Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » மத்திய கொழும்பு துப்பாக்கி பிரயோக சம்பவத்திற்கும் எவன்காட்டிற்கும் தொடர்பு

மத்திய கொழும்பு துப்பாக்கி பிரயோக சம்பவத்திற்கும் எவன்காட்டிற்கும் தொடர்பு

Rajitha-Senaratneகடந்த பொதுத்தேர்தலின் போது மத்திய கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கும் எவன்ட்காட் நிறுவனத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

நேற்று மத்துகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எவன்காட் நிறுவனத்தினர், மகிந்த ராஜபக்சவின் வெற்றிக்கு கோடிக்கணக்கான ரூபாய்களை செலவு செய்தனர்.

அத்துடன், மத்திய கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தினை மேற்கொண்டவர்களும் அவர்களே என தெரியவந்துள்ளது.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள் சிலர் அவர்களுக்கே ஆதரவு தெரிவித்து வருகின்றனர் என அமைச்சர் ராஜித்த சேனாரட்ன குற்றம்சுமத்தியுள்ளார்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg