Parse error: syntax error, unexpected '<' in /home/onlinece/public_html/wp-content/themes/OnlineCeylon/functions.php(33) : eval()'d code on line 1
ஜனவரி மாதம் முக்கிய அமைச்சர்கள் சிலரை நீக்குவதாக தகவல் | OnlineCeylon
Close
Breaking News
Home » பிரதான செய்திகள் » ஜனவரி மாதம் முக்கிய அமைச்சர்கள் சிலரை நீக்குவதாக தகவல்

ஜனவரி மாதம் முக்கிய அமைச்சர்கள் சிலரை நீக்குவதாக தகவல்

cabinetதற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு பதவி பெற்றுகொண்டுள்ள சிலருக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் அவர்களின் பதவி இழக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜனவரி மாதம் இடம்பெறவுள்ள அமைச்சரவை மறுசீரமைப்பில், திறனற்ற நபர்கள் தொடர்பில் இதுவரையில் அறிந்துகொள்ளப்பட்டுள்ள, அமைச்சர்களிடமிருந்து அமைச்சு பதவிகளை மீளவும் பெற்றுகொள்வதற்கு அரசாங்கத்தின் பிரதானிகள் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய பெரிய அளவிலான குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பிரதி அமைச்சர் ஒருவர் மற்றும் மேலும் பல முக்கியஸ்தர்களின் அமைச்சு பதவிகளும் இழக்கும் நிலைமை இதுவரையில் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பொருளாதாரத்திற்கு தொடர்புடைய பல அமைச்சுகளின் அமைச்சர் பதவிகள் இதன் கீழ் மறுசீரமைக்கப்படவுள்ளது.

அரசாங்கத்தின் பிரதான நிறுவனத்தின் முக்கியஸ்தர் ஒருவர் மறுசீரமைப்புடன் பதவியில் இருந்து நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறித்த தகவல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg