Close
Breaking News
Home » பிரதேச செய்திகள் » பொகவந்தலாவையில் 6 வர்த்தக ஸ்தாபனங்களில் கொள்ளை

பொகவந்தலாவையில் 6 வர்த்தக ஸ்தாபனங்களில் கொள்ளை

kollai-க.கிஷாந்தன்

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட டின்சின் நகரில் 20.11.2015 அன்று  அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் 06 வர்த்தக ஸ்தாபனங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக  பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலை 2.00 மணியவில் இனந் தெரியாதவர்களால் வர்த்தக ஸ்தாபனங்கள் உடைக்கப்பட்ட நிலையில்,  வர்த்தக உரிமையாளர் ஒருவர் சத்தமிட்டதை அடுத்து இனம் தெரியாத திருடர்கள் தப்பி சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இரண்டு தங்க விற்பனை நிலையங்கள், ஒரு புடவைக்கடை, மூன்று பலசரக்கு கடைகளுமே இவ்வாறு இனம் தெரியாதவர்களால் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதில் ஒரு பலசரக்கு கடையில் மாத்திரம் 86000 ரூபா பணம் திருடப்பட்டதாக பலசரக்கு கடை உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் குறித்த கடை ஒன்றில் இருந்த கண்காணிப்பு கமராவை பரிசோதித்து பார்த்த போது இனம் தெரியாத திருடர்கள் வெளிச்சத்தை ஏந்தியவாறு நடமாடியுள்ளதாக  பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் மேலாதிக விசாரணைகளை  மேற்கொண்டுள்ளதாக  தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg