Close
Breaking News
Home » பிரதேச செய்திகள் » கந்தளாயில் வெளிநாட்டு சாரய போத்தல்களுடன் இருவர் கைது

கந்தளாயில் வெளிநாட்டு சாரய போத்தல்களுடன் இருவர் கைது

arrested--எப்.முபாரக்     

சட்டவிரோதமான முறையில் முச்சக்கரவண்டியொன்றில் அனுமதிப்பத்திரமின்றி வெளிநாட்டு சாராய போத்தல்கள் கொண்டு சென்ற இருவரை ஜயந்திபுர பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை (22) மாலையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.             

கந்தளாயில் இருந்து சேருநுவரவிற்கு முச்சக்கரவண்டியில் அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற போதே போக்குவரத்து கடமைகளில் நின்ற பொலிஸாரினால் குறித்த முச்சக்கர வண்டியை நிறுத்தி மேற்கொண்ட போதே வெளிநாட்டு சாரயப் போத்தல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.               சந்தேக நபர்களினால் பயன்படுத்தப் பட்ட முச்சக்கரவண்டியும், சந்தேக நபர்கள் இருவரையும் தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டுவருவதாகவும் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த செய்தி / ஆக்கத்தை நண்பர்களுக்கு Share செய்யுங்கள்
 photo NewFace1_zpsofrogqp4.jpg