Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
நிதி மற்றும் அரச முயற்சியாண்மை அமைச்சர்களுக்கு இடையில் மோதல் | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » நிதி மற்றும் அரச முயற்சியாண்மை அமைச்சர்களுக்கு இடையில் மோதல்

நிதி மற்றும் அரச முயற்சியாண்மை அமைச்சர்களுக்கு இடையில் மோதல்

ravi-kabeerநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கும்,  அரச முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் கபிர் ஹாசீமிற்கும் இடையில் முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளது.

இரண்டு அமைச்சர்களுக்கும் இடையில் கடுமையான முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கான அதிகாரிகள் நியமனங்களின் போது இந்த முரண்பாட்டு நிலைமை உருவாகியுள்ளது.

நிதி அமைச்சரின் கீழ் இயங்கி வந்த அரச வங்கிகள் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் போது அரச முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டது.

இந்த நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர் சபை உறுப்பினர் நியமனங்களில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

நிதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளை நீக்கிவிட்டு அமைச்சர் கபிர் ஹாசீம் புதிய அதிகாரிகளை நியமித்துள்ளார்.

இவ்வாறு அதிகாரிகள் நியமனங்களில் இருவருக்கும் இடையில் கடுமையான கருத்து முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாக வார இறுதி பத்திரிகையொன்று பிரதான செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg