Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
தேர்தல் இடாப்புகள் பெறுவதில் சிரமம் – கல்வியற் கல்லூரி விண்ணப்பத்தாரிகள் முறைப்பாடு | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » தேர்தல் இடாப்புகள் பெறுவதில் சிரமம் – கல்வியற் கல்லூரி விண்ணப்பத்தாரிகள் முறைப்பாடு

தேர்தல் இடாப்புகள் பெறுவதில் சிரமம் – கல்வியற் கல்லூரி விண்ணப்பத்தாரிகள் முறைப்பாடு

complaint-1-எப்.முபாரக்

திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் தேர்தல் இடாப்புக்கள்  பெறுவதில் சிரமங்கள் ஏற்படுவதாக கல்வியியற் கல்லூரி விண்ணப்பத்தாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

தற்போது நாடு முழுவதிலும் உள்ள கல்வியியற் கல்லூரிகளில் புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்காக விண்ணப்பத்தாரிகளுக்கு நேர்முகப் பரீட்சைகள் நடைபெற்று வருகின்றன.

இந் நேர்முகப் பரீட்சைகளின்போது  தேர்தல் இடாப்பு கொண்டு வருமாறு விண்ணப்பத்தாரிகளிடம் கோரப்பட்டுள்ளது.

எனினும், திருகோணமலை உதவித் தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் பொறுப்பு வாய்ந்த உத்தியோகத்தர் ஒருவர் இல்லாத காரணத்தினால் உடனடியாக தேர்தல் இடாப்பு தர முடியாதென அங்கு கூறப்படுவதாகவும் விண்ணப்பத்தாரிகளினால் கூறப்படுகின்றது.

இதனால், இந்த நேர்முகப் பரீட்சைக்கு செல்லும் பல மாணவர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg