Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
முப்பரிமாண அச்சிடல் முறையில் உருவான கார் அடுத்த வருடம் விற்பனைக்கு வருகிறது | OnlineCeylon
Close
Breaking News
Home » தொழில்நுட்பம் » முப்பரிமாண அச்சிடல் முறையில் உருவான கார் அடுத்த வருடம் விற்பனைக்கு வருகிறது

முப்பரிமாண அச்சிடல் முறையில் உருவான கார் அடுத்த வருடம் விற்பனைக்கு வருகிறது

LM3D Swimமுப்பரிமாண அச்சிடல் முறையில் உருவாக்கப்பட்ட கார் அடுத்த வருடம் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த லோக்கல் மோட்டர்ஸ் எனும் நிறுவனம், முப்பரிமாண முறையில் கார்களை உருவாக்கியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் தடவையாக இக்கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

அண்மையில் நடைபெற்ற மோட்டார் வாகனக் கண்காட்சி யொன்றிலும் இக்கார் காட்சிப்படுத் தப்பட்டது.

LM3D Swim என பெயரிடப்பட்ட இக்கார், தற்போது பரிசோத னைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அடுத்த வருடம் சந்தைக்கு வரும் எனவும் லோக்கல் மோட்டர்ஸ் நிறுவனம் கூறுகிறது.

அரிஸோனா மாநிலத்தை தளமாகக் கொண்ட நிறுவனம் இது.

இக்காரின் 75 சதவீதமான பாகங்கள் பிளாஸ்டிக் மற்றும் காபன் இழைகள் கலந்து மும்பரிமாண அச்சிடல் முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

எதிர்காலத்தில் இதை 90 சதவீதமாக அதிகரிப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளதாம்.

இக்கார் செலுத்தப்படக்கூடியதாகவும் மோதல்களுக்கு தாக்குப்பிடிக்கக் கூடியதாகவும் உள்ளதை உறுதிப்படுத்துவதற்காக கடந்த 10 மாத காலமாக தான் சோதனைகளை நடத்தியதாக லோக்கல் மோட்டர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இக்காரில் மணித்தியாலத்துக்கு 35 மைல்கள் (56 கி.மீ) வேகத்தில் பயணிக்க முடியும்.

அமெரிக்காவில் இதன் விலை 53,000 அமெரிக்க டொலர்களாக (சுமார் 73 லட்சம் ரூபா) இருக்கும் என இந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜே ரொஜர்ஸ் கூறியுள்ளார்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg