Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
விரைவில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி : எதிர்பார்ப்பில் ரசிகர்கள் | OnlineCeylon
Close
Breaking News
Home » விளையாட்டு » விரைவில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

விரைவில் இந்தியா- பாகிஸ்தான் போட்டி : எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

pakistan-indiaபாகிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியாவில் விளையாட வருமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அழைப்பு விடுத்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகார்யார் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டிகள் என்றும் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவைகள்.

இரு அணிகளும் மோதும் போட்டியை காண ரசிகர்கள் எப்போதும் ஆவலுடன் இருப்பார்கள்.

எனினும் மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கும் பங்கு உள்ளதாக குற்றம்சாட்டிய இந்திய அரசு, அந்த நாட்டுடனான கிரிக்கெட் உறவை துண்டித்தது.

உலக கோப்பை போன்ற பொது போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் மோதிவந்தன. இந்நிலையில், ஏற்கனவே செய்த ஒப்பந்தத்தின்படி வரும் டிசம்பர் மாதம், இந்தியா-பாகிஸ்தான் இடையே போட்டி நடத்தப்பட வேண்டியது அவசியமாக இருந்தது.

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பல முறை தொடர்புகொண்டும் பிசிசிஐ தனது பதிலை கூறவில்லை.

இந்நிலையில் தற்போது இரு நாட்டு அணிகளுக்கும் இடையே போட்டியை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக லாகூரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஷகார்யார் கான் கூறியதாவது, வெள்ளியன்று என்னை தொடர்புகொண்ட பிசிசிஐ தலைவர் ஷஷாங் மனோகர் இந்தியாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வந்து ஆட வேண்டும் என்று அழைப்புவிடுத்தார்.

இந்திய அரசு இந்த தொடருக்கு சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார். இந்திய கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் வீரர்களுக்கு தேவைப்படும் பாதுகாப்பு வசதிகளை செய்துதரும் என்றும், மொகாலி மற்றும் கொல்கத்தாவில் போட்டிகளை நடத்திக்கொள்ளலாம். அங்கு பிரச்சினை வராது என்றும் மனோகர் உறுதியளித்தார்.

மேலும், அரபு எமிரேட்சில் போட்டியை நடத்தாமல் இந்தியாவுக்கு வந்து ஆடுமாறு மனோகர் அழைப்புவிடுத்தார். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான மனப்பாங்கு சில குழுக்களுக்கு இருப்பதால் இந்தியாவில் ஆடுவது பிரச்சினையை ஏற்படுத்தும் என்று அச்சம் தெரிவித்துள்ளேன்.

இது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியும், பாகிஸ்தான் பிரதமரிடம் அனுமதி கேட்டும்தான் இறுதி முடிவை அறிவிக்க இயலும். எழுத்துப்பூர்வமாக பிசிசிஐ ஒரு அழைப்பை பாகிஸ்தான் வாரியத்திடம் சமர்ப்பிக்க கேட்டுக்கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டத்தை காண இரு நாட்டு ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg