Close
Breaking News
Home » உலக செய்திகள் » 4 ஆண்டுகளில் 43,200 முறை பாலியல் வன்முறைக்கு ஆளான இளம்பெண்

4 ஆண்டுகளில் 43,200 முறை பாலியல் வன்முறைக்கு ஆளான இளம்பெண்

karlaமனித கடத்தல் கும்பலால் கடத்தப்படும் இளம்பெண்கள விபசாரத்தில் தள்ளப்படுவதாக அமெரிக்கா மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் நடைபெறும் மனித கடத்தல்களின் கொடூரமான உண்மைகளை கர்லா ஜாசின்டோ என்ற இளம்பெண்ணின் கதை உணர்த்துகிறது. மனித கடத்தல் ஒரு லாபகரமான தொழில் என்பதால் மத்திய மெக்சிகோவில் இருந்து அட்லாண்டா மற்றும் நியூயார்க் வரை இந்த துயரநிலை பரவி வருகிறது. கர்லா போன்றே சுமார் 10 ஆயிரம் மெக்சிகன் பெண்களின் வாழ்வை இந்த கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அழித்துள்ளனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரான கர்லா கூறுகையில், தனது 5 வயதில் தாயாரால் நிராகரிக்கப்பட்டதாகவும், ஐந்து வயது சிறுமியாக இருந்தபோதே உறவினரால் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

12-வது வயதில் மனித கடத்தல் கும்பலால் குறிவைக்கபட்டதாகவும். பல்வேறு ஜால வார்த்தைகள் கூறி கடத்தப்பட்டதாகவும் ஒருநாளுக்கு 30 ஆண்கள் வீதம் 4 ஆண்டுகள் தான் 43,200 முறை பலவந்தமாக கற்பழிக்கப்பட்டதாகவும் இவர் கூறுகிறார்.

தற்போது 23 வயதாகும் கர்லா, மனித கடத்தலுக்கு எதிராக ஒரு வெளிப்படையான ஆதரவாளராக மாறிவிட்டார். அதனால்தான் தனது கதையை பகிரங்கமாக தெரிவிக்கிறார்.

சில நண்பர்களுக்காக மெக்சிகோவின் சுரங்க ரெயில் நிலையத்தில் காத்திருந்தேன். அப்போது ஒரு சிறுவன் இனிப்பு பொருள்களை விற்பனை செய்து கொண்டிருந்தான். எனக்கு இனிப்பு ஒன்றை சிலர் பரிசாக கொடுக்கச் சொன்னதாக எனக்கு தந்தான். 5 நிமிடங்களுக்கு பிறகு ஒரு வயதானவரின் காரில் நான் இருந்தேன்.

பின்னர், மெக்சிகோ நகரில் சுற்றிப்பார்க்க வரும் வெளிநாட்டு நபர்களிடம் என்னை பாலியல் தொழிலில் அந்த கும்பல் ஈடுபடுத்தியது. அதன் பின்னர் 43,200 நபர்களால் நான் சீரழிக்கப்பட்டேன். அவர்களில் ஒருவர் எனது கதையை கேட்டு அந்த இடத்தில் இருந்து நான் தப்பி வர உதவி செய்தார்.

இதே கதையை வாடிகன் நகரில் போப் ஆண்டவரிடமும் அமெரிக்க பாராளுமன்றத்திலும் தெரிவித்திருந்தார், கர்லா.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg