Close
Breaking News
Home » உலக செய்திகள் » மாறிப்போன மகன்கள், நண்பர்களாகி உண்மையான பெற்றோரை கண்டறிந்த சம்பவம்

மாறிப்போன மகன்கள், நண்பர்களாகி உண்மையான பெற்றோரை கண்டறிந்த சம்பவம்

babysகனடா நாட்டின் மனிடோபா மாகணத்தின் வின்னிபெக் நகரில் கடந்த 1975-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி பிறந்த லூக் மோனைக்ஸ் மற்றும் நோர்மன் பார்க்மேன் ஆகிய இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக பழகிவந்தனர்.

இருவருமே தங்களது சொந்த குடும்பத்துடன் தம்மை முழுமையாக இணைத்துக் கொள்வதில், ஏதோ பிரச்சனை இருப்பதாக உணர்ந்து வந்தனர். அதிலும், லூக்குக்கு நோர்மன் குடும்பத்தின் மீதும், நோர்மனுக்கு லூக்கின் குடும்பத்தின் மீதும் அளவுகடந்த பாசம் இருந்து வந்தது.

இந்நிலையில், தற்போது நாற்பது வயதாகும் இந்த நண்பர்கள், அரசிடம், தமது பிறப்பின்போது என்ன நடந்தது? என தாங்கள் தெரிந்துகொள்ள விரும்புவதாக வேண்டுகோள் விடுத்திருந்தனர். சமீபத்தில் டி.என்.ஏ. பரிசோதனை மூலமாக இவர்கள் இருவரின் பிறப்பு ரகசியமும் தெளிவானது.

பிறந்தபோதே லூக்கின் பெற்றோருக்கு நோர்மனும், நோர்மனின் பெற்றோரிடம் லூக்கும் ஆஸ்பத்திரி ஊழியர்களின் குளறுபடியால் மாற்றி கொடுக்கப்பட்ட ரகசியம் தற்போது தெரியவந்துள்ளது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg