Close
Breaking News
Home » பிரதேச செய்திகள் » கிண்ணியாவில் கஞ்சா வைத்திருந்தவருக்கு சரீர பிணை

கிண்ணியாவில் கஞ்சா வைத்திருந்தவருக்கு சரீர பிணை

law-court-எப்.முபாரக்

1.8 கிராம் கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பேரில் கைது செய்யப்பட்ட கிண்ணியா பெரியாற்றமுனையைச் சேர்ந்த 60 வயதான சந்தேக நபரை, 1 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் செல்வதற்கு  திருகோணமலை நீதிமன்ற பதில் நீதவான் ஏ.எம். முஹீத் சனிக்கிழமை (21) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர், திருகோணமலை, சீனக்குடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து,  கிண்ணியாவிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற நபரை சோதனைக்குட்படுத்திய போது, அவரிடமிருந்து கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார்மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg