் செய்ய போவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

புதிய தேர்தல் முறை குறித்து தேரர் மேற்கொண்டு வந்த அர்ப்பணிப்புகளின் அடிப்படையில் அதனை நிறைவேற்றுவதாக மாதுளுவாவே சோபித தேரரின் உடலுக்கு எதிரில் தெரிவித்து கொள்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியில் இருந்தாலும் தற்போதைய தேசிய அரசாங்கத்திற்கு வித்திட்டவர் சோபித தேரர் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg