Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமனம்

கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமனம்

mujeebur rahmanகொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழு இணைந்த தலைவராக முஜிபுர் ரஹ்மான் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தபால் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.
பாராளுமன்ற தவிசாளர் குழு உறுப்பினரும் மத்திய கொழும்பு தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான முஜிபுர் ரஹ்மான் பிரதமர் ரணில் விக்ரம சிங்கவின் பரிந்துரையின்பேரில் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1994 ஆம் ஆண்டு முதல் முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் மூலம் நேரடி அரசியலில் ஈடுபட்டு வந்த முஜிபுர் ரஹ்மான் 2007 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார். 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற மேல் மாகாண சபை தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிட்ட அவர் 24 ஆயிரம் வாக்குகளை பெற்று மாகாண சபை உறுப்பினராக தெரிவானார். எதிர்க் கட்சியில் இருந்துகொண்டு முஸ்லிம் சமூகத்திற்காக தொடர்ச்சியாக குரலெழுப்பி வந்தார். இந்நிலையில், 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று மீண்டும் மாகாண சபைக்கு தெரிவாகினார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் 83 804 வாக்குகளை பெற்று கொழும்பு மாவட்டம் சார்பாக பாராளுமன்றத்திற்கு தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg