Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
அரசியற் கைதிகளின் விடுதலைக்கான ஹர்த்தால் நியாயமானது : துரைரெட்ணசிங்கம் | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » அரசியற் கைதிகளின் விடுதலைக்கான ஹர்த்தால் நியாயமானது : துரைரெட்ணசிங்கம்

அரசியற் கைதிகளின் விடுதலைக்கான ஹர்த்தால் நியாயமானது : துரைரெட்ணசிங்கம்

(எப்.முபாரக்)                  

duraiசிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஹர்தால் அனுஸ்டிக்கப்படுவது நியாயமன ஒரூ கோரிக்கையும் போராட்டமுமாகும் அவர்களின் விடுதலையைப் துரிதப்படுத்தப்பட வேண்டும். என திருகோணமலை மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.                                      இன்று வெள்ளிக்கிழமை(13)வடக்கு கிழக்கு மாகாணத்தில் அனுஸ்டிக்கப்பட்டுள்ள ஹர்த்தால் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.          அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் இருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகாளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமன்றி இதர சிறுபான்மைக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.இன்றைய ஹர்த்தாலுக்கு கூட சில சிறுபான்மைக் கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன.அரசாங்கம் இந்த நல்லாட்சியில் சிறந்த முடிவொன்றினை வழங்க வேண்டும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான ஒரு தீர்க்கமான முடிவொன்றினை எடுப்பதற்கு நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபாலவைக் கூட சந்தித்து அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் இது வரைக்கும் விடுதலைக்கான எந்த ஏற்பாடுகளும் தீர்க்கமான முறையில் மேற்கொள்வதை காணவில்லை.                                   இன்று வெள்ளிக்கிழமை(13) ஏற்படுத்தியிருக்கின்ற வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான ஹர்தாலைக் கருத்தில் கொண்டு நல்லாட்சி அரசாங்கம் சிறந்த முடிவினை அரசியல் கைதிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg