Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
பாரிஸ் தாக்குதலுக்கு அமைச்சர் பைசல் முஸ்தபா கண்டனம் | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » பாரிஸ் தாக்குதலுக்கு அமைச்சர் பைசல் முஸ்தபா கண்டனம்

பாரிஸ் தாக்குதலுக்கு அமைச்சர் பைசல் முஸ்தபா கண்டனம்

faizer Mustafaபிரான்ஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், இந்தத் தாக்குதல் தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருப்பதாகவும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசல் முஸ்தபா தனது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்ஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

பிரான்ஸில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைக் கேள்வியுற்றதும் நான் அதிர்ச்சிக்குள்ளாகியது மட்டுமல்லாமல், கவலையிலும் மூழ்கிப் போனேன்.

உண்மையில் இந்தத் தாக்குதல் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இவ்வாறான மிகவும் மோசமான தாக்குதல்களை இலங்கைவாழ் முஸ்லிம்களும் ஒருபோதும்
அனுமதிக்கமாட்டார்கள். இஸ்லாம் மார்க்கமும் நிராகரிக்கின்றது.

இச்சந்தர்ப்பத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காகி துன்பத்திற்கு ஆளான சகல பிரான்ஸ் மக்களுக்கும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பில் எனது ஆழ்ந்த
அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் எனத் தெரிவித்துள்ளார்

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg