Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » விமல் தரப்பினருக்கு ஜனாதிபதியின் இறுதி எச்சரிக்கை

விமல் தரப்பினருக்கு ஜனாதிபதியின் இறுதி எச்சரிக்கை

janaஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் அனுமதியின்றி கூட்டம் நடத்துவதற்கான தடை உத்தரவை கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவினால் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ஏதேனும் கூட்டம் நடத்துவதென்றால் ஜனாதிபதி அல்லது கட்சியின் உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் அனுமதி பெற்று கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்ளுடன் இணைந்து கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளமையினால் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இதன் போது கட்சியின் கொள்கைக்கு மாறாக கருத்துகள் சமூகத்தில் பேசப்படுவதனால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இந்த நிலைமை கட்சியின் ஒழுக்காற்றினை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி, உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஏதாவது கூட்டத்தை ஏற்பாடு செய்தால் அல்லது வேறு கட்சியினால் ஏற்பாடு செய்கின்ற கலந்துரையாடல், கூட்டங்களில் கலந்துகொள்வதென்றால் ஜனாதிபதி அல்லது உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் அனுமதி பெற்றுகொள்ள வேண்டும்.

சுதந்திர கட்சி உறுப்பினர்கள் சிலர், கூட்டு எதிர்க்கட்சி என்ற பெயரில் அறிமுகப்படுத்திகொள்ளும் விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்தன, உதய கம்மன்பின முன்னணியுடன் இணைந்து செயற்படுவதனை தொடர்ந்தே இந்த உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலத்தில் அந்த உத்தரவை மீறும் நபர்களை கட்சியை விட்டு வெளியேற்றுவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg