Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
அரசாங்கத்தை வீழ்த்த திரைமறைவில் பேச்சுவார்த்தை | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » அரசாங்கத்தை வீழ்த்த திரைமறைவில் பேச்சுவார்த்தை

அரசாங்கத்தை வீழ்த்த திரைமறைவில் பேச்சுவார்த்தை

3d-small-people-session-behind-round-table-15317698வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிப்பதன் மூலம் தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்தி புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு திரைமறைவில் இரு சக்திகள் தற்பொழுது வெவ்வேறு கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதியின் நம்பிக்கையை வென்ற ஐக்கிய தேசியக் கட்சியினால் தெரிவு செய்யப்பட்ட பிரபல அமைச்சர்கள் இருவருடன் ஐக்கிய தேசியக் கட்சியின் இளம் தலைவர்கள் இணைந்து ஒரு கலந்துரையாடலிலும், ஐக்கிய தேசியக் கட்சியில் அதிருப்தியடைந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களாக கருதப்படக்கூடிய ஒரு குழுவினர் இணைந்து வேறு ஒரு கலந்துரையாடலிலும் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வரவு செலவுத் திட்டத்தை தோற்கடித்து புதிய அரசாங்கமொன்றை உருவாக்கு முயற்சியில் இரகசியக் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதை அறிந்துகொண்ட பிரதமர் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி இந்த அபாயத்திலிருந்து அரசாங்கத்தைப் பாதுகாக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள மைத்திரி எதிர்ப்பு குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

நெருப்பு இல்லாமல் புகை வராது என்பார்கள். எதிர்வரும் 2020 வரை இந்த அரசை எவராலும் அசைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பதும் அரசியல் மட்டத்தில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg