Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » பொது அறிவுக் குறையிலே தமிழ் தாய்மொழி பற்றி சீமான் பேசுகிறார் : முபாறக் அப்துல் மஜீட்

பொது அறிவுக் குறையிலே தமிழ் தாய்மொழி பற்றி சீமான் பேசுகிறார் : முபாறக் அப்துல் மஜீட்

seeman-mubarak-எஸ்.அஷ்ரப்கான்
தமிழ் மொழியை தாய் மொழியாக கொள்ளாதவர் தமிழர் அல்ல என சைமன் என்ற சீமான் சொல்லியிருப்பது அவரது பொது அறிவுக்குறையை காட்டுகிறது என உலமா கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீட் தெரிவித்தார்.

அவர் இது விடயமாக மேலும் குறிப்பிடும்போது,

ஒரு மொழியை தாய் மொழியுடன் சம்பந்தப்படுத்தி பார்த்தால் உலகில் உள்ள பல மொழியை சேர்ந்தவர்களை நாம் மறுக்க வேண்டி வரும். உதாரணமாக இன்றைய பல அறபு நாடுகள் ஒரு காலத்தில் அறபு மொழி பேசுபவையாக இருக்கவில்லை. அங்கு இஸ்லாம் பரவிய பின்பே அறபு மொழி பேசும் மக்கள் உருவாகினர். பண்டைய எகிப்தியர் அறபு மொழி பேசவில்லை. அதே போல் சில நூற்றாண்டுகளுக்கு முன் உருது மொழி பேசுவோர் உலகில் இருக்கவில்லை. அது புதிதாக கண்டு பிடிக்கப்பட்ட மொழியாகும். அதே போல் ஆதி இந்தியாவில் இந்தி மொழி இருக்கவில்லை, மாறாக சமஸ்கிருத மொழியே செல்வாக்கில் இருந்தது. தமிழ் நாட்டில் கூட தமிழ் மொழிக்கு முன் சமஸ்கிருதம் செல்வாக்கு செலுத்தியதாக வரலாறு கூறுகின்றது.

தற்காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய தமிழர்களின் பிள்ளைகள் தமிழ் பேசுவதற்கு சிரமப்படுகின்றனர். அவர்களின் பிள்ளைகளோ தமிழ் அறிவே இல்லாதவர்களாக ஆங்கில, பிரன்சு மொழிகளை பேசுபவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் மொழி கொஞ்சம் கூட தெரியாத சூழல் உருவாகிக்கொண்டிருக்கிறது. இருந்தும் அவர்கள் தம்மை தமிழர்கள் என அழைத்துக்கொள்கிறார்கள். ஆனால் எதிர் காலத்தில் அவர்கள் தாம் எந்த நாட்டு மொழி பேசுகிறார்களோ அந்த நாட்டு மொழிக்குரியவர்களாக மாறுவார்கள்.

இலங்கையை எடுத்துக்கொண்டால் தமிழை தாய் மொழியாக கொள்ளாவிட்டாலும் சில தாய் மொழி தமிழர்களை விட தமிழ் இலக்கியத்தில் சிறந்து விளங்குவோரை இங்கு காண முடியும். உதாரணமாக தமிழ் கவிஞர் மேமன் கவியை சொல்லலாம். இவரது தாய் மொழி தமிழ் அல்ல. ஆனாலும் இவர் தமிழ் பேசும் முஸ்லிமாக அதாவது தமிழராகவே தமிழ் மக்களால் பார்க்கப்படுகிறன்றார். அதே போல் தமிழுக்கு உதவி செய்யும் தமிழ் பிசகின்றி பேசும் புரவலர் ஹாசிம் உமரையும் சொல்லலாம். இதே போல் மலாய் மொழியை தாய் மொழியாகக்கொண்ட தமிழர்களையும் காணலாம்.

இந்திய சினிமா நடிகர் ரஜனி காந்த், எஸ் பி பாலசுப்ரமணியம் போன்றோர் தமிழை தாய் மொழிகளாக கொண்டவர்கள் அல்ல. ஆனாலும் அவர்களை தற்போது தமிழர்களாகவே தமிழ் மக்கள் பார்க்கிறார்கள்.

ஆக ஒரு மொழியை தானும் பேசி தனது பிள்ளைகளுடனும் அதே மொழியை சரளமாக பேசுபவர் அம்மொழி சார்ந்தவராகவே கொள்ளப்பட வேண்டும். இந்த வகையில் தமிழ் நாட்டில் உருது மொழியை தாய் மொழியாக கொண்ட முஸ்லிம்கள் தமிழ்நாட்டிலேயே பிறந்து தமிழ் மொழி பேசுபவர்களாக இருந்து அவர்களும் விரும்பினால் அவர்களை தமிழர்கள் என அழைப்பதில் தவறில்லை.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg