Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » அனைத்து கட்சிக் கூட்டத்தில் விமல், கம்மன்பில பங்கேற்கவில்லை

அனைத்து கட்சிக் கூட்டத்தில் விமல், கம்மன்பில பங்கேற்கவில்லை

wimal with gammanpilaஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமயில் நடத்தப்பட்ட அனைத்து கட்சிக் கூட்டத்தில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் உதய கம்மன்பிலவும் பங்கேற்கவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் தொடர்பில் அனைத்து கட்சிகளினதும் கருத்துக்களை கோரும் நோக்கில் இந்தக் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

அரசாங்கம் தேசத்துரோக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் இந்த செயற்பாடுகளில் உடன்பாடு இல்லை எனவும் இதனால் அரசாங்கத்தின் நாடகங்களில் பங்கேற்கவிரும்பவில்லை எனவும் பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இதனால் தாம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது வெறும் கலந்துரையாடல் மண்டபமாகும். அரசாங்கத்தினால் ஓர் ஊடகக் கண்காட்சியே நடத்தப்படுகின்றது எனவும் தேசிய சுதந்திர

முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசாம்மில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தேச நலன்களின் அடிப்படையில் அரசாங்கம் செயற்படத் தவறியுள்ளதாகவும் இதனால் அனைத்து கட்சிக் கூட்டத்தை பகிஸ்கரிக்க நேரிடும் எனவும் பிரிதொரு

கூட்டத்தில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவும் நேற்று கருத்து வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg