Close
Breaking News
Home » ஆரோக்கியம் » நமது குடலில் காணப்படும் அறியப்படாத நுண்ணுயிரிகள்

நமது குடலில் காணப்படும் அறியப்படாத நுண்ணுயிரிகள்

kudalநமது குடலில் பல்வேறு வகையான நுண்ணுயிரிகள் காணப்படுகின்றன. ஆனால், அவை உலகில் அறிந்த நுண்ணுயிர்களிலிருந்து, வேறுபடுகின்றன என சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின், பாரிஸ் நகரில் உள்ள பியரி அண்டு மேரி க்யூரி பல்கலைக்கழகத்தின் கீழ் எண்பத்து ஆறு வகை மரபணு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு லட்சம் டி.என்.ஏ. மாதிரிகளை சேமித்து அதன் மீது ஆய்வு நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே, கண்டறியப்பட்ட நுண்ணுயிரிகளிலிருந்து அறுபது சதவிகிதமோ அல்லது அதற்கும் அதிகமான வித்தியாசத்துடனோ குடலில் காணப்படும் இந்த நுண்ணுயிரிகள் உள்ளன.

ஆராய்ச்சியின் முடிவில் இந்த வித்தியாசமான நுண்ணுயிரிகளின் தோற்றம் பற்றிய தகவல்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg