Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » புழுதிவயல் SLTJ மர்கஸ் வெள்ளத்தால் பாதிப்பு – தொழுகைக்காக மக்கள் அவஸ்த்தை (படங்கள்)

புழுதிவயல் SLTJ மர்கஸ் வெள்ளத்தால் பாதிப்பு – தொழுகைக்காக மக்கள் அவஸ்த்தை (படங்கள்)

sltj pvl markas floodஸ்ரீலாங்கா தவ்ஹீத் ஜமாஅத் – புத்தளம் மாவட்ட புழுதிவயல் கிளையின் மர்கஸ் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் தொழுகைக்காக மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். கடந்த வெள்ளிக் கிழமை முதல் பெய்து வரும் அடை மழையால் புழுதிவயல் மற்றும் அதை அண்டிய கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கட்டுள்ளன. இன்றைய தினம் காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் இப்பகுதியில் அதிகமான இடங்களில் மழை நீர் தேங்கி கிடக்கிறது.

இதே நிலையில் தொடர்ந்து மழை பெய்தால் இப்பகுதியில் பல வீடுகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பல தசாப்தங்களின் பின்னரே இப்படியானதொரு வெள்ளத்தை சந்தித்துள்ளோம் என்றும் பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

sltj pvl markas flood4 sltj pvl markas flood3 sltj pvl markas flood2 sltj pvl markas flood1 sltj pvl markas flood5

மழை நின்று, வெள்ளம் வற்றி, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இறைவனிடம் பிரார்த்திப்போமாக!

தகவல் – முஹம்மத் முனாப்

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg