Close
Breaking News
Home » சிறப்பு கட்டுரைகள் » தமிழ் பேசும் சமூகங்களாலே நல்லாட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்….

தமிழ் பேசும் சமூகங்களாலே நல்லாட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும்….

BUP_DFT_DFT-1-22-எஸ்.அஷ்ரப்கான்
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குதல் மற்றும் புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்துதல் தொடர்பில் விசேடமாக ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக அமைச்சரவைப் பத்திரமும் சமர்ப்பிக்கப்படும் ஏற்பாடும் நடந்தேறி வருகிறது.

மிகவும் குறுகிய காலத்தில் பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் புதியதொரு தேர்தல் முறையினை அறிமுகப்படுத்துவதற்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்கி ஜனாதிபதியிடம் உள்ள அதிகாரங்களை பாராளுமன்றத்திடமும், சுயாதீன ஆணைக்குழுக்களிடமும் ஒப்படைப்பதே தனது எதிர்பார்ப்பாகுமென ஜனாதிபதி குறிப்பிட்டு வருகின்றார்.

தேர்தல் பிரகடனத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றி, புதியதொரு அரசியல் யாப்பினை உருவாக்குவது தொடர்பாகவும் தற்போது தேவையான கலந்துரையாடல்கள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் தொடர்பில் 40 ஆண்டுகளுக்கும் மேல் பேசப்பட்டு வந்த தேர்தல் ஆணைக்குழுவினை நிறுவுவதற்கு தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறே மனித உரிமைகள், அரச சேவைகள், நீதிமன்றங்கள், இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றுடன் தொடர்பான நிறுவனங்களை ஸ்தாபிப்பதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று பாராளுமன்றத்தில் உள்ள அனைவரதும் ஒத்துழைப்பில் 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அங்கீகரித்த ஜனாதிபதி ஆகஸ்ட் 17 ஆம் திகதி பொதுத் தேர்தலையும் நடாத்தி புதியதொரு அமைச்சரவையினை நியமித்து குருகிய காலமே நகர்ந்திருக்கின்றது.

அது மட்டுமன்றி மக்களின் வறுமையை இல்லாதொழித்தல், நாட்டில் சுதந்திரம்,சமாதானம், ஜனநாயகத்தை நிலைநாட்டுதல், இலவச சுகாதாரம், இலவசக் கல்வியை மேம்படுத்துதல், சர்வதேச உறவுகளை விருத்திசெய்தல்,விவசாயிகளினதும் சாதாரண பொது மக்களினதும் தலாவருமானத்தை அதிகரித்தல் உள்ளிட்ட நாட்டினதும் நாட்டு மக்களினதும் நன்மைகருதி தற்போது பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் தற்போதுள்ள சுதந்திரத்தை அனுபவிக்கும்போது சுயகட்டுப்பாட்டுடனும் பொறுப்புணர்ச்சியுடனும் செயற்பட்டு சுதந்திரத்தின் முக்கியத்துவத்தினைப் பாதுகாத்து தேசத்தின் முன்னேற்றத்திற்காக அரசு நடைமுறைப்படுத்தியுள்ள வேலைத்திட்டம் தொடர்பான புரிந்துணர்வுடனும் நட்புறவுடனும் ஒன்றிணைவது நம் அனைவரதும் பொறுப்பாகும். இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் பாடுபட வேண்டும். என்றாலும் 20வது திருத்தம் தொடர்பாக பல்வேறு சந்தேகங்களும் அச்சநிலையும் மக்கள் மத்தியில் உள்ளது என்பதனை மக்கள் கருத்துக்களிலிருந்து வெளிப்படையாக காண முடிகின்றது.

19 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை நிறைவேற்றுவதன் மூலம் இந்த நாட்டுக்கு சாபக்கேடாக காணப்படுகின்ற நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான பொன்னான சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாக பலர் குறிப்பிட்டாலும், அதனை நிறைவேற்றும் கட்டத்தில் தமிழ் பேசும் சிறுபான்மையின மக்களின் அபிலாசைகள், இருப்பு என்பன பாதிக்கப்படலாம். இதற்காக குரல் கொடுக்கவும் இதற்கான சிறந்த முன்மொழிவுகளை தேசியத்திற்கு வழங்கவும் சிறுபான்மையின தமிழ் பேசும் அரசியல் தலைமைத்துவங்கள் முன்வர வேண்டும்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நாட்டின் தேசிய பாதுகாப்பையும் சிறுபான்மையினத்தின் பாதுகாப்பையும் மையமாக வைத்து அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன கொண்டு வந்தார்.
இருப்பினும் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் அதனை முறையற்ற வகையில் கையாள ஆரம்பித்தனர். அதன் காரணமாக நிறைவேற்று அதிகார முறைமையானது இந்த நாட்டுக்கு சபக்கேடாக அமைந்தது. இவ்வாறான நிலையில் 1999ஆம் ஆண்டுக்குப் பின்னரான காலப்பகுதியில் இம்முறைமையை ஒழிக்க வேண்டும் என்பதில் ஐக்கிய தேசியக் கட்சி தீவிரமாக இருந்தது. இருப்பினும் இந்த நாட்டில் பல்வேறு எதிர்ப்புக்கள்ää அசாதாரண நிலைமைகளால் அது இயலாமல்போனது.

இந்நிலையில் நிறைவேற்று அதிகாரத்தை சுயநலத்திற்காக பயன்படுத்தி மக்கள் விரோதப்போக்குகளை கடைப்பிடித்ததுடன் நாட்டில் ஜனநாயகத்தை குழிதோண்டிப்புதைத்து சர்வாதிகார ஆட்சியை முன்னெடுக்கும் நிலையை கொண்டுவந்ததால் இன்று மக்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் பெரும் அதிருப்தி கண்டுள்ளனர். என்றாலும் அதனை ஒழிப்பதானது சிறுபான்மைகளுக்கு ஆபத்தானதே என்ற பலமான கருத்தும் அரசியல் அரங்கில் முன்வைக்கப்பட்டு வருகின்றது.
ஜே. ஆரால் 1978 ல் கொண்டு வரப்பட்ட நிறைவேற்று அதிகாரமுடைய அதிபர் முறைமைஇ அடிப்படையில் ஒரு சர்வாதிகார ஆட்சிக்கு வித்திட்டுள்ளதெனலாம். சர்வ அதிகாரம்இ நிறைவேற்று அதிகாரம்இ சொல்லளவில் சிறிதளவு மாறுபட்டு இருந்தாலும் பண்பு ரீதியாக ஒரே கருத்தியலைக் கொண்ட சொற்பதங்கள்தான்.
கொல்வின் ஆர் டி சில்வா தலைமையில் புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்ட போது, ஜனநாயகத்திற்கு அடிக்கப்பட்ட சாவு மணியின் முதல் ஒலி ஒலித்தது. ஒரு தேசிய இனத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட, கொடூரமான ஒடுக்கு முறையின் உச்சக்கட்டம்இ முள்ளி வாய்க்காலில் நிகழ்ந்தேறியது. இவ்வாறு நடந்தேறிய பல்வேறு அதிகார வெறியாட்டம் இந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையில்தான் நடந்தேறியிருக்கின்றது. இது மறுக்கவொண்ணா உண்மையாகும்.

இவ்வாறான நிலை எதிர்காலத்தில் இலங்கை வாழ் சிறுபான்மையினருக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து சிறுபான்மையினர் தமது காய்களை நகர்த்த முனைய வேண்டும். தமது நீண்ட கால அரசியல் அதிகார இருப்பிற்காக அரசியலமைப்புச் சட்டத்தினை சாதகமாக மாற்றியமைக்கும் நகர்வுகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட முடியாது. ஏனெனில் ஜனாதிபதி புதிதாக பதவியேற்றபோது நான் மீண்டும் ஜனாதிபதி பதவிக்கு வர எத்தணிக்க மாட்டேன். பதவியாசை என்னிடம் கிடையாது என்ற கருத்துப்பட பேசியிருந்தார். என்றாலும் இந்த ஆட்சி பல கட்சிகளின் ஆட்சி. எப்போது குட்டை குழம்பும்இ குடும்பத்தில் பிரச்சினை வரும்இ எப்போது இந்த ஆட்சி முடிவுக்கு வரும் என்று திட்டவட்டமாக குறிப்பிட முடியாத நிலையில் ஏற்படுத்தப்பட இருக்கும் தேர்தல் முறை மாற்றம் தொடர்பான யாப்பு திருத்த யோசனைகள்இ நகர்வுகள் மீண்டும் பெரும்பான்மைக்கு பால் வார்க்கும் பெரும் திட்டத்தின் ஒரு நகர்வு என்றே பலராலும் கொள்ளப்படுகின்றது.
இராமன் ஆண்டாலும், இராவணண் ஆண்டாலும் சிறுபான்மைகள் தமது தேவைகளை, உரிமைகளை, இருப்புக்களை எப்போதும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்பதை பொரும்பான்மைகளும் அறியாமல் இருக்க நியாயமில்லை. இந்நிலையில் யார் கூடியும் தமது இலக்கை அடைந்துவிட்டு எதிர்காலத்தில் அதிகாரமிக்க பௌத்த நாடாக திட்டமிட்ட அடிப்படையில் உருவாக்குதல் என்பது இந்த மாற்று யோசனைகளின் பின்புலத்தில் உள்ளது.

எனவேதான் சிறுபான்மைகளையும் அரவனைத்து அவர்களின் விருப்பங்களையும் செயற்படுத்துகின்ற நிலையான ஆட்சியை தற்போதைய ஆட்சியாளர்கள் கொண்டுவர வேண்டும். இல்லையேல் எவ்வாறு நல்லாட்சி தத்துவத்திற்கு வெளிப்படையாக தமிழ் பேசும் சமூகங்கள் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு வழங்கினார்களோ அவர்களாலேயே விரைவில் இவ்வாட்சிக்கு சாவுமணி அடிக்கப்படும் நிலை ஏற்படலாம். இதனை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயற்படுவார்களா ? (நன்றி- சுடர் ஒளி)

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg