Close
Breaking News
Home » விளையாட்டு » உங்களுக்கு என்ன தான் பிரச்சனை? இந்தியாவிடம் பாகிஸ்தான் கேள்வி

உங்களுக்கு என்ன தான் பிரச்சனை? இந்தியாவிடம் பாகிஸ்தான் கேள்வி

pakistan-indiaஇந்தியா வந்து விளையாடுவோம் என்ற பேச்சிற்கு இடமில்லை என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷகாரியார் கான் தெரிவித்துள்ளார்.

சர்வதேச போட்டித் தொடர் அட்டவணைப்படி, வருகிற டிசம்பர் மாதம் யு.ஏ.இ மண்ணில் இந்தியா- பாகிஸ்தானுடன் விளையாட வேண்டும்.

ஆனால் பயங்கரவாதத்தை காரணம் காட்டி இந்தியா மறுத்து வந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவரான சஷாங்க் மனோகர், பாகிஸ்தானை இந்தியா வந்து விளையாடுமாறு அழைப்பு விடுத்தார்.

இதனை மறுத்துள்ள பாகிஸ்தான், யு.ஏ.இ-யில் வந்து ஏன் ஆட முடியாது என்ற காரணத்தை தெரிவிக்குமாறு கேட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ஷகாரியான் கான், நாங்கள் 2007 மற்றும் 2012-ல் இந்தியா சென்று விளையாடினோம், மீண்டும் முடியவே முடியாது.

இது எங்கள் தொடர், எனவே எங்கள் நாட்டில்தான் விளையாடுவோம், அதாவது யுஏஇ-யில் தான் விளையாடுவோம்.

ஏற்கெனவே ஐபிஎல் தொடரை துபாயில் விளையாடியுள்ளனர், பிறகு யுஏஇ-யில் பாகிஸ்தானுடன் தொடரை விளையாடுவது என்ன பிரச்சினை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg