Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » தமிழக சிறைகளில் இருந்து 34 இலங்கை மீனவர்கள் விடுதலை

தமிழக சிறைகளில் இருந்து 34 இலங்கை மீனவர்கள் விடுதலை

fisher-menஎல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்திய சிறையில் அடைக்கப்படிருந்த 34 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் கடலோர காவல் படையினர் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.

மத்திய அரசு எடுத்த முயற்சியின் விளைவாக இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களும், இந்தியக் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களும் பரஸ்பரம் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.

அண்மையில் இலங்கையில் இருந்து தமிழக மீனவர்கள் 124 பேர் தமிழகம் திரும்பினர்.

கோடியக்கரை கடல் பகுதியில் பிடிபட்ட இலங்கை மீனவர் இருவரும் காரைக்காலில் இருந்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அடுத்த கட்டமாக எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இந்திய சிறைகளில் வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 34 பேர் இலங்கைக்கு நேற்று சனிக்கிழமை அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, சனிக்கிழமை காலை காரைக்கால் மார்க் துறைமுகத்தில் இருந்து “ராஜ்கமல்’ என்ற கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டு, சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இதனிடையே, இந்திய மீனவர்கள் இருவர் தங்களது படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று நள்ளிரவில் காரைக்கல் வந்தடைந்திருப்பார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியா இலங்கை நாடுகளுக்கு இடையிலான நட்புறவு அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg