Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
அரசாங்கத்தை கவிழ்க்க அமைச்சர்களை அழைக்கும் மஹிந்த | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » அரசாங்கத்தை கவிழ்க்க அமைச்சர்களை அழைக்கும் மஹிந்த

அரசாங்கத்தை கவிழ்க்க அமைச்சர்களை அழைக்கும் மஹிந்த

Mahinda-Rajapaksaதற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் மனமுடைந்து ஊடகங்களில் கருத்து வெளியிட்டு வரும் அமைச்சர், உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இருந்து விலகி வேறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதுவரையில் பல அமைச்சர்கள் அரசாங்கத்தை விமர்சித்து கருத்து வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நல்லாட்சி என்று ஒன்றும் இல்லை என அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களினால் கருத்து வெளியிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமையினுள் அமைச்சு பதவிகளில் இருந்து விலகி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சியில் இணையுமாறும் முன்னாள் ஜனாதிபதி, அமைச்சர் மற்றும் உறுப்பினர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

இதுவரையில் பல சம்பவங்களை அடிப்படையாக கொண்டு அரசாங்கத்திற்கு எதிர்ப்பு வெளியிடுகின்ற அமைச்சர்களை இணைத்து கொண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக மேற்கொள்ளும் முதற்கட்ட நடவடிக்கை இதுவென அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg